எலக்ட்ரிக் பைக் பயன்படுத்தினால் ஒவ்வொரு வருடமும் 22,000 ரூபாய் சேமிக்கலாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகம் முழுவதும் எலக்ட்ரிக் கார் மற்றும் பைக்குகளுக்கு மாறி வரும் நிலையில் இந்தியாவில் மிகவும் மெதுவாக இந்த மாற்றத்தைக் கையாண்டு வருகிறோம். இதற்கு ஏற்றார் போல் எலக்ட்ரிக் வாகனங்களின் விலை பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை விடவும் அதிகமாக இருப்பதால் மக்கள் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ளத் தயங்கி வருகிறார்கள்.

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன தயாரிப்புக்காக மத்திய அரசு பல திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது, இதேவேளையில் இந்தியாவில் இருக்கும் பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்கவும், அதற்கான ஆய்வுகளிலும் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் டெல்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் காலாட் எலக்ட்ரிக் வாகனங்கள் பற்றிய புதிய பார்வையை முன்வைத்துள்ளார்.

எலக்ட்ரிக் வாகனங்கள்

எலக்ட்ரிக் வாகனங்கள்

டெல்லி அரசு சார்பில் சுற்றுச்சூழல்-ஐ பாதுகாக்கும் 'Switch Delhi Campaign' துவங்கப்பட்டு உள்ள நிலையில், டெல்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் காலாட் தனது டிவிட்டர் கணக்கில் மின்சாரம் வாகனங்கள் மற்றும் அதன் பயன்பாட்டின் மூலம் ஏற்படும் நன்மை ஆகியவற்றைப் பற்றிப் பல முக்கியமான கருத்துக்களை டிவிட்டர் வாயிலாக டெல்லி மக்களுக்குத் தெரிவித்துள்ளார்.

22,000 ரூபாய் சேமிப்பு

22,000 ரூபாய் சேமிப்பு

'Switch Delhi Campaign'-ன் முதல் வாரத்தில் இருச்சக்கர வாகனத்தின் இருந்து துவங்கப்படுகிறது. பெட்ரோல் ஸ்கூட்டர் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குவதன் அல்லது முழுவதுமாக மாறுவதன் மூலம் வருடத்திற்கு 22,000 ரூபாய் சேமிக்க முடியும். இதேபோல் பெட்ரோலில் இயங்கும் பைக்குகளை விடுத்து எலக்ட்ரிக் பைக்குகளுக்கு மாறுவதன் மூலம் வருடம் 20,000 ரூபாய் சேமிக்க முடியும் எனக் கைலாஷ் காலாட் தனது முதல் டிவிட்டில் தெரிவித்தார்.

சுற்றுசூழல் நன்மைகள்

சுற்றுசூழல் நன்மைகள்

எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதில் இருக்கும் அரசின் சலுகைகளைத் தாண்டி சுற்றுசூழல்-க்கு பல நன்மைகள் உள்ளது. சராசரியாக ஒரு பெட்ரோல் பைக்-ஐ விடுத்து எலக்ட்ரிக் பைக்-ஐ பயன்படுத்துவதன் மூலம் 1.98 டன் கார்பன் வெளியேற்றத்தைத் தடுக்க முடியும், இது கிட்டத்தட்ட 11 மரங்களை நடுவதற்குச் சமம் என அடுத்த டிவீட்டில் கைலாஷ் காலாட் தெரிவித்துள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால்

இந்தப் பரப்புரை மூலம் டெல்லி மக்கள் பெட்ரோல் மூலம் இயக்கும் பைக் மற்றும் ஸ்கூட்டரை விடுத்து எலக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்தத் துவங்க வேண்டும் என்பதை அடிப்படை நோக்கமாக உள்ளது. மேலும் 'Switch Delhi Campaign' திட்டத்தில் பிப்ரவரி 4ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் துவங்கி வைத்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Switching from Petrol to electric bike can save upto Rs.22000 every year

Switching from Petrol to electric bike can save upto Rs.22000 every year
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X