மக்கள் போராட்டத்தால் 7 பில்லியன் டாலர் கோவிந்தா.. மார்க் ஜூக்கர்பெர்க் அதிர்ச்சி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் மிகப்பெரிய சமுக வலைத்தளமாக விளங்கும் பேஸ்புக் தற்போது மிகப்பெரிய மக்கள் போராட்டத்தை எதிர்கொண்டு வருகிறது. இந்தப் போராட்டத்தின் விளைவு பல கார்ப்ரேட் நிறுவனங்கள் வெளியேற்றம், பல பில்லியன் டாலர் வர்த்தகம் சரிவு, மார்க் ஜூக்கர்பெர்க் சொத்து மதிப்பு சில நாட்களில் 7 பில்லியன் டாலர் மாயமானது.

அப்படி என்ன ஆச்சு..?

பேஸ்புக்கிற்கு 'நோ' சொன்ன பெரும் தலைகள்.. மக்கள் போராட்டத்தின் எதிரொலி..!பேஸ்புக்கிற்கு 'நோ' சொன்ன பெரும் தலைகள்.. மக்கள் போராட்டத்தின் எதிரொலி..!

டொனால்டு டிரம்ப்

டொனால்டு டிரம்ப்

அமெரிக்காவில் போலீஸ் அதிகாரிகளின் தாக்குதலால் ஜார்ஜ் பிளாய்டு இறந்ததும், அவருக்காக ஒட்டுமொத்த அமெரிக்க மக்களும் போலீஸ் அதிகாரிகளை எதிர்த்துச் சாலையில் போராட்டம் நடத்தினர். இதனால் ஒட்டுமொத்த அமெரிக்காவும் ஸ்தம்பித்துப் போனது.

இக்காலகட்டத்தில் அமெரிக்க அதிபர் டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் மே 29ஆம் தேதி போராட்டக்காரர்களைக் கொள்ளைக்காரர்கள் (Thugs) என்றும், போராட்டத்தைக் கட்டுப்படுத்த ராணுவம் தயாராக உள்ளது என்றும், திருட்டு ஆரம்பித்தால், சுட ஆரம்பிக்கப்படும் எனப் பதிவிட்டு இருந்தார்.

டிவிட்டர் மற்றும் பேஸ்புக்

டிவிட்டர் மற்றும் பேஸ்புக்

இந்தப் பதிவு வன்முறையை ஊக்குவிக்கும் விதமாக இருக்கிறது என்றும் தனது நிறுவன விதிகளை மீறும் விதமாக இருப்பதாகத் தெரிவித்து டிவிட்டர் அதிபர் பதிவு என்றும் பாராமல் மக்களின் நலன் மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் இப்பதிவை மக்களின் நேரடி பார்வையில் இருந்து மறைத்துவிட்டது.

ஆனால் பேஸ்புக் இந்தப் பதிவுக்கு எதிராக எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மக்கள் போராட்டம்

மக்கள் போராட்டம்

பேஸ்புக்-இன் மெத்தனத்தை எதிர்த்து சமுக வலைத்தளத்தில் மக்கள் #StopHateforProfit என்ற போராட்டத்தை ஜூன் 19ஆம் தேதி கையில் எடுத்தனர். இந்தப் போராட்டம் மிகப்பெரிய அளவில் வெடித்துள்ளது.

கார்ப்பரேட் நிறுவனங்கள்

கார்ப்பரேட் நிறுவனங்கள்

மக்களின் இந்த #StopHateforProfit போராட்டத்தில் நியாயம் இருப்பதைப் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் உணர்ந்துள்ளது. இதன் எதிரொலியாகப் பேஸ்புக்-ல் விளம்பரம் செய்யும் பல முன்னணி நிறுவனங்கள் விளம்பர வர்த்தகத்தை முழுமையாக நிறுத்தியுள்ளது.

முக்கிய நிறுவனங்கள்

முக்கிய நிறுவனங்கள்

இனவாதத்திற்கு இந்த உலகில் எங்கேயும் இடம் கொடுக்கக் கூடாது என்று கோகோ கோலா தனது விளம்பர வர்த்தகத்தை 30 நாட்கள் நிறுத்தியும், தனது விளம்பர திட்டத்தையும், பேஸ்புக்-ன் விதிகளை மறு ஆய்வு செய்யவும் முடிவு செய்துள்ளது.

கோகோ கோலா உடன் யூனிலீவர், தி நாத்ர் பேஸ், வெரிசோன், Hershey Co போன்ற பல முன்னணி நிறுவனங்கள் பேஸ்புக் உடனான விளம்பர வர்த்தகத்தை நிறுத்தியுள்ளது.

மார்க் சொத்து மதிப்பு

மார்க் சொத்து மதிப்பு

இதன் எதிரொலியாக ஜூன் 19இல் இருந்து பேஸ்புக் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 8 சதவீதத்திற்கும் அதிகமான அளவிற்குச் சரிந்துள்ளது. இதன் வாயிலாகப் பேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் சொத்து மதிப்பு 7.21 பில்லியன் டாலர் சரிந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

#StopHateforProfit campaign against Facebook made a big hole to Mark Zuckerberg fortune

#StopHateforProfit campaign against Facebook made a big hole to Mark Zuckerberg fortune
Story first published: Sunday, June 28, 2020, 18:28 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X