ஸ்விக்கி ஓனருக்கு ஷாக் கொடுத்த பெங்களூர்வாசிகள்.. அநியாயம் பண்றீங்கடா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் இண்டர்நெட் பயன்படுத்தும் அனைவருமே தற்போது டிஜிட்டல் சேவை நிறுவனங்களின் வாடிக்கையாளராக மாறிவிட்டோம்.

இந்த நிலையில் ஆன்லைன் உணவு டெலிவரி சேவை நிறுவனங்கள் இதில் அதிகப்படியான தொகையை ஒவ்வொரு ஆர்டருக்கும் பெறுகிறது, இதேவேளையில் ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து பெறப்பட்டும் சாராசரி வருமானம் பிற துறை நிறுவனங்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளது.

இந்த நிலையில் இந்தியாவின் 2வது உணவு டெலிவரி சேவை நிறுவனம், குவிக் டெலிவரி சேவை நிறுவனமாக இருக்கும் ஸ்விக்கி 2022 ஆம் ஆண்டில் மக்கள் எப்படி எல்லாம் உணவு பொருட்களை ஆர்டர் செய்துள்ளார்கள் எனத் தரவுகளை வெளியிட்டு உள்ளது.

டிஜிட்டல் ரூபாய் இப்படி தான் இருக்கும்.. எப்படி பயன்படுத்த வேண்டும்..? - வீடியோ டிஜிட்டல் ரூபாய் இப்படி தான் இருக்கும்.. எப்படி பயன்படுத்த வேண்டும்..? - வீடியோ

ஸ்விக்கி நிறுவனம்

ஸ்விக்கி நிறுவனம்

ஸ்விக்கி நிறுவனம் ஒவ்வொரு வருடமும் மக்கள் எதை அதிகளவில் ஆர்டர் செய்துள்ளார், எந்த நகரத்தில் அதிகம் ஆர்டர் செய்துள்ளார்கள், இப்படிப் பல முக்கியமான தரவுகளை வெளியிடும்.

வழக்கம் போல் பிரியாணி

வழக்கம் போல் பிரியாணி

அந்த வகையில் 7வது ஆண்டாகப் பிரியாணியைத் தான் மக்கள் அதிகளவில் ஆர்டர் செய்து மக்களுக்கு மிகவும் பிடித்த உணவாக உள்ளது. அதாவது ஒரு நொடிக்கு 2 பிரியாணி ஆர்டர்களைப் பெற்றுள்ளது ஸ்விக்கி. இதைத் தாண்டி பல முக்கியமான விஷத்தை ஸ்விக்கி வெளியிட்டு மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அதிகப்படியான தொகை கொண்ட ஆர்டர்

அதிகப்படியான தொகை கொண்ட ஆர்டர்

ஸ்விக்கி தளத்தில் பெங்களூரை சேர்ந்த ஒருவர் தீபாவளி பண்டிகையின் போது ஓரே ஆர்டருக்கு சுமார் 75,378 ரூபாயை செலவு செய்து உணவு பொருட்களை ஆர்டர் செய்துள்ளார். இந்த வருடத்திலேயே ஸ்விக்கி தளத்தில் இதுதான் மிகவும் காஸ்ட்லியான சிங்கிள் ஆர்டர்.

இவரைத் தொடர்ந்து புனே-வில் ஒருவர் தனது டீம்-க்கு பர்கர் மற்றும் ப்ரைஸ் வாங்குவதற்காக சுமார் 71,229 ரூபாய் செலவு செய்துள்ளார்.

அதிக எண்ணிக்கை

அதிக எண்ணிக்கை

இதேபோல் குருகிராம்-ஐ சேர்ந்த ஒரு நபர் ஸ்விக்கி தளத்தில் சுமார் 1,542 முறை ஆர்டர் செய்துள்ளார். இவர்தான் 2022 ஆம் ஆண்டில் அதிகப்படியான ஆர்டர்களைச் செய்த நபராக உள்ளார்.

அதிகத் தொகை

அதிகத் தொகை

மேலும் 2022 ஆம் ஆண்டில் மொத்தமாக ஸ்விக்கி தளங்களில் அதிகத் தொகைக்கு ஆர்டர் செய்த நபராகப் பெங்களூரை சேர்ந்த ஒருவர் 16.6 லட்சம் ரூபாய்க்கு மளிகை பொருட்களை ஆர்டர் செய்து ஸ்விக்க உயர்மட்ட நிர்வாகத் தலைவர்களையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

16.6 லட்சம் ரூபாய்க்கு என்ன வாங்கியிருப்பார் கமெண்ட் பண்ணுங்க..

ஐஸ் கியூப், கறி

ஐஸ் கியூப், கறி

ஸ்விக்கி தளத்தில் ஐஸ் கியூப் வாங்குவதில் பெங்களூர் மக்கள் முதல் இடத்தில் உள்ளனர்.

இதேபோல் கறி வாங்குவதில் ஹைதராபாத் மற்றும் சென்னை முதன்மையான இடத்தில் உள்ளனர்.

இந்தியா முழுவதிலும் இருந்து சிக்கன் வாங்குவதற்காக மட்டும் சுமார் 29.86 லட்சம் ஆர்டர்கள் குவிந்துள்ளது.

வேகமான டெலிவரி

வேகமான டெலிவரி

2022 ஆம் ஆண்டில் வேகமான டெலிவரி பட்டியலில் பெங்களூர் ஆர்டர் வந்துள்ளது. அதாவது வெறும் 50 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு உணவகத்தில் இருந்து ஆர்டர் வந்துள்ளது. இதை வெறும் 1.03 நிமிடத்தில் டெலிவரி செய்யப்பட்டு உள்ளது.

50 மீட்டரில் இருக்கும் ஒரு கடைக்குச் செல்ல முடியாத அளவுக்கு மக்களைச் சோம்பேறி ஆக்குகிறதா இந்த டிஜிட்டல் சேவை தளங்கள்.

முதல் ஆர்டர்கள்

முதல் ஆர்டர்கள்

இந்த வருடம் ஸ்விக்கி ஸ்ரீநகர், போர்ட் பிளேர், மூணார், ஐஸ்வால், ஜல்னா, பில்வாரா போன்ற பல நகரங்களில் வர்த்தகத்தைத் துவங்கியுள்ளதால் நாட்டின் பல பகுதிகளில் இருந்து முதல் வாடிக்கையாளர்களைத் தனது ஸ்விக்கி மற்றும் இன்ஸ்டாமார்ட் தளத்தில் பெற்றுள்ளதை பெருமைக்கு உரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

5 கோடி ஆர்டர்கள்

5 கோடி ஆர்டர்கள்

ஸ்விக்கி நிறுவனத்தின் குவிக் காமர்ஸ் வர்த்தகப் பிரிவான ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் தளத்தில் இந்த வருடம் 5 கோடி ஆர்டர்களைப் பெற்றுள்ளது. இதில் அதிகப்படியான ஆர்டர்களைச் செய்த நகரங்கள் பட்டியலில் பெங்களூர், டெல்லி, மும்பை ஆகியவை இடம்பெற்றுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Swiggy users shocked whole indians with 2022 India Swiggy'd reports

Swiggy users shocked whole indians with 2022 India Swiggy'd reports
Story first published: Friday, December 16, 2022, 15:44 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X