சன் டிவி, ஜீ எண்டர்டெயின்மென்டுக்கு என்ன ஆச்சு.. ஏன் இந்த படு வீழ்ச்சி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், கேபிள் மற்றும் டிடிஎச் சேவை குறித்து கடந்த ஜனவரி மாதத்தில் புதிய அறிவிப்பை வெளியிட்டது.

 

அதன்படி, வாடிக்கையாளர்கள் 100 இலவச சேனல்களை அடிப்படை கட்டணம் 155 ரூபாயில் பெறலாம் என்றும் அதற்கு மேல் கட்டண சேனல்களை மக்களே தேர்வு செய்து அதற்குரிய கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டது.

மேலும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் நெட்வொர்க் கெபாசிட்டி கட்டணமாக 130 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. இதனுடன் 18% ஜிஎஸ்டி சேர்த்து 153.40 ரூபாய் கட்ட வேண்டுமென்று கூறப்பட்டது. இதில் தூர்தர்ஷன் உட்பட குறைந்தபட்சம் 100 சேனல்கள் இவ்வாறு ஒளிபரப்பாகுமென்றும், பார்வையாளர்கள் தங்களுக்கென்று தேவைப்படும் சேனல்களுக்கான கட்டணத்தை ஜிஎஸ்டி தொகையுடன் சேர்த்துத் தனியாகக் கட்ட வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டது.

கட்டணம் அதிகரிப்பு

கட்டணம் அதிகரிப்பு

இந்த விதிமுறைகள் பிப்ரவரி 1ம் தேதி முதல் நடைமுறைக்கும் வந்தது. டிராயின் இந்த புதிய விதிமுறையால், கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்த புதிய முறையால் கேபிள் டிவி கட்டணம் 200 ரூபாய்க்கு மேல் வசூலிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இது அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாகப் பாதிக்கும் என்றும், பெரு நிறுவனங்களுக்குச் சாதகமாக டிராய் செயல்படுகிறது என்றும் கேபிள் ஆபரேட்டர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்த சேனல்களை பார்க்க தனியாக கட்டணம்

இந்த சேனல்களை பார்க்க தனியாக கட்டணம்

இப்படியாக கட்டண அதிகரிப்பு செய்த நிலையில், சன் குழும சேனல்கள், ஜீ குழும சேனல்கள், ராஜ் குழும சேனல்கள், ஸ்டார் குழும சேனல்கள், கலர்ஸ் சேனல், மெகா டிவி போன்றவை கட்டண சேனல்களாக உள்ளன. கட்டண சேனல்கள் பார்க்க வேண்டும் என்றால் மேலே கூறிய அடிப்படை திட்டங்களுள் ஒன்றைத் தேர்வு செய்துகொண்டு கட்டண சேனல்களுக்கான கட்டணம் கூடவே 18 சதவிகிதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்றும் கருதப்பட்டது.

பங்கு விலையில் எதிரொலி
 

பங்கு விலையில் எதிரொலி

இந்த நிலையில் கட்டண அதிகரிப்புக்கு பின்னர் சன் டிவி மற்றும் ஜீ எண்டர்டெயின்மெட் உள்ளிட்ட பங்குகள் 2 - 4 சதவிகிதம் குறைந்துள்ளது. அதிலும் கடந்த ஒரு வருடத்தில் சன் டிவியின் பங்கு விலையானது 30 சதவிகிதத்திற்கும் மேலாக சரிந்துள்ளது. இதே ஜனவரி 2 அன்று மட்டும் 4.14 சதவிகிதம் வீழ்ச்சி கண்டது என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று 7 ரூபாய் வீழ்ச்சி கண்டு 432 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது.

உச்சம் எவ்வளவு

உச்சம் எவ்வளவு

சன் டிவியின் 52 வார உச்ச விலையானது பிஎஸ்இ-யில் 649.40 ரூபாயாகவும், இதே குறைந்த விலையானது 389.40 ரூபாயாகவும் உள்ளது. இதே போல் ஜீ எண்டர்டெயின்மென்ட் பங்கின் 52 வார உச்ச விலையானது பிஎஸ்இ-யில் 489.75 ரூபாயாகவும், இதே குறைந்த விலையானது 203.70 ரூபாயாகவும் உள்ளது

ஜீ எண்டர்டெயின்மென்ட் பங்கு விலை

ஜீ எண்டர்டெயின்மென்ட் பங்கு விலை

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ஜீ எண்டர்டெயின்மென்ட் விலையானது 41 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது. அதிலும் டிராயின் கட்டண அதிகரிப்பு அறிவித்த பின்னர் ஜனவரி 2 அன்று 2 சதவிகிதம் வீழ்ச்சி கண்டது. இந்த நிலையில் பல்வேறு விதிகளை ஆராய்ந்த பின்னர் டிராய் 200 சேனல்களுக்கு அதிகப்பட்ச NCF கட்டணம் 130 ரூபாய் ஆக (வரியை தவிர்த்து) குறைத்துள்ளது. இந்த நிலையில் இன்று ஜீ எண்டர்டெயின்மென்ட் பங்கின் விலையானது 290.50 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sun tv, zee entertainment down 2 – 4% after TRAI announced new rules on tariff

TRAI has set Rs.160 price ceiling for all channels available on a distributor’s platform as it aims to reduce rising costs for subscribers.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X