கொரோனாவால் ஊழியர் மரணம்.. 2 வருட சம்பளத்தை கொடுக்கும் பஜாஜ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் கட்ட தாக்கமானது மிக மோசமாக பரவி வருகின்றது. இதனால் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தினசரி பல ஆயிரம் பேர் பலியாகி வருகின்றனர்.

 

இதற்கிடையில் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டும் வருகின்றனர். பல மாநிலங்களில் முழு லாக்டவுனும் அமல்படுத்தப்பட்டுள்ளன.

ஒரு புறம் வேலையிழந்து தவித்து வரும் மக்கள், மறுபுறம் கொரோனாவால் குடும்ப உறுப்பினர்களை இழந்து வாடும் மக்கள். இப்படி பல கஷ்டங்களுக்கும் மத்தியில், பல ஊழியர்கள் பணிக்கு செல்ல வேண்டிய கட்டாயம்.

தொற்றுக்கு ஆளாகும் ஊழியர்கள்

தொற்றுக்கு ஆளாகும் ஊழியர்கள்

குறிப்பாக மருத்துவ துறையினர், மருந்து உற்பத்தியாளர்கள், மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி செய்பவர்கள் என பல அத்தியாவசிய தேவைகளுக்காகவும், நெருக்கடியான நேரத்தில் பணிக்கு செல்கின்றனர். எவ்வளவு தான் பாதுகாப்பு அம்சங்கள், சமூக இடைவெளி, முகக்கவசம் என அணிந்து சென்றாலும், ஏதேனும் ஒரு விதத்தில் சிலர் தொற்று ஆளாகி வருகின்றனர்.

பல மீட்க முடியா இழப்புகள்

பல மீட்க முடியா இழப்புகள்

துரதிஷ்டவசமாக சில ஊழியர்களையும், நண்பர்களையும், அன்பானவர்கள், குடும்ப உறுப்பினர்களையும் இழக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அப்படி இழக்கும்போது அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூட சொல்ல முடியாத நிலை தான் இன்று பலருக்கும். அப்படியிருக்கும் நிலையில் ஊழியர்களின் இழப்பு குடும்பத்தினருக்கு மட்டும் அல்ல, அது அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களுக்கும் தான்.

குடும்பத்தினருக்கு உதவி
 

குடும்பத்தினருக்கு உதவி

ஏனெனில் திறன் வாய்ந்த ஊழியர்கள் என்பவர்கள் ஒவ்வொருவரும் நிறுவனத்தின் அஸ்திவாரத்திற்கு சமம். அதனை உணர்ந்து ஊழியர்களை இழந்துள்ள நிறுவனங்கள் சில, அவர்களது குடும்பத்தினருக்கு அவர்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றன. அந்த வகையில் சன் பார்மா நிறுவனம், கொரோனாவினால் இறந்த ஊழியர்களுக்கு சில சலுகைகளை அறிவித்துள்ளது.

சன் பார்மாவின் மிகப்பெரிய நிவாரணம்

சன் பார்மாவின் மிகப்பெரிய நிவாரணம்

இந்தியாவின் முன்னணி மருந்து உற்பத்தியாளரான சன் பார்மா நிறுவனம், கொரோனாவினால் இறந்த அதன் ஊழியர்களுக்கு 2 வருடத்திற்கு சமமான சம்பளத்தினை, ஊழியரின் குடும்பத்தினருக்கு கொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த தொகையானது ஊழியர்களின் சம்பளத்தினை பொறுத்து குறைந்தபட்சம் 25 லட்சம் முதல் 1.2 கோடி ரூபாய் வரையில் இருக்கலாம் என அறிவித்துள்ளது.

குழந்தைகளுக்கு சலுகை

குழந்தைகளுக்கு சலுகை

இறந்த ஊழியர்களின் குழந்தைகளின் பள்ளி/கல்லூரி கட்டணம் வரை நிறுவனமே செலுத்தும் என நிறுவனம் உறுதியளித்துள்ளது. இது ஏப்ரல் 1, 2020 முதல் இந்தியாவை சேர்ந்த முழு நேர ஊழியர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தும் எனவும் அதிரடியான அறிவிப்பினை அறிவித்துள்ளது. சன் பார்மா தற்போது 27,000 முழு நேர பணியாளர்களைக் கொண்டுள்ளது.

பஜாஜ் ஆட்டோவின் சலுகை

பஜாஜ் ஆட்டோவின் சலுகை

இதே போல முன்னணி வாகன உற்பத்தியாளரான பஜாஜ் ஆட்டோ நிறுவனமும் சில சலுகைகளை அறிவித்துள்ளது. பஜாஜ் ஆட்டோவும் கொரோனாவினால் இறந்த ஊழியர்களின் குடும்பத்தினருக்கு, இரண்டு ஆண்டு சம்பளம் மற்றும் குழந்தைகளின் கல்வி செலவினையும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது.

பஜாஜ் ஆட்டோ எவ்வளவு அறிவிப்பு?

பஜாஜ் ஆட்டோ எவ்வளவு அறிவிப்பு?

நிறுவனம் வழங்கிய மருத்துவ காப்பீட்டில், ஊழியர்களை சார்ந்து இருக்கும் குடும்பத்தினருக்கு ஐந்து ஆண்டுகள் நீட்டிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இது குறித்த லிங்க்டு இன் அறிக்கையில் பஜாஜ் ஆட்டோ மாதந்தோறும் 2 லட்சம் ரூபாய் வரை, 24 மாதங்களுக்கு வழங்கும்.

கல்விக்கு உதவி

கல்விக்கு உதவி

அதோடு கல்வி உதவித் தொகையாக 12ம் வகுப்பு வரை ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாயும், பட்டப்படிப்புக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. எனினும் இது ஒரு ஊழியரக்ளின் குடும்பத்தில் உள்ள இரண்டு குழந்தைகளுக்கு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

எந்த ஊழியர்களுக்கு ?

எந்த ஊழியர்களுக்கு ?

பஜாஜ் ஆட்டோவின் இந்த சலுகையானது ஏப்ரல் 1, 2020 முதல் உள்ள அனைத்து நிரந்தர ஊழியர்களுக்கும் பொருந்தும் என அறிவித்துள்ளது. அதோடு ஊழியர்களுக்கு தொடர்ந்து நாங்கள் அனைத்து வகையான உதவிகளையும் செய்வோம். கொரோனா கேர் வசதிகள், டெஸ்டிங் வசதிகள், ஹாஸ்பிட்டலைசேஷன் உதவி, தடுப்பூசி கேம்ப் என செய்வோம் என பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது. பஜாஜ் ஆட்டோவின் இந்த சலுகையானது ஏப்ரல் 1, 2020 முதல் உள்ள அனைத்து நிரந்தர ஊழியர்களுக்கும் பொருந்தும் என அறிவித்துள்ளது. அதோடு ஊழியர்களுக்கு தொடர்ந்து நாங்கள் அனைத்து வகையான உதவிகளையும் செய்வோம். கொரோனா கேர் வசதிகள், டெஸ்டிங் வசதிகள், ஹாஸ்பிட்டலைசேஷன் உதவி, தடுப்பூசி கேம்ப் என செய்வோம் என பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது.

போரோசில்-ன் சூப்பர் அறிவிப்பு

போரோசில்-ன் சூப்பர் அறிவிப்பு

இதே போல இந்தியாவினை சேர்ந்த மற்றொரு நிறுவனமான போரோசில், மாத தொடக்கத்தில் இது போன்ற சலுகையினை ஊழியர்களுக்கு அறிவித்தது. அதன் ஊழியர்களுக்கு இது போன்ற திட்டத்தினை அறிவித்தது. கொரோனாவினால் இறந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சம்பளம் கிடைக்கும். குழந்தைகளின் கல்வி கட்டணத்தினையும் பட்டம் பெறும் வரை செலுத்துவதாகவும் அறிவித்திருந்தது.

வெல்ஸ்பன் இந்தியா

வெல்ஸ்பன் இந்தியா

வெல்ஸ்பன் இந்தியா நிறுவனமும் கொரோனாவினால் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்தினருக்கு, இரண்டு வருடங்களுக்கான மாத சம்பளத்தில் 50% செலுத்துவதாக அறிவித்துள்ளது. அதோடு குடும்பத்தினரின் 5 லட்சம் வரையிலான மெடிக்கல் இன்சூரன்ஸையும் 10 ஆண்டுகளுக்கு செலுத்தும் என தெரிவித்துள்ளது.

பொருத்தமான வேலை உண்டு

பொருத்தமான வேலை உண்டு

அதோடு குழந்தைகளின் பட்டப்படிப்பு வரையில் கல்விக் கட்டணத்தினையும் செலுத்தும் என தெரிவித்துள்ளது. அது மட்டும் அல்ல, தேவையான தகுதி, திறமைக்கு ஏற்பட்ட, பொருத்தமான வேலைக்கு பரீசிலிப்பதாகவும் இந்த நிறுவனம் உறுதியளித்துள்ளது.

முத்தூட் பைனான்ஸ் அறிவிப்பு

முத்தூட் பைனான்ஸ் அறிவிப்பு

முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் பணி செய்தவர்கள், கொரோனாவினால் இறந்து விட்டால் அடுத்த 24 மாதங்களுக்கான சம்பளம் அவரது மனைவிக்கோ அல்லது குடும்பத்தாரிடமோ கொடுக்கப்படும். ஒரு வேளை ஊழியர்கள் அதற்கும் குறைவாக பணி செய்திருந்தால் 1 வருடத்திற்கு சம்பளம் கொடுக்கப்படும் என அறிவித்துள்ளது. இதே போல ஒப்பந்த ஊழியர்களுக்கு 12 மாத சம்பளத்தினை அறிவித்துள்ளது.

ஹெச்சிஎல் டெக்னாலஜி

ஹெச்சிஎல் டெக்னாலஜி

ஐடி துறையில் முன்னணி நிறுவனமான ஹெச்சிஎல் டெக்னாலஜி அதன் ஊழியர்களுக்கு 30 லட்சம் ரூபாய் வரையிலான இன்சூரன்ஸ் சலுகையினை அறிவித்துள்ளது. அதோபோல வருட சம்பளத்தினையும் இறந்த ஊழியர்களின் குடும்பத்திற்கு வழங்கும் என அறிவித்துள்ளது. மேலும் EDLI மூலம் 7 லட்சம் வரையிலான டெபாசிட் இன்சூரன்ஸ் தொகையினையும் அறிவித்துள்ளது.

டிசிஎஸ்-ன் நிவாரண அறிவிப்பு

டிசிஎஸ்-ன் நிவாரண அறிவிப்பு

இதே டாடா கன்சல்டன்ஸி நிறுவனம் துரதிஷ்டவசமாக கொரோனாவினால் இறந்த ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்கள், 23 லட்சம் வரையிலான காப்பீட்டினை பெற தகுதியுடையவர்கள் அல்லது இறந்த ஊழியரின் வருடாந்திர வருமானத்தினை விட ஆறு மடங்குக்கு சமமான தொகையில் எது அதிகமோ அதனை ஊழியர்கள் பெறுவார்கள் என அறிவித்துள்ளது.

ஐசிஐசிஐ லோம்பார்ட்

ஐசிஐசிஐ லோம்பார்ட்

ஐசிஐசிஐ லோம்பார்ட் நிறுவனம் முன்னணி தனியார் இன்சூரன்ஸ் நிறுவனமாகும். இந்த நிறுவனம் கொரோனாவினால் இறந்த ஊழியர்களின் துணைக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது. இது தவிர கிராஜ்விட்டி, வருங்கால வைப்பு நிதி சலுகைகளையும் வழங்குவதாக அறிவித்துள்ளது.

கே ரஹேஜா கார்ப்

கே ரஹேஜா கார்ப்

ரியல் எஸ்டேட் நிறுவனமான கே ரஹேஜா கார்ப், அதன் ஊழியர்கள் கொரோனாவினால் இறந்தால், ஒரு வருடத்திற்கு சமமான மொத்த சம்பளத்தினையும் வழங்குவதாக அறிவித்துள்ளது. இப்படி ஒரு நெருக்கடியான நிலையிலும், ஒவ்வொரு நிறுவனங்களும் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஊழியர்களின் குடும்பத்தினருக்கு உதவ முன் வந்திருப்பது பாரட்டதக்க விஷயங்களில் ஒன்று. ஆக மேற்கண்ட நிறுவனங்களுக்கு குடும்பத்தினரோடு சேர்ந்த நாமும் ஒரு சல்யூட் வைப்போமே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sun pharma, bajaj auto and many other companies are offer financial assistance to families of employees who died in covid-19

Sun pharma, bajaj auto and many other companies are offer financial assistance to families of employees who died in covid-19
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X