45 நிமிடத்தில் டெலிவரி.. பிளிப்கார்டுக்கு போட்டியாக ஸ்விக்கி.. மளிகை டெலிவரிக்காக இன்ஸ்டாமார்ட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் நாளுக்கு நாள் ஈ-காமர்ஸ் துறையானது மிக வேகமாக வளர்ந்து வந்தாலும், மாளிகை டெலிவரியானது குறிப்பிடத்தக்க நேரத்தில் விரைவில் டெலிவரி செய்யப்படுவதில்லை.

ஏற்கனவே சில நிறுவனங்கள் ஹோம் டெலிவரி செய்து வந்தாலும், அதனை டெலிவரி செய்வதற்காக பல மணி நேரங்கள் எடுத்துக் கொள்கின்றன.

அதிலும் தற்போதுள்ள காலகட்டங்களில் குறிப்பாக நகரப்பகுதிகளில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர விரும்புவதில்லை. ஆக அனைத்தையும் ஆன்லைனில் ஆர்டர் செய்து விட்டு வீட்டிலேயே இருக்க நினைக்கின்றனர். எனினும் காய்கறி என சில அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைக்கு செல்ல வேண்டியுள்ளது.

ஸ்விக்கியின் அதிரடி திட்டம்

ஸ்விக்கியின் அதிரடி திட்டம்

ஆக இப்படி நாட்டில் நிலவி வரும் நெருக்கடிக்கு மத்தியில், மளிகை பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை டெலிவரி செய்வதற்காக இன்ஸ்டாமார்ட்டை உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ஸ்விக்கி நிறுவனம் 45 நிமிடங்களுக்குள் இந்த டெலிவரியை செய்து முடிக்கும் என்றும் கூறப்படுகிறது.

எத்தனை பொருட்கள்?

எத்தனை பொருட்கள்?

ஸ்விக்கி தனது டார்க் ஸ்டோர்ஸ் மூலம் சுமார் 2,500 பொருட்களை டெலிவரி செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த டார்க் ஸ்டோர்ஸ் ரீடெயிலர்களுக்கு சப்ளை செய்யும் கடைகளாக மட்டுமே இருக்கும். அதாவது இந்த டார்க் ஸ்டோர்ஸ் ஸ்விக்கிக்கு சப்ளை செய்யும் சப்ளையர்களாக மட்டுமே இருப்பார்கள். இங்கு நேரடியாக நுகர்வோர் சென்று வாங்க முடியாது.

ஆரம்பத்தில் பெங்களூரில் மட்டும் சேவை

ஆரம்பத்தில் பெங்களூரில் மட்டும் சேவை

ஸ்விக்கி செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், பெங்களூரில் 1,800 - 2,500 சதுர அடியில் சுமார் 10 டார்க் ஸ்டோர்கள் உள்ளன. 5 - 6 கிலோமீட்டர் சுற்றளவில் 85 - 90 சதவீத பகுதிகளை உள்ளடக்கியது. ஆரம்பத்தில் இன்ஸ்டாமார்ட் சேவை குருகிராமில் தொடங்கி பெங்களூரில் இயங்கும் என்றும் தி எக்னாமிக் டைம்ஸில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மளிகை டெலிவரி

மளிகை டெலிவரி

ஸ்விக்கியின் மளிகை விநியோக வியாபாரத்தில் இது ஒரு புதிய நுழைவு அல்ல. ஸ்விக்கி 12 மாதங்களுக்கும் மேலாக மளிகை விநியோகத்தை செய்து வருகிறது. கடந்த பிப்ரவரி 2019ல் ஸ்விக்கி "ஸ்விக்கி ஸ்டோர்ஸ்" தொடங்கியது. இது வாடிக்கயாளர்களுக்கு தினசரி அத்தியாவசிய பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்வதை நோக்கமாகக் கொண்டது.

நுகர்வோரின் தேவையை பூர்த்தி செய்யும்

நுகர்வோரின் தேவையை பூர்த்தி செய்யும்

இந்த நிலையில் இன்ஸ்டாமார்ட் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் ஸ்விக்கி ஸ்டோர்ஸ் அதன் சேவையை தொடரும் என்றும் கூறப்படுகிறது. ஆக இந்த வசதிகளானது நுகர்வோரின் தடையற்ற மளிகை தேவைகளை நிவர்த்தி செய்யும் என்றும் ஸ்விக்கியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

எப்போது வரை டெலிவரி

எப்போது வரை டெலிவரி

ஸ்விக்கியின் இன்ஸ்டாமார்ட் ஐஸ் க்ரீம்கள், இறைச்சிகள், பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவற்றின் விநியோக சேவையை காலை 7 மணி முதல் இரவு 12 மணி வரை தொடரும் என்றும் தெரிவித்துள்ளது. ஸ்விக்கியின் போட்டியாளரான சோமேட்டோ, பல இடங்களில் மளிகை விநியோக சேவையை குறைக்கத் தொடங்கியுள்ளது. எனினும் அமேசான், பிக் பாஸ்கெட், டன்ஸோ, ரிலையன்ஸின் ஜியோமார்ட் பிளிப்கார்டின் குயிக் சேவை , ஸ்விக்கி கடுமையான போட்டியினை கொடுக்கலாம்.

ஜியோமார்ட் டெலிவரி

ஜியோமார்ட் டெலிவரி

ரிலையன்ஸின் ஜியோமார்ட் நிறுவனம் கடந்த மே மாதம் முதல் தனது சேவையினை தொடங்கியுள்ள நிலையில், இது மளிகை மற்றும் உணவு பொருட்களை டெலிவரி செய்து வருகின்றது. இது தினசரி 4 லட்சம் ஆர்டர்கள் பெறுவதாகவும் ஜியோமார்ட் தெரிவித்துள்ளது.

பிளிப்கார்ட்டின் 90 நிமிட டெலிவரி

பிளிப்கார்ட்டின் 90 நிமிட டெலிவரி

பிளிப்கார்டு அறிமுகம் செய்துள்ள பிளிப்கார்டு குவிக் சேவையின் கீழ், மளிகை பொருட்கள் உள்ளிட்ட பல சேவைகளை டெலிவரி செய்ய பிளிப்கார்ட் அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் 90 நிமிடத்தில் டெலிவரி செய்வதாகவும் தெரிவித்துள்ளது. இந்த சேவையானது காலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை பிளிப்கார்ட் செய்து வருகிறது. இதற்கு குறைந்தபட்ச கட்டணம் 29 ரூபாயாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Swiggy plans to launch 45 min grocery delivery and household items

Swiggy plans to launch 45 min grocery delivery and household items, also Swiggy is planning to offer about 2,500 items
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X