சுந்தர் பிச்சை, சல்மான் கான் டிவிட்டர் தரவுகள் திருட்டு.. எலான் மஸ்க் அதிர்ச்சி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ பதவியேற்ற நாளில் இருந்து பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் நிலையில் தற்போது டிவிட்டர் வரலாறு காணாத டேட்டா கசிவை எதிர்கொண்டு உள்ளது.

இஸ்ரேல் நாட்டின் சைபர் உளவுத்துறை நிறுவனமான ஹட்சன் ராக் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஹேக்கர் ஒருவர் 40 கோடி ட்விட்டர் யூசர்களின் தகவல்களைத் திருடியதாகக் கூறி அதை டார்க் வெப்பில் விற்பனைக்கு வைத்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த 40 கோடி யூசர்களில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, இந்தியா தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், பாலிவுட் நடிகர் சல்மான் கான் போன்ற உயர்மட்ட மற்றும் பிரபலமான யூசர்களின் தரவு திருடப்பட்டுத் தற்போது விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது.

சீனா பொருளாதாரத்தில் ஓட்டை போட்ட ஜீரோ கோவிட் பாலிசி..! சீனா பொருளாதாரத்தில் ஓட்டை போட்ட ஜீரோ கோவிட் பாலிசி..!

டார்க் வெப்

டார்க் வெப்

டார்க் வெப் தளத்தில் தற்போது விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ள

40 கோடி ட்விட்டர் யூசர்களின் மின்னஞ்சல், பயனர் பெயர், பின்தொடர்பவர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் போன்ற பர்சனல் தரவுகளை டார்க் வெப்பில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக ஹட்சன் ராக் அறிக்கை கூறுகிறது.

தரவு கசிவு

தரவு கசிவு

சில மாதங்களுக்கு முன்பு எலான் மஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் ட்விட்டர் தளத்தில் சுமார் 5.4 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களின் தரவு கசிவை சந்தித்ததாகத் தகவல் வெளியானது. இந்தத் தகவல் கசிவை அயர்லாந்து நாட்டின் தரவு பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது

ஹேக்கர்

ஹேக்கர்

 

இந்தத் தகவல்களைத் திருடிய ஹேக்கர் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் -கிற்கு ஒரு ஆஃபர்-ஐ வழங்கியதாகக் கூறப்படுகிறது. டார்க் வெப் தளத்தில் ஹோக்கர்கள் டிவிட்டர் தளத்தில் இருந்த தொழில்நுட்ப கோளாறு மூலம் 400 மில்லியனுக்கும் அதிகமான யூசர்களின் தரவுகள் திருடப்பட்டு உள்ளது என இந்த ஹேக்கர் தெரிவித்துள்ளார்.

400 மில்லியன் யூசர்கள்

400 மில்லியன் யூசர்கள்

இதோடு ட்விட்டர் அல்லது எலான் மஸ்க், நீங்கள் இந்தப் பதிவைப் படிக்கிறீர்கள் என்றால், 54 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களின் தரவு கசிவுக்காக ஜிடிபிஆர் அபராதம் விதிக்கப்படும் அபாயத்தில் உள்ளீர்கள். இப்போது 400 மில்லியன் பயனர்களின் தரவு கசிவுக்கு அபராதம் பெற உள்ளீர்கள்.

அபராதம்

அபராதம்

 

இந்த நிலையில் தகவல் திருட்டு உறுதி செய்யும் பட்சத்தில் பெறும் தொகையை அபராதமாகச் செலுத்த நேரிடும். இதில் இருந்து தப்பிக்க CDPR மீறல்களில் பேஸ்புக் செய்தது போல 2.76 மில்லியன் டாலரை அபராதமாகச் செலுத்துவதைத் தவிர்ப்பதற்கு உங்களுக்குச் சிறந்த வழி இந்த 40 கோடி மக்களின் தரவை நேரடியாக வாங்குவதுதான் என ஆஃபர் உடன் சலுகை விதித்துள்ளார் இந்த ஹேக்கர்.

முக்கிய நபர்

முக்கிய நபர்

இப்போது ஆபத்தில் உள்ள ட்விட்டர் தரவுகளில், முக்கியமான பயனர்கள் கணக்கில் சில, கீழே உள்ளது

சுந்தர் பிச்சை
ஸ்பேஸ்எக்ஸ்
சல்மான் கான்
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், இந்தியா
உலகச் சுகாதார அமைப்பின் (WGO) சமூக ஊடக ஹேன்டில்
சார்லி புத்
ஷான் மெண்டீஸ்
அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ்
சிபிஎஸ் மீடியா
டொனால்ட் டிரம்ப் ஜூனியர்
டோஜா கேட்
நாசாவின் JWST கணக்கு
NBA

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sundar Pichai, Salman Khan Twitter data UP for sale; 40 crore account data leaked from twitter

Sundar Pichai, Salman Khan Twitter data UP for sale; 40 crore account data leaked from twitter
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X