ஸ்விக்கி கொடுத்த ஷாக்.. 600 ஊழியர்கள் பணிநீக்கம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி சேவை தளமான ஸ்விக்கி தனது போட்டி நிறுவனமான சோமேட்டோ நிறுவனத்தைப் போலவே பெரும் பணிநீக்கத்தை அறிவித்துள்ளது.

ஸ்விக்கி நிறுவனத்தின் நிதி நிலை அறிக்கை வெளியான போதே அதிகப்படியான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் எனக் கணிக்கப்பட்ட நிலையில் தற்போது 600 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் ஒட்டுமொத்த பணியாளர்கள் எண்ணிக்கையில் சுமார் 8-10 சதவீத ஊழியர்களை இந்தப் பணிநீக்க திட்டத்தின் கீழ் குறைக்கிறது ஸ்விக்கி.

ஸ்விக்கி ஓனருக்கு ஷாக் கொடுத்த பெங்களூர்வாசிகள்.. அநியாயம் பண்றீங்கடா..? ஸ்விக்கி ஓனருக்கு ஷாக் கொடுத்த பெங்களூர்வாசிகள்.. அநியாயம் பண்றீங்கடா..?

ஸ்விக்கி

ஸ்விக்கி

ஆன்லைன் உணவு டெலிவரி தளமான ஸ்விக்கி நிறுவனத்தின் நஷ்ட அளவு, கடந்த நிதியாண்டில் 1,617 கோடி ரூபாயாக இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் 3,629 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதேபோல் நடப்பு நிதியாண்டில் மொத்த செலவுகள் 131 சதவீதம் அதிகரித்து 9,574.5 கோடி ரூபாயாக உள்ளது.

நிதிநிலை

நிதிநிலை

கடந்த ஆண்டு நிதிநிலை மிகவும் மோசமாக மாறிய நிலையில் பணிநீக்கம் குறித்த முடிவு நவம்பர் மாத இறுதியில் எடுக்கப்பட்ட நிலையிலும், ஜனவரி மாதம் பிற முன்னணி டெக் நிறுவனங்களின் பணிநீக்க அறிவிப்புக்கு மத்தியில் ஸ்விக்கி தனது பணிநீக்கத்தை அறிவித்துள்ளது.

 600 பேர் பணிநீக்கம்

600 பேர் பணிநீக்கம்

ஸ்விக்கி தனது வருடாந்திர முடிவுகளைப் பார்க்கும் போதே அதன் நெருக்கடி புரிந்துகொள்ள முடிகிறது. தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள 600 பேர் பணிநீக்கத்தில் ப்ராடெக்ட், இன்ஜினியரிங் மற்றும் ஆப்ரேஷன்ஸ் பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்கள் அதிகளவில் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

IPO வெளியிட திட்டம்

IPO வெளியிட திட்டம்

2023 ஆம் ஆண்டில் IPO வெளியிட திட்டமிட்டு உள்ள ஸ்விக்கி, ஐபிஓ வெளியிடும் முன்பு லாபகரமான நிறுவனமாக மாற வேண்டும் என இலக்கை கொண்டு உள்ளது. இதன் ஒருபகுதியாகவும் மோசமாக நஷ்டத்தைப் பதிவு செய்த பின்பு பணிநீக்கத்தை அறிவித்துள்ளது.

ஊழியர்களின் செயல்திறனை

ஊழியர்களின் செயல்திறனை

ஸ்விக்கி நிறுவனத்தின் மளிகை பொருட்கள் மற்றும் உணவு டெலிவரி தளத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களின் செயல்திறனை அக்டோபர் மாதம் மறு ஆய்வு செய்து முடித்த நிலையில் அதனை அடிப்படையாகக் கொண்டு தற்போது 600க்கும் அதிகமான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.

PIP திட்ட ஊழியர்கள்

PIP திட்ட ஊழியர்கள்

Swiggy நிறுவனம் தனது அனைத்து ஊழியர்களுக்கும் செயல்திறன் அடிப்படையிலான மதிப்பீட்டு அளவைக் கொண்டுள்ளது. இந்த மதிப்பீட்டில் 2-க்கு கீழே வருபவர்கள் பொதுவாக PIP திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள். இந்த நிலையில் தற்போது பணிநீக்கம் செய்யப்பட்ட பெரும்பாலான மக்கள் இந்தப் பிரிவைத் தேர்ந்தவர்கள் தான்.

சோமேட்டோ பணிநீக்கம்

சோமேட்டோ பணிநீக்கம்

ஸ்விக்கியின் சக போட்டி நிறுவனமான சோமேட்டோ நவம்பர் மாதத்தில் செலவுகளைக் குறைக்கவும், வர்த்தகத்தை மறுசீரமைப்பு செய்யவும் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 3 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது. இது மட்டும் அல்லாமல் ஐபிஓ வெளியிட்டு 1 வருடம் முடிந்த பின்பு துணை நிறுவனர்கள் உட்படப் பலர் வெளியேறினர்.

 Dineout நிறுவன கைப்பற்றல்

Dineout நிறுவன கைப்பற்றல்

ஸ்விக்கி மளிகை பொருட்கள் மற்றும் உணவு டெலிவரியில் மட்டுமே இருந்த நிலையில் சமீபத்தில் சோமேட்டோவுக்குப் போட்டி அளிக்கும் வகையில் ரெஸ்டாரென்ட் டிஸ்கவரி பிரிவில் இறங்க Dineout என்னும் நிறுவனத்தை 120 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் மே 2022 ஆம் ஆண்டு கைப்பற்றியது. ஆனால் கணிக்கப்பட்ட அளவுக்கு இதன் மூலம் புதிய வர்த்தகம், வருவாய்க் கிடைத்தாக ஸ்விக்கி இதுவரையில் அறிவிக்கவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Swiggy layoff 600 employees follow Zomato path; Aiming for profitability before IPO

Swiggy layoff 600 employees follow Zomato path; Aiming for profitability before IPO
Story first published: Friday, January 20, 2023, 9:01 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X