டாடா-வுக்கு உதவ வரும் தைவான் PSMC.. இனி தான் ஆட்டமே இருக்கு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பில் உலகின் முக்கிய ஹப் ஆக மாற வேண்டும் என்பது மட்டும் அல்லாமல் சீனாவுக்கு மாற்றாக இந்திய வளர வேண்டும் என்பதற்காக மத்திய அரசு பல திட்டங்களையும், சலுகைகளை அறிவித்துள்ளது.

இந்த திட்டம் பெரிய அளவில் பலன் அளித்திருந்தாலும், இதன் உண்மையான பலன்களை இன்னும் இந்திய பெறவில்லை.

இதற்கு முக்கியமான காரணம் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்திக்கான தளம் இருந்த போதிலும், இதன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வேகத்தை குறைக்கும் விதமாக செமிகண்டக்டர் சிப் தட்டுப்பாடு இந்தியாவில் மிகவும் அதிமாக உள்ளது.

இந்தியா விரைவில் முதல் குளோபல் பின்டெக் நாடாக மாறும்.. பிரதமர் மோடி நம்பிக்கை..! இந்தியா விரைவில் முதல் குளோபல் பின்டெக் நாடாக மாறும்.. பிரதமர் மோடி நம்பிக்கை..!

தைவான்

தைவான்

இப்பிரிவில் இந்தியாவில் ஒரு நிறுவனம் கூட இல்லாமல் இருக்கும் வேளையில் பல உள்நாட்டு நிறுவனங்கள் இறங்கியிருந்தாலும், இத்துறையில் இந்திய நிறுவனங்களுக்கு போதுமான அனுபவம் இல்லாத நிலையில் தைவான் நிறுவனம் உதவி செய்ய தயாராகியுள்ளது.

 செமிகண்டக்டர் சிப்

செமிகண்டக்டர் சிப்

இந்தியா செமிகண்டக்டர் சிப் தயாரிப்பில் சிறந்து விளக்க வேண்டும் என்பதற்காக PLI திட்டத்தின் கீழ் மிகப்பெரிய தொகையிலான சலுகைகளை அறிவித்துள்ளது மத்திய அரசு. இந்த நிலையில் 3 பெரிய நிறுவனங்களும், பல சிறிய நிறுவனங்கள் செமிகண்டக்டர்க் சிப் சார்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் தனது வர்த்தகத்தையும், தயாரிப்பை துவங்க தயாராக உள்ளது.

செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு

செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு

இந்த நிலையில் இந்தியாவில் செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு தளத்தை அமைக்க இந்தியாவுக்கும், இந்திய நிறுவனங்களுக்கும் உதவ தைவான் நாட்டின் PSMC என சுருக்கமாக அழைக்கப்படும் Powerchip Semiconductor Manufacturing Corp தயாராகியுள்ளது.

  ஹுவாங் சோங்ரென்

ஹுவாங் சோங்ரென்

தைவான் நாட்டின் 3வது பெரிய செமிகண்டக்டர் ஃபவுண்டரி நிறுவனமாக விளங்கும் Powerchip Semiconductor Manufacturing Corp தலைவர் ஹுவாங் சோங்ரென், இந்திய அரசாங்கத்துடன் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட பிஎஸ்எம்சி தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.

சீனா

சீனா

சீனாவில் கூட்டணி முயற்சியில் பல செமிகண்டக்டர் சிப் தொழிற்சாலைகளை அமைப்பதில் அனுபவம் பெற்ற பிஎஸ்எம்சி, இந்தியாவில் பெரிய உள்ளூர் நிறுவனங்களான வேதாந்தா அல்லது டாடா போன்ற நிறுவனங்களுக்கு செமிகண்டக்டர் சிப் தொழிற்சாலைகளை அமைப்பதற்கும், Fabrication பிரிவில் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க தயாராக உள்ளது.

தைவான் அதிகாரிகள்

தைவான் அதிகாரிகள்

செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு நிறுவனங்களை சேர்ந்த தைவான் நாட்டின் அதிகாரிகள் சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் செமிகண்டக்டர் சிப் தொழிற்சாலைகளை அமைப்பதற்காக சாத்தியமான தளங்களைக் கண்டறிய குஜராத்தில் உள்ள தோலேரா ஸ்மார்ட் சிட்டி மற்றும் மொஹாலியில் உள்ள செமி-கண்டக்டர் லேபரட்டரி (எஸ்சிஎல்) ஆகிய பகுதிகளை நான்கு நாள் பயணத்தில் கண்டனர்.

தைவான் PSMC அறிவிப்பு

தைவான் PSMC அறிவிப்பு

இந்த ஆய்வு குழுவில் PSMC அதிகாரிகள் ஒரு பகுதியாக இருந்த நிலையில் தற்போது சீனாவில் பெற்ற அதே வர்த்தகத்தை இந்தியாவில் பெற திட்டமிட்டு தைவான் நாட்டின் 3வது பெரிய செமிகண்டக்டர் ஃபவுண்டரி நிறுவனமாக விளங்கும் PSMC-ன் தலைவர் ஹுவாங் சோங்ரென், இந்திய அரசாங்கத்துடன் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட பிஎஸ்எம்சி தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.

செமிகண்டக்டர் அசெம்பிளி டெஸ்டிங்

செமிகண்டக்டர் அசெம்பிளி டெஸ்டிங்

டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் கீழ் செமிகண்டக்டர் அசெம்பிளி டெஸ்டிங் வர்த்தகத்தை விரைவில் அமைக்கப்பட உள்ளது என டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் கூறியுள்ளார்.

 வேதாந்தா - பாக்ஸ்கான்

வேதாந்தா - பாக்ஸ்கான்

வேதாந்தா - பாக்ஸ்கான் கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய செமிகண்டக்டர் சிப் தொழிற்சாலை குஜராத் மாநிலத்தில் 1000 ஏக்கரில் ரூ.1.54 லட்சம் கோடி முதலீட்டில் உருவாக்க உள்ளது.

கர்நாடகா

கர்நாடகா

கர்நாடகா மாநிலம் நாட்டிலேயே முதலாவதாக இஸ்ரேல் நாட்டின் ISMC நிறுவனத்தின் 3 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டில் உருவாக்கப்படும் சிப் தொழிற்சாலை திட்டத்தைப் பெற்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Taiwan PSMC ready to help India to setting up semiconductor fabrication units

Taiwan PSMC ready to help India to setting up semiconductor fabrication units
Story first published: Saturday, January 14, 2023, 18:22 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X