Supertech: 40 மாடி கட்டிடம், 3700 கிலோ வெடிமருந்து.. 8 நிமிடத்தில் தரைமட்டம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நொய்டாவின் செக்டார் 93A-ல் உள்ள Suptertech நிறுவனத்தின் 40 மாடி இரட்டைக் கோபுரங்களான Apex மற்றும் Ceyane கட்டிடத்தை உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க ஆகஸ்ட் 28 அன்று இடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஏறக்குறைய 10 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கு இறுதியாக இடிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த இடிப்புக்காக மும்பையைச் சேர்ந்த எடிஃபைஸ் இன்ஜினியரிங் நிறுவனத்துடன் சூப்பர்டெக் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்தியாவில் இடிக்கப்படும் மிக உயரமான கட்டிடம் இதுதான். சரி இந்தக் கட்டிடத்தை இடிக்க என்ன காரணம்??

சீனா-வை கட்டம் கட்டி அடிக்க தயாராகும் அமெரிக்கா.. அடுத்து என்ன நடக்கும்..? சீனா-வை கட்டம் கட்டி அடிக்க தயாராகும் அமெரிக்கா.. அடுத்து என்ன நடக்கும்..?

 10 வருட வழக்கு

10 வருட வழக்கு

2014-ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் இந்தக் கட்டிடம் சட்டவிரோதமானது என்று கண்டறிந்து இடிக்க உத்தரவிட்டது. ஆனால் தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் பிற தாமதங்கள் காரணமாக இடிக்கப்படும் தேதிகளைத் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது மட்டும் அல்லாமல் இந்த வழக்கு 10 வருடங்கள் தொடர்ந்துள்ளது.

 எடிஃபைஸ் இன்ஜினியரிங்

எடிஃபைஸ் இன்ஜினியரிங்

மும்பையைச் சேர்ந்த எடிஃபைஸ் இன்ஜினியரிங் நிறுவன இந்த இரட்டைக் கோபுரங்களில் துளையிடப்பட்ட துளைகளில் சுமார் 3,700 கிலோகிராம் அளவிலான வெடிபொருட்கள் அடைக்கப்படும் பணிகளில் சுமார் 100 பேர் தினமும் பணியாற்றி வருகின்றனர். இதன் மூலம் ஒவ்வொரு நாளும், சுமார் 200 முதல் 300 கிலோ வெடிபொருட்கள் கட்டமைப்பில் நிரம்பியுள்ளன.

 இந்தக் கட்டிடத்தை இடிக்க என்ன காரணம்??
 

இந்தக் கட்டிடத்தை இடிக்க என்ன காரணம்??

2012 ஆம் ஆண்டில், எமரால்டு கோர்டு பகுதியில் குடியிருப்போர் நலச் சங்கம் (RWA) அலகாபாத் உயர் நீதிமன்றத்தை அணுகி, இரட்டைக் கட்டிடங்கள் உத்தரப் பிரதேசம் மாநில அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் சட்டம், 2010 ஐ மீறுவதாகக் கூறி வழக்குப் பதிவு செய்தனர்.

 RWA அமைப்பு

RWA அமைப்பு

இந்த வழக்கில் RWA அமைப்பு நீதிமன்றத்தில், இந்த இரட்டை கோபுரம் எமரால்டு கோர்டு திட்ட பரவுஷரில் பூங்கா என அறிவிக்கப்பட்ட பகுதியில் கட்டப்பட்டது என்று கூறியது. மேலும் இரு கட்டிடங்களுக்கு இடையே உள்ள தூரம் 16 மீட்டருக்கும் குறைவாக இருந்தது என்றும் கூறியது.

 ஆகஸ்ட் 28 தரைமட்டம்

ஆகஸ்ட் 28 தரைமட்டம்

2014-ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் இந்தக் கட்டிடம் சட்டவிரோதமானது எனக் கண்டறிந்து கட்டிடங்களை இடிக்க உத்தரவிட்டது. பல தாமதங்களைத் தொடர்ந்து ஆகஸ்ட் 31, 2021 இல், கட்டிடத்தை இடிக்க அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை சுப்ரீம் கோர்டு உறுதி செய்தது. ஆகஸ்ட் 12, 2022 அன்று, ஆகஸ்ட் 28, 2022 அன்று கட்டிடத்தை இடிக்க இறுதி அனுமதி அளித்தது.

 12 சதவீத வட்டியுடன் பணம்

12 சதவீத வட்டியுடன் பணம்

 இந்நிலையில் இந்த 40 மாடி கட்டிடத்தில் வீடு வாங்க முன்பதிவு செய்த நாளில் இருந்து இத்தொகைக்கான பணத்தை 12 சதவீத வட்டியுடன் திருப்பித் தரவும், இரட்டைக் கோபுரங்கள் கட்டியதால் ஏற்பட்ட துன்புறுத்தல்களுக்காக RWA of Emerald Court திட்டத்தின் அமைப்பிற்கு 2 கோடி ரூபாயை வழங்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாதுகாப்பு

பாதுகாப்பு

40 மாடி கட்டிடத்தை இடிக்கும் நாளான ஆகஸ்ட் 28 ஆம் தேதி எமரால்டு கோர்ட்-ல் வசிக்கும் சுமார் 1,396 குடியிருப்பாளர்களும் வெளியேற்றப்படுவார்கள். நொய்டா-கிரேட்டர் நொய்டா விரைவுச்சாலை இடிக்கப்படும் போது 20 நிமிடங்களுக்கு மூடப்படும். இடிப்பின் போது பாதுகாப்பு நோக்கங்களுக்காகச் சுமார் 500 காவல்துறை அதிகாரிகளும் ஈடுபடுத்தப்படுவார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: supertech noida real estate
English summary

Supertech twin towers: 3,700 kg explosives to demolish 40 floor in just 8 minsutes

Supertech twin towers: 3,700 kg explosives to demolish 40 floor in just 8 minsutes Supertech: 40 மாடி கட்டிடம், 3700 கிலோ வெடிமருந்து.. 8 நிமிடத்தில் தரைமட்டம்..!
Story first published: Friday, August 19, 2022, 16:40 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X