இந்தியர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன ஆனந்த் மஹிந்திரா.. ஆப்பிள் உற்பத்தி குறித்து பலே கருத்து!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் மிகப்பெரிய டெக் ஜாம்பவான் ஆன ஃபாக்ஸ்கான் இந்தியாவிலும் தனது இருப்பினைக் கொண்டுள்ளது. தொடர்ந்து சீனாவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், இந்தியாவில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதன் ஊழியர்களின் எண்ணிக்கையை இருமடங்காக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகின் மிகப்பெரிய ஐபோன் ஆலையான ஃபாக்ஸ்கான் ஆலை சீனாவில் உள்ளது. ஐபோன் சப்ளையில் பாதிக்கும் மேலாக சீனாவில் இருந்து தான் சப்ளை செய்யப்படுகிறது.

10000 பேருக்கு கொரோனா.. சீனா அரசு போட்ட அதிரடி உத்தரவு..! 10000 பேருக்கு கொரோனா.. சீனா அரசு போட்ட அதிரடி உத்தரவு..!

 உற்பத்தி பாதிக்கலாம்

உற்பத்தி பாதிக்கலாம்

சீனாவில் தற்போது கொரோனாவின் காரணமாக பல முக்கிய நகரங்களில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. சீனாவின் முக்கிய நகரமான செங்செளவிலும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஐபோன் உற்பத்தி 30% வரையில் பாதிக்கப்படலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

சப்ளை சங்கிலியில் தாக்கம்

சப்ளை சங்கிலியில் தாக்கம்

சீனாவில் பரவி வரும் கொரோனா தாக்கத்தின் மத்தியில் சப்ளை சங்கிலியில் தாக்கம் இருந்து வருகின்றது. இதற்கிடையில் தான் சீனாவுக்கு மற்றாக சீனாவுக்கு வெளியே உற்பத்தியினை அதிகரிக்க தொடங்கியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக அதிகளவில் ஆப்பிள் உற்பத்தி இந்தியா, வியட்னாமில் தான்.

தாய்வான் உற்பத்தியாளர்

தாய்வான் உற்பத்தியாளர்

ஆப்பிளின் மிகப்பெரிய சப்ளையரான தாய்வானை தலைமையிடமாகக் கொண்ட, இந்தியாவில் தமிழகத்தில் தனது இருப்பினை விரிவாக்கம் செய்து வருகின்றது. இதற்கிடையில் தான் தமிழ்கத்தில் அதன் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டு வருகின்றது. இது அடுத்த 2 ஆண்டுகளில் உற்பத்தியினை அதிகரிக்க திட்டமிட்டுள்ள நிலையில், 53,000 பேரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் சில தினங்களுக்கு முன்பு வெளியானது.

மென்மையான ஒலி

மென்மையான ஒலி

இது குறித்து மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா , இது உலகளாவிய விநியோக சங்கிலி மாற்றத்தின் மென்மையான ஒலி என்றும் கூறியுள்ளார்.

மஹிந்திரா, ஆரவாரம் அல்லது டிரம்ரோல் இல்லை. ஆனால் இது உலகளாவிய சப்ளை சங்கிலி மாற்றத்தின் மென்மையான ஒலியாக இருக்க முடியுமா? 2 லட்சம் தொழிலாளர்களுக்கு மேலே வேலை செய்யும் சீனாவின் பாக்ஸ்கான் ஆலையுடன் ஒப்பிடும்போது, தமிழக ஆலையை சிறியதாக இருந்தாலும், சீனாவில் இருந்து உற்பத்தியினை மாற்றும் மையமாக இருக்கும்.

 எப்போது தொடக்கம்

எப்போது தொடக்கம்

ஃபாக்ஸ்கான் முறையாக ஹான் ஹை ப்ரிசிஷன் இண்டஸ்ட்ரி கோ லிமிடெட் (Hon Hai Precision Industry Co Ltd), கடந்த 2019ம் ஆண்டு முதல் இந்தியாவில் தமிழ் நாட்டில் செயல்படத் தொடங்கியது.இந்த ஆண்டி ஐபோன் 14 சீரிஸை உற்பத்தி செய்ய தொடங்கியது.

சீனாவின் பாதிப்பு ஏற்படத் தொடங்கியுள்ள நிலையில் தான் இந்தியாவில் தனது உற்பத்தியினை அதிகரிக்க தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தாய்வான் சென்ற இந்திய அதிகாரிகள்

தாய்வான் சென்ற இந்திய அதிகாரிகள்

இதற்கிடையில் தன் பணியமர்த்தல் அறிவிப்பும் வந்துள்ளது. இந்தியாவில் ஐபோன் தேவையானது அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், ஐபோன் பற்றாக்குறையே இருந்து வருகின்றது. கடந்த அக்டோபர் 27 அன்று தமிழ் நாட்டின் முதலீட்டு ஊக்குவிப்பு பிரிவானது, உயர்மட்ட அரசு அதிகாரிகள் தாய்வானுக்கு சென்று லியுவை சந்தித்ததாகவும், புதிய விரிவாக்கம் மற்றும் முதலீடுகள் குறித்து விரிவாக்கம் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் தற்போது என்ன?

இந்தியாவில் தற்போது என்ன?

இந்தியாவில் நடப்பு ஆண்டில் ஆப்பிள் மூன்று இடங்களில் இருந்து சப்ளையர்களால் அசெம்பிள் செய்யப்படுகின்றது. தமிழ் நாட்டில் ஃபாக்ஸ்கான் மற்றும் பெகாட்ரான் மற்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ள விஸ்ட்ரான் அசெம்பிள் செய்கிறது.

 எதிர்காலம் எப்படியிருக்கும்?

எதிர்காலம் எப்படியிருக்கும்?

2025ம் ஆண்டிற்குள் இந்தியாவில் பயன்படுத்தப்படும் 4 ஐபோன்களில் 1 இந்தியாவில் தயாரிக்கப்படலாம். அதேபோல் மேக், ஐபாட்கள், ஆப்பிள் வாட்ச் மற்றும் ஏர்பாட்கள் உட்பட அனைத்து தயாரிப்புகளில்; 25%ல் தயாரிக்கப்படலாம். இவை தற்போது சீனாவுக்கு வெளியே 5% மட்டுமே தயாரிக்கப்படலாம் என ஜேபி மார்கன் ஆய்வானது சமீபத்தில் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

supply chain shift? Anand mahindra proceed as foxconn announced plans for its iphone plant in TN

Mahindra Group Chairman Anand Mahindra said that India is the gentle sound of global supply chain transformation.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X