Coca Cola & Thums Up-க்கு தடை கோரி வழக்கு தொடுத்தவருக்கு 5 லட்சம் அபராதம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Coca Cola, Thums Up போன்ற பிரபலமான குளிர்பான பிராண்டுகளைத் தெரியாதவர்கள் உண்டா? பள்ளி மாணவர்கலள் தொடங்கி "அந்த காலத்துல இருந்த டேஸ்ட் இப்ப இல்ல" என பெருமிதம் பேசும் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த பிராண்ட் பரிட்சயம்.

 

அப்படிப்பட்ட இந்த பிரபலமான குளிர்பானங்களை தடை செய்யக் கோரி ஒரு சமூக ஆர்வலர் தொடுத்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து, 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து இருக்கிற்து.

இந்த வழக்கின் பின்னனை என்ன? ஏன் உச்ச நீதிமன்றம் 5 அட்சம் ரூபாய் அபராதம் விதித்தது? உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்விகள் என்ன? என்பதை எல்லாம் விரிவாகப் பார்ப்போம்.

வழக்கு விவரங்கள்

வழக்கு விவரங்கள்

உமேத்சிங் பி சாவ்டா (Umedsingh P Chavda) என்பவர் Coca Cola & Thums Up குளிர்பானங்களை தடை செய்யக் கோரி ஒரு பொது நல வழக்கு தொடுக்கிறார். அந்த வழக்கில், இந்த குளிர்பானங்களை, மக்கள் பயன்படுத்த வேண்டாம். அது உடல் நலத்துக்கு கேடு என அரசு தெரியப்படுத்த வேண்டும் எனவும் கோரி இருக்கிறார்களாம்.

மத்திய அரசு

மத்திய அரசு

அதோடு, Coca Cola & Thums Up குளிர்பானங்கள் தொடர்பாக மத்திய அரசு ஒரு அனலிடிகள் அறிக்கையை சமர்பிக்கச் சொல்லுமாறு கோரிக்கை வைத்திருக்கிறார். மேலும் Coca Cola & Thums Up குளிர்பானங்களை விற்பதற்கு அனுமதிக்கும் உரிமம் மற்றும் அதன் பயன்பாடு தொடர்பாக அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் அப்ரூவ் செய்தவைகளையும் மத்திய அரசு சமர்பிக்குமாறு கோரி இருந்தார்கள்.

விசாரணை
 

விசாரணை

இந்த வழக்கை, நீதிபதி டி வொய் சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. சம்பந்தம் இல்லாத காரணங்களுக்காக (extraneous reasons) வழக்கு தொடுக்கப்பட்டிருப்பதாகச் சொல்லி தள்ளுபடி செய்து இருக்கிறார்கள். அதோடு, இந்த பொது நல வழக்கு ஏன் Coca Cola & Thums Up ஆகிய இரண்டு குளிர்பானங்களை மட்டும் தடை செய்யச் சொல்லி கேட்டு இருக்கிறது என்பதற்கான காரணங்களைச் சொல்லவில்லை எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

5 லட்சம் அபராதம்

5 லட்சம் அபராதம்

அது போக 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து இருக்கிறார்கள். இந்த பணத்தை அடுத்த ஒரு மாத காலத்துக்குள் செலுத்த வேண்டும் எனவும் சொல்லி இருக்கிறார்கள். இந்த 5 லட்சம் ரூபாய் பணம் SCAORA (Supreme Court Advocates-on Record Association) சங்கத்துக்குப் போய் சேர வேண்டும் எனவும் சொல்லி இருக்கிறார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

supreme court fined Rs 5 lakh on pil seeking ban on Coca Cola, Thums Up

The supreme court fined Rs 5 lakh on a Public Interest Litigation seeking ban on coca cola, thums up.
Story first published: Friday, June 12, 2020, 13:13 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X