சூரத் - சென்னை சாலை திட்டத்திற்கு முட்டுக்கட்டை.. சுற்றுச்சூழல் அமைச்சகம் நெருக்கடி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குஜராத்தில் சட்டமன்றத் தேர்தலுக்குச் சில மாதங்களே இருக்கும் நிலையில், அம்மாநிலத்தின் பொருளாதாரம், வர்த்தக வளர்ச்சிக்கு மிகவும் முக்கியத் திட்டமாக விளங்கும் சூரத்-சென்னை பொருளாதார வழித்தடத்தின் ஒரு முக்கியப் பகுதி கடுமையான பசுமைத் தடையை எதிர்கொண்டு உள்ளது.

இந்திய மாநிலங்கள் மத்தியில் தற்போது பொருளாதார வளர்ச்சி குறித்துக் கடுமையான போட்டி நிலவி வரும் வேளையில் பெரும்பாலான மாநிலங்கள் பல முக்கியமான உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத் திட்டத்தைத் தீட்டி வருகிறது.

இப்படிக் குஜராத் முதல் தமிழ்நாடு வரையில் சாலை வாயிலாக 4 மாநிலத்தை இணைக்கும் முக்கியமான சாலை திட்டம் தான் இந்த Surat-Chennai economic corridor திட்டம்.

ஏன் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் மக்களின் பெஸ்ட் சாய்ஸ்.. உங்களுக்கு தெரியுமா? ஏன் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் மக்களின் பெஸ்ட் சாய்ஸ்.. உங்களுக்கு தெரியுமா?

4 மாநிலங்கள்

4 மாநிலங்கள்

தமிழ்நாடு, தெலுங்கானா, மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களை நாசிக், அகமதுநகர், சோலாப்பூர், கலபுர்கி, கர்னூல், கடப்பா & திருப்பதி ஆகியவற்றின் மூலம் இணைக்கும் சுமார் 14,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டமாக விளங்குகிறது Surat-Chennai economic corridor திட்டம்.

கிரீன்ஃபீல்ட் பகுதி

கிரீன்ஃபீல்ட் பகுதி

தற்போது இத்திட்டத்தின் முக்கியப் பகுதியான சூரத் - முதல் சோலாபூர் பகுதியில் அமைய உள்ள 290 கிமீ நீளமுள்ள கிரீன்ஃபீல்ட் பகுதியில் அமையும் வரையில் திட்டமிடப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழல் ரீதியாக உணர்திறன் கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அழகிய மற்றும் தீண்டப்படாத பகுதிகளில் வருவதால் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் (EAC) சிக்கலில் சிக்கியுள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டுக் குழு (EAC) சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MORTH) மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஆகிய அமைப்புகளைப் புதிய சாலைகளை அமைக்காமல் தற்போது இருக்கும் சாலையை விரிவாக்கம் செய்ய உத்தரவிட்டு உள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலை

மேற்குத் தொடர்ச்சி மலை

தற்போது சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MORTH) மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) கொடுத்துள்ள திட்டத்தில் சூரத்-நாசிக்-அகமத்நகர் பகுதியில் அமைய உள்ள 290 கி.மீ நீளமுள்ள கிரீன்ஃபீல்ட் பகுதியில் குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைகளின் இதுவரையில் தொடப்படாத பகுதிகளில் வருகிறது.

அப்பீல்

அப்பீல்

ஆனால் சாலை போக்குவரத்து அமைச்சகம் மற்றும் நெடுஞ்சாலை ஆணையம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் முடிவுகளை எதிர்த்து அப்பீல் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் Surat-Chennai economic corridor திட்டம் மூலம் டெல்லி வரையில் இணைப்பு பெரிய அளவில் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Surat-Chennai economic corridor hits environmental problem; fall in sensitive Western Ghats

Surat-Chennai economic corridor hits environmental problem; fall in sensitive Western Ghats சூரத் - சென்னை சாலை திட்டத்திற்கு முட்டுக்கட்டை.. சுற்றுச்சூழல் அமைச்சகம் நெருக்கடி..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X