Surendran: வறுமையில் பீடி சுற்றியவர் இன்று அமெரிக்காவில் ஜட்ஜ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வழக்கறிஞரான சுரேந்திரன் கே பட்டேல் (Surendran K Pattel), கேரளாவில் வறுமையில் வாடிய போது பீடி தயாரித்து வளர்ந்தவர் இன்று அமெரிக்காவில் நீதிபதியாகப் பல கோடி இந்தியர்களுக்கு முன்னுதாரணமாக மாறியுள்ளார்.

 

ஜனவரி 1 ஆம் தேதி, டெக்சாஸின் ஃபோர்ட் பெண்ட் கவுண்டியில் அமைந்துள்ள 240வது நீதித்துறை மாவட்டத்தின் நீதிமன்றத்தின் நீதிபதியாகக் கேரள மாவட்டத்தைச் சேர்ந்த 51 வயதான சுரேந்திரன் கே பட்டேல் பதவியேற்றுள்ளார்.

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வழக்கறிஞரான சுரேந்திரன் கே பட்டேல் (Surendran K Pattel), கேரளாவில் வறுமையில் வாடிய போது பீடி தயாரித்து வளர்ந்தவர் இன்று அமெரிக்காவில் நீதிபதியாகப் பல கோடி இந்தியர்களுக்கு முன்னுதாரணமாக மாறியுள்ளார்.

கேரளா

கேரளா

கேரளா மாநிலத்தின் காசர்கோட்டில் தினசரி கூலித் தொழிலாளிகளுக்கு மகனாகப் பிறந்த சுரேந்திரன் கே பட்டேல், இளம் வயதிலேயே பெற்றோர்களுக்கு உதவு பள்ளி மற்றும் கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும் போது பணியாற்றிக் குடும்பத்தைக் கவனித்துள்ளார்.

 சுரேந்திரன் கே பட்டேல்

சுரேந்திரன் கே பட்டேல்

இதில் குறிப்பாகச் சுரேந்திரன் கே பட்டேல் தனது டீனேஜ்-ல் அவரும் அவரது சகோதரியும் குடும்பத்தை வழிநடத்தப் பணம் சம்பாதிப்பதற்காகப் பீடிகளை உருட்டினார்கள். பட்டேல் ஒரு கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி இன்று அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் நீதிபதியாக உயர்ந்துள்ளார்.

10-ம் வகுப்பு
 

10-ம் வகுப்பு

10-ம் வகுப்புக்குப் பிறகு படிக்க வேண்டாம் என்று முடிவு செய்து முழு நேரமாகப் பீடி உருட்டும் வேலையைத் தொடங்கிச் சுரேந்திரன் கே பட்டேல் குடும்பத்தில் உருவான சில கசப்பான சூழ்நிலைகள் மீண்டும் படிப்பைத் தொடர ஊக்குவித்தது.

கல்லூரி

கல்லூரி

இதனால் பெரும் இடைவெளிக்குப் பின்பு ஈ.கே. நாயனார் நினைவு அரசுக் கல்லூரி சேர்ந்தார், கல்லூரியில் சேர்ந்த பின்பும் குடும்பத்தைக் காப்பாற்றத் தொடர்ந்து பணியாற்ற வேண்டியிருந்தது. இதனால் கல்லூரி வருகைப் பதிவு அளவு பாதிக்கப்பட்டது, இதனால் அவருடைய பேராசிரியர்கள் அவரைத் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை.

வழக்கறிஞர்

வழக்கறிஞர்

சுரேந்திரன் ஒரு வழக்கறிஞராக வேண்டும் என ஆசைப்பட்ட நிலையில் தனக்கு ஒரு வாய்ப்புத் தருமாறு தனது ஆசிரியர்களிடம் கெஞ்சினார். அப்போது நான் நன்றாக மதிப்பெண் வாங்கவில்லை எனில் கல்லூரிக்கு விட்டு வெளியேறுவதாகக் கூறி அனுமதி பெற்றதாகக் கூறுகிறார் சுரேந்திரன்.

டாப்பர்

டாப்பர்

இதன் விளைவு அந்தத் தேர்வில் சுரேந்திரன் தான் டாப்பர், அதுமட்டும் அல்லாமல் இந்தப் பேட்ச்-ல் அவர் தான் டாப்பர் என்னும் பெருமையுடன் கூறுகிறார் சுரேந்திரன். கோழிக்கோடு அரசு சட்டக் கல்லூரியில் சேர்ந்து 1995 LL.B பட்டம் பெற்றார். 1996ல் கேரளாவில் முக்கிய வழக்கறிஞர் ஆக மாறினார்.

அமெரிக்க வாய்ப்பு

அமெரிக்க வாய்ப்பு

2007 ஆம் தன்னுடைய குடும்பம் அமெரிக்கா செல்ல ஒரு வாய்ப்புக் கிடைத்தது. அவருடைய மனைவி நர்ஸ் என்பதால் அமெரிக்காவின் முன்னணி மருத்துவ அமைப்பில் சேர அழைப்பு வந்த நிலையில், இதைத் தொடர்ந்து அமெரிக்கா சென்றனர், அமெரிக்கா சென்ற 2 வருடத்தில் Texas bar exam எழுதி முதல் முறையிலேயே வெற்றிபெற்றார் சுரேந்திரன்.

அமெரிக்க நீதிபதி

அமெரிக்க நீதிபதி

குடியுரிமை பெற வேண்டும் என்பதற்காக டெக்ஸ்சாஸ் வந்த சுரேந்திரன் குடும்பம் இன்று அமெரிக்காவில் மேற்படிப்பு படித்து, சொந்தமாக நிறுவனத்தைத் துவங்கிப் பல நூறு பேரின் வழக்குகளில் வெற்றிபெற்று இன்று அமெரிக்க நீதிபதி ஆகியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Surendran K Pattel: Man who roll beedis for survival in kerala now became judge in United States

Surendran K Pattel: Man who roll beedis for survival in Kerala now became a judge in the United States
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X