7 ஆண்டுகளுக்கு பின் 4 இலக்கங்களில் சன் ஃபார்மா.. இன்னும் உயரும் என தகவல்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த சில மாதங்களாகவே இந்திய பங்குச்சந்தையில் ஃபார்மா நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துகொண்டே வருகிறது.

ஃபார்மா பங்குகளை வாங்கலாம் என நிதி ஆலோசகர்கள் ஆலோசனை கூறி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சிப்லா உள்பட ஒரு சில ஃபார்மா பங்குகள் விலை உயர்ந்துள்ள நிலையில் 7 ஆண்டுகளுக்குப் பின்னர் சன் ஃபார்மா பங்குகள் 4 இலக்கத்திற்கு வந்துள்ளது. இதனையடுத்து இந்த பங்கின் விலை இன்னும் விலை உயர வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பிரதமரின் சொந்த மாநிலத்தில் கைகோர்க்கும் டாடா + ஏர்பஸ்.. ரூ.22,000 கோடி மெகா திட்டம்..எதற்காக தெரியுமா! பிரதமரின் சொந்த மாநிலத்தில் கைகோர்க்கும் டாடா + ஏர்பஸ்.. ரூ.22,000 கோடி மெகா திட்டம்..எதற்காக தெரியுமா!

சன் பார்மா

சன் பார்மா

கடைசியாக கடந்த 2015 ஆம் ஆண்டு பங்குசந்தையில் சன் ஃபார்மா பங்குகள் 4 இலக்கத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்றைய பங்குச் சந்தையில் சன் ஃபார்மா விலை 3 சதவீதம் உயர்ந்து ரூபாய் 1013 என்ற அளவில் வர்த்தகம் ஆகி உள்ளது.இதனை அடுத்து ஏழு ஆண்டுகளுக்கு பிறகு நான்கு இலக்கத்தை மீண்டும் சன் ஃபார்மா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நிதிநிலை அறிக்கை

நிதிநிலை அறிக்கை

இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டின் நிதிநிலை அறிக்கையை சன் ஃபார்மா நவம்பர் 1ஆம் தேதி வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிதிநிலை அறிக்கை வெளியானவுடன் இந்த பங்கின் விலை இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

சிறப்பான வணிகம்

சிறப்பான வணிகம்

உலக அளவில் நிறுவனங்களின் பங்குகளை ஆய்வு செய்து வரும் நிறுவனம் ஒன்று சன் ஃபார்மா குறித்து கூறிய போது சிறப்பான வணிகத்தின் தொடர்ச்சியாக சன் ஃபார்மா தொடர்ந்த் லாபத்தில் உள்ளது என்றும் அதன் செயல்பாடு சிறப்பாக இருப்பதால் இந்த நிறுவனத்தின் பங்கு விலை இன்னும் அதிகமாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது.

சன் ஃபார்மா எதிர்காலம்

சன் ஃபார்மா எதிர்காலம்

ஃபார்மா துறையில் சன் பார்மா குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கடந்த சில மாதங்களாக பெற்று வருகிறது என்றும் இந்நிறுவனத்தின் பங்குகள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தைக் கொடுக்கும் என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கொரோனா காலம்

கொரோனா காலம்

கொரோனா பாதிப்பு காலத்தில் இருந்து சன் ஃபார்மா மிகச்சிறந்த லாபத்தை பெற்றது என்றும் அதன் தொடர்ச்சியாக அந்நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது.

டிஜிட்டல் விற்பனை

டிஜிட்டல் விற்பனை

கடந்த இரண்டு ஆண்டுகளில் சன் பார்மா நிறுவனம் டிஜிட்டல் விற்பனை முயற்சியில் ஈடுபட்டு நல்ல பலன்களைப் பெற்றுத் தருகிறது என்றும் இந்த வர்த்தகத்தில் உள்ள சவால்களை சிறப்பாக சமாளித்து வருகிறது என்றும் கூறப்படுகிறது.

சவால்கள்

சவால்கள்

 

பார்மா நிறுவனங்களைப் பொறுத்தவரை சன் பார்மா, சிப்லா பர்மா ஆகிய பங்குகளே எங்களது சிறந்த தேர்வு என கோடாக் செக்யூரிட்டீஸ் கூறியுள்ளது. ரூபாய் மதிப்பு சரிவு, மூலப்பொருட்களின் விலை வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலை மற்றும் போக்குவரத்து செலவு ஆகியவை காரணமாக ஃபார்மா துறை ஒருசில சவால்களை சந்தித்தாலும் அதிக விற்பனை காரணமாக நல்ல லாபத்தையும் பெற்று வருகிறது. இப்போது சன் ஃபார்மா பங்குகளை வாங்கினால் கூட எதிர்காலத்தில் நல்ல லாபத்தை அடையலாம் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sun Pharma gains 2% and reclaim four-digit mark after 7 long years

In the past few months, shares of pharma companies have been rising in the Indian stock market. It is also known that financial advisors are advising to buy pharmaceuticals.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X