கவனிக்க வேண்டிய சில முக்கிய பங்குகள்.. லாபம் கொடுக்குமா? நஷ்டமா? விவரம் இதோ..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: கவனிக்க வேண்டிய முக்கிய 10 பங்குகள். அந்த வகையில் நாம் இன்று பார்க்க விருக்கும் முதல் நிறுவனம் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா.

 

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்திற்கு சொந்தமான சாங்யோங் மோட்டார் நிறுவனம் திவால் நிலைக்கு சியோல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இந்த நிறுவனம் முதலீடுகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால் அவையனைத்தும் தோல்வியுற்ற நிலையில், இப்போது மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஆக இதன் எதிரொலியானது எம்&எம் நிறுவனத்தில் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு எம்&எம் நிறுவனம் விரைவில் வாகன விலையை உயர்த்தப்போவதாக தெரிவித்துள்ளது கவனிக்க வேண்டிய விஷயம்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வாகன தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், இதன் வாகன விலையை ஜனவரி 1 முதல் அதிகரிக்க உள்ளதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக இந்த நிறுவனத்திற்கு வருமானம் அதிகம் என்றாலும், மறுபுறம் விற்பனை குறித்தான கேள்வியும் எழுந்துள்ளது.

விமான பங்குகள்

விமான பங்குகள்

கவனிக்க வேண்டிய பங்குகளில் விமான பங்குகளும் உண்டு. ஏனெனில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக விமான சேவைகள் பல மாதங்களாக முடங்கிய நிலையில், தற்போது தான் இயங்க தொடங்கியது. இந்த நிலையில் தற்போது டிசம்பர் 31 வரை இங்கிலாந்து செல்லும் வாகனங்கள் மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதோடு இங்கிலாந்தில் வரும் விமானங்களும் தடை செய்யப்பட்டுள்ளன.

தொலைத் தொடர்பு பங்குகள்
 

தொலைத் தொடர்பு பங்குகள்

அடுத்ததாக நாம் கவனிக்க வேண்டிய முக்கிய பங்குகள் தொலைத் தொடர்பு துறை பங்குகளாகும். ஏனெனில் தற்போது தொலைத் தொடர்பு துறையை சேர்ந்த பங்குகள் பெருத்த கடன் பிரச்சனையில் உள்ளன. சமீபத்தில் தான் இந்த நிறுவனங்கள் கட்டண உயர்வை அமல்படுத்திய நிலையில், இது எந்தளவுக்கு கை கொடுக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளன. எனினும் இந்த நிறுவனங்களின் கடன் அளவு 2022ல் 4.7 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்று மதிப்பீட்டு நிறுவனமான இக்ரா கணித்துள்ளது.

பியூச்சர் குழும பங்குகள்

பியூச்சர் குழும பங்குகள்

ப்யூச்சர் குழும நிறுவனத்தின் பங்குகளை, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திடம் விற்க முற்பட்ட நிலையில், ப்யூச்சர் குழுமத்தில் ஏற்கனவே முதலீடு செய்ய அமேசான் நிறுவனம் நீதிமன்றத்தினை நாடியது. இந்த நிலையில் இந்த பிரச்சனை தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. இதனால் பியூச்சர் குழும பங்குகள் ரிலையன்ஸ் வசம் செல்லுமா? அல்லது அமேசான் வசம் செல்லுமா என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக உள்ளது.

கவனிக்க வேண்டிய பொதுத்துறை நிறுவனங்கள்

கவனிக்க வேண்டிய பொதுத்துறை நிறுவனங்கள்

மத்திய அரசு தற்போது சில பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய முயற்சித்து வருகின்றது. இதன் மூலம் பெரும் நிதியினை திரட்டி உள்கட்டமைப்புகளில் முதலீடு செய்ய முயற்சித்து வருகின்றது. இதன் காரணமாக அரசு நிறுவனங்களின் பங்கு விலைகள் கவனிக்க வேண்டியவையாக உள்ளன.

வங்கிகள் & நிதி நிறுவனங்கள்

வங்கிகள் & நிதி நிறுவனங்கள்

நடப்பு நிதியாண்டில் ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, யெஸ் வங்கி, பிஎன்பி மற்றும் ஹெச்எஸ்பிசி உள்ளிட்ட வங்கிகள் முதல் 10 வங்கிகளாக உருவடுத்துள்ளன. அதே நேரம் போன் பே, கூகுள் பே, போன்பே உள்ளிட்ட பே நிறுவனங்களும் வளர்ச்சி கண்டு வருகின்றன. எனினும் இந்த பேமென்ட்களுக்கு இனி கட்டணம் விதிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளதும்,, வங்கி பங்குகளுக்கு நல்ல விஷயமே.

எல் & டி பைனான்ஸ் ஹோல்டிங்ஸ்

எல் & டி பைனான்ஸ் ஹோல்டிங்ஸ்

எல் & டி பைனான்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான எல் & டி கேபிடல் மார்கெட்ஸ் லிமிடெட் கலைக்கப்பட்டது. இதனால் கவனிக்க வேண்டிய பங்குகளில் இதுவும் ஒன்றாக உள்ளது. இதன் எதிரொலி எல் & டி பைனான்ஸ் ஹோல்டிங்ஸில் இருக்கலாம்.

கோல் இந்தியாவும் அடக்கம்

கோல் இந்தியாவும் அடக்கம்

இந்திய அரசுக்கு சொந்தமான கோல் இந்தியா, முதல் எட்டு மாதங்களில் 25.78 மில்லியன் டன் நிலக்கரியினை ஸ்பாட் இ ஏலத்தின் மூலம் ஒதுக்கியது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 59.4% அதிகமாகும். இதன் காரணமாக இந்த பங்கின் விலை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேக்ஸ் பைனான்ஷியல் சர்வீசஸ்

மேக்ஸ் பைனான்ஷியல் சர்வீசஸ்

மேக்ஸ் குழுமத்தின் பைனான்ஷியல் நிறுவனம் தான் மேக்ஸ் பைனான்ஷியல் சர்வீசஸ். இந்த நிறுவனத்தில் அவெண்டஸ் நிறுவனம் என் எஸ் இ-யில் 16,73,026 லட்சம் பங்குகளை 653 என்ற விலையில் வாங்கியது. இதே மனிலைன் போர்ட்போலியோ முதலீட்டாளர் 37.40 லட்சம் பங்குகளை 654.44 ரூபாய் என்ற நிலையில் விற்றுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Stocks to watch: Tata motors, M&M, Telecom stocks, future retail

Market updates... Stocks to watch: Tata motors, M&M, Telecom stocks, future retail
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X