ரெசிஷன் நேரத்தில் இப்படி ஒரு கம்பெனியா? 52 மாத சம்பளம் போனஸ்.. அசந்துபோன ஊழியர்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தைவான் நாட்டின் மிகவும் பிரபலான சரக்கு கப்பல் போக்குவரத்து நிறுவனமான எவர்கிரீன் மரைன், 2022 ஆம் ஆண்டில் சிறப்பா லாபத்தைப் பதிவு செய்தது. இதை தனது ஊழியர்கள் உடன் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் போனஸ் அளிக்க முடிவு செய்தது.

 

போனஸ் தான் இது என்ன பெரிய விஷயம் என நீங்கள் கேட்பது புரிகிறது. பொதுவாக நிறுவனங்கள் போன்ஸ் கொடுத்தல் ஒரு நாள் சம்பளமோ அல்லது அதிகப்படியாக ஒரு மாத சம்பளத்தை அளிக்கும்.

ஆனா எவர்கிரீன் மரைன் நிறுவனத்தின் ஓனர் பெரிய மனசுகாரர் போல.. ஊழியர்களுக்கு போனஸ் தொகையை அளிக்க கொடுத்துள்ளார்.

 தொடர் இழப்பு..ரூ.2 லட்சம் கோடி மாயம்.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..! தொடர் இழப்பு..ரூ.2 லட்சம் கோடி மாயம்.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..!

எவர்கிரீன் மரைன்

எவர்கிரீன் மரைன்

எவர்கிரீன் மரைன் 2022 ஆம் ஆண்டில் சிறப்பா லாபத்தைப் பதிவு செய்தது தொடர்ந்து தனது ஊழியர்களுக்கு தலா 10 முதல் 52 மாதங்கள் வரையிலான சம்பள தொகையை ஆண்டு இறுதி போனஸாக ஊழியர்களுக்கு அளித்துள்ளது.

ஜூனியர் ஊழியர்கள் போனஸ்

ஜூனியர் ஊழியர்கள் போனஸ்

எவர்கிரீன் மரைன் நிறுவனத்தின் ஜூனியர் ஊழியர் ஒரு மாத சம்பளம் NT$40,000 சம்பளம் என்றால் கடந்த வார இறுதியில் NT$2 மில்லியன் மதிப்பிலான போனஸை வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளார். இது கிட்டதட்ட இது நான்கு ஆண்டுகளுக்கான சம்பளம் என அந்நாட்டு ஊடக செய்திகள் தெரிவிக்கிறது.ட

52 மாத பேஅவுட்
 

52 மாத பேஅவுட்

2021 இல் எவர்கிரீன் மரைன் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அதிகப்படியாக 40 மாத போனஸை அளித்த நிலையில் 2022 ஆம் ஆண்டில் 52 மாத பேஅவுட் அளித்துள்ளது அனைத்து துறை ஊழியர்களையும் வியக்க வைத்துள்ளது.

வரலாற்று போனஸ்

வரலாற்று போனஸ்

தைவான் நாட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த எவர்கிரீன் மரைன் நிறுவனம் இதுவரை செலுத்திய மிகவும் அதிகப்படியான ஆண்டு இறுதி போனஸ் ஆக இது உள்ளது. இது எவர்கிரீன் மரைன் நிர்வாகத்தின் சாதனையாக பார்க்கப்படுகிறது.

கொரோனா காலம்

கொரோனா காலம்

கொரோனா தொற்றுநோய் காலத்தில் உலக நாடுகள் மத்தியிலான போக்குவரத்து தடை மற்றும் லாக்டவுன் ஆகியவற்றின் மூலம் எவர்கிரீன் மரைன் நிறுவனத்தின் வர்த்தகம் அதிகளவில் பாதிக்கப்பட்டது.

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி

ஆனால் 2022ஆம் ஆண்டில் சர்வதேச சந்தையில் சில முக்கியமான பிரச்சனைகள் இருந்தாலும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகம் சிறப்பாக இருந்தது.

கப்பல் போக்குவரத்து விலை

கப்பல் போக்குவரத்து விலை

இதேவேளையில் உலகளாவிய கன்டெய்னர் ஷிப்பிங் லைன்களில் வர்த்தகம் மீண்டு வந்தது மட்டும் அல்லாமல் கப்பல் போக்குவரத்து கட்டணங்கள் பெரிய அளவில் அதிகரித்த காரணத்தால் இந்நிறுவனம் 2022 இன் முதல் மூன்று காலாண்டுகளில் மட்டும் சுமார் NT$304.35 பில்லியன் நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது.

எவர்கிரீன் விமான வணிக

எவர்கிரீன் விமான வணிக

எவர்கிரீன் மரைன் ஊழியர்கள் 52 மாத போனஸ் தொகை உடன் கொண்டாடும் போது, ​​அதன் தாய் நிறுவனமான எவர்கிரீன் குழுமத்தின் பிற பிரிவுகளில் உள்ள தொழிலாளர்கள், குறிப்பாக விமான வணிக பிரிவில் இருக்கும் ஊழியர்கள் மிகவும் சிறிய அளவிலான போனஸ் தொகை மட்டுமே பெற்றதாக தெரிவித்துள்ளனர்.

விமான பிரிவு ஊழியர்கள்

விமான பிரிவு ஊழியர்கள்

புத்தாண்டு வாரத்தில் Evergreen Airline Services (EGAS) நிறுவனத்தின் கிரவுண்ட் ஸ்டாப் அனைவரும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்ட காரணத்தால் 4000 பயணிகள் தைபே நகரின் Taoyuan விமான நிலையத்தில் பாதிக்கப்பட்டனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Taiwan Evergreen Shipping company announce upto 52 months salary as bonus

Taiwan Evergreen Shipping company announce upto 52 months salary as bonus
Story first published: Friday, January 6, 2023, 19:58 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X