சுந்தர் பிச்சைக்குச் செக்.. வேலை செய்தால் தான் சம்பளம்.. கூகுள் நிர்வாகம் அதிரடி..!!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட்-இன் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுந்தர் பிச்சை இந்த வாரம் இந்திய பயணத்தில் பிரதமர் முதல் பல அரசு உயர் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார்.

இதுமட்டும் அல்லாமல் கூகுள் அலுவலகத்தில் நடந்த முக்கியமான கூட்டத்தில் இந்திய சந்தை குறித்தும், இந்திய சந்தையில் இருக்கும் வாய்ப்புகள் குறித்தும் பேசினார். மேலும் இந்தியா கூகுளின் முக்கியமான வர்த்தகப் பகுதியாக இருக்கும் என்றும் பல முக்கியத் திட்டத்தை வரும் காலத்தில் செயல்படுத்துவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் ஆல்பபெட் நிர்வாகம் சுந்தர் பிச்சை சம்பளத்தில் பெரிய மாற்றத்தைச் செய்துள்ளது.

கூகுள் சுந்தர் பிச்சை திடீர் இந்திய பயணம்.. மோடி அரசுடன் பேச்சுவார்த்தை.. முக்கிய முடிவு..! கூகுள் சுந்தர் பிச்சை திடீர் இந்திய பயணம்.. மோடி அரசுடன் பேச்சுவார்த்தை.. முக்கிய முடிவு..!

சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை

கூகுள்-ன் தாய் நிறுவனமான ஆல்பபெட் சுந்தர் பிச்சை -க்கான புதிய ஊதியக் கட்டமைப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் புதிய கட்டமைப்பின் படி சுந்தர் பிச்சையின் சம்பளத்தில் பெரும் பகுதியை அவருடைய செயல்திறன் உடன் இணைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் சுந்தர் பிச்சைக்கு ஒவ்வொரு வருடமும் நிர்வாக இலக்குகளைத் தொட வேண்டிக் கூடுதல் நெருக்கடி உருவாகியுள்ளது.

ஆல்பபெட் நிர்வாகம்

ஆல்பபெட் நிர்வாகம்

ஆல்பபெட் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ள சுந்தர் பிச்சை -க்கான புதிய ஊதியக் கட்டமைப்பில் அவருடைய மொத்த சம்பளத்தின் செயல்திறன் பங்கு அலகுகளின் (PSUs) விகிதத்தை 43 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. மேலும் ஆன் டார்கெட் performance stock units பேமெண்ட் தொகையில் செயல்திறன் தேவையை 50வது சதவீதத்திலிருந்து 55வது சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

2,000,000 டாலர் சம்பளம்

2,000,000 டாலர் சம்பளம்

சுந்தர் பிச்சை-யின் கடைசி ஈக்விட்டி வழங்கும் திட்டம் டிசம்பர் 2019 இல் வழங்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கூகுள் நிர்வாகக் குழு தலைமைத்துவ மேம்பாடு மற்றும் இழப்பீட்டுக் குழு ஜனவரி 1, 2020 முதல் சுந்தர் பிச்சையின் சம்பளத்தை 2,000,000 டாலராக ஆக உயர்த்தியது.

பங்குகள்

பங்குகள்

இதனுடன் செயல்திறன் பங்கு அலகுகள் ( performance stock units) மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பங்கு அலகுகள் (restricted stock units) வடிவில் நிறுவன பங்குகளும் வழங்க ஒப்புதல் அளித்தது. ஆல்பபெட் நிர்வாகக் குழு தற்போது CEO ஈக்விட்டி வழங்கும் திட்டத்தை மூன்று ஆண்டுக்கு ஒரு முறை மாற்றும் முறையைப் பின்பற்றுகிறது.

63 மில்லியன் டாலர்

63 மில்லியன் டாலர்

இந்த 3 ஆண்டுக் காலத்தில் சுந்தர் பிச்சை பணிகளைப் பெரிய அளவில் பாராட்டிய ஆல்பபெட் நிர்வாகம் 2019 திட்டத்தின் படி சுந்தர் பிச்சைக்கு வருடம் 2,000,000 டாலர் மட்டும் அல்லாமல் 2 முறை தால 63 மில்லியன் டாலர் மதிப்பிலான performance stock units வழங்கப்பட்டு உள்ளது.

 84 மில்லியன் டாலர்

84 மில்லியன் டாலர்

இதோடு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் restricted stock units பிரிவில் ஆல்பாபெட் நிறுவனத்தின் கட்டுப்படுத்தப்பட்ட 84 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகள் வழங்கப்பட்டு உள்ளது.

ஆல்பபெட் வருமானம்

ஆல்பபெட் வருமானம்

2015 ஆம் ஆண்டுச் சிஇஓ-வாக அறிவிக்கப்பட்ட சுந்தர் பிச்சை நிர்வாகத்தின் கீழ் கடந்த 5 வருடங்களில் ஆல்பபெட் பங்கு மதிப்பு 66.62 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.2022 ஆம் ஆண்டின் செப்டம்பர் காலாண்டில் ஆல்பபெட் நிறுவனத்தின் வருவாய் கடந்த ஆண்டை காட்டிலும் 6 சதவீதம் அதிகரித்து 69.1 பில்லியன் டாலராக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sundar Pichai's new salary; Alphabet board increased PSU 60 percent from 43 percent

Sundar Pichai's new salary; Alphabet board increased PSU 60 percent from 43 percent
Story first published: Friday, December 23, 2022, 13:11 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X