வாவ்.. பிளாக்செயின் சந்தையில் ஏலம் விடும் இசையமைப்பாளர் ஜிப்ரான்.. உலகின் முதல் NFT இசை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகளவில் வேகமாகப் பிரபலம் அடைந்து வரும் NFT வர்த்தக முறையில் தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடித்த சாஹோ படத்தின் ஒரு தீம் பாடலை இசையமைப்பாளர் ஜிப்ரான் பிளாக்செயின் சந்தையில் ஏலம் விட முடிவு செய்துள்ளார்.

 

ஐபோன்-ஏ வேண்டாம்.. ஆண்ட்ராய்டு-க்கு மாறிய 26 சதவீத வாடிக்கையாளர்கள்..!

Non-Fungible Token என்பதன் சுருக்கமே NFT, கிரிப்டோகரன்சி உருவாக்கப்படும் பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் கீழ் இயங்கும் இந்த என்எப்டி மூலம் டிஜிட்டல் சொத்துக்களைப் பாதுகாப்பான முறையில் விற்பனை செய்ய முடியும்.

NFT என்றால் என்ன..?

NFT என்றால் என்ன..?

அதாவது ஒரு டிஜிட்டல் புகைப்படம், ஒரு ட்வீட் போன்றவற்றை டிஜிட்டல் பாதுகாப்புடன் விற்பனை செய்ய உதவுவது தான் இந்த NFT-யின் பயன்பாடு. சமீபத்தில் கூட டிவிட்டர் நிறுவனத்தின் தலைவர் ஜாக் டோர்ஸி, எலான் மஸ்க் ஆகியோர் NFT முறையில் சில டிஜிட்டல் சொத்துக்களை விற்பனை செய்தனர்.

இசையமைப்பாளரான ஜிப்ரான்

இசையமைப்பாளரான ஜிப்ரான்

இந்த வாயிலாகத் தற்போது தமிழ்நாட்டின் முன்னணி இசையமைப்பாளரான ஜிப்ரான் சாஹோ படத்திற்கு உருவாக்கிய Sahoo Hero Theme பெயரில் உருவாக்கிய ஒரு தீம் பாடலை NFT முறையில் ஏலம் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார்.

முதல்வர் முக.ஸ்டாலின் நிவாரண நிதி

முதல்வர் முக.ஸ்டாலின் நிவாரண நிதி

இந்த ஏலத்தில் கிடைக்கும் பணத்தை அப்படியே தமிழ்நாட்டு முதல்வர் முக.ஸ்டாலின் நிவாரண நிதிக்கும், கொரோனா காலத்திலும் இடைவிடாமல் பணியாற்றும் இசைக் கலைஞர்களுக்கும் அளிக்கப்படும் என ட்வீட் செய்துள்ளார்.

சாஹோ படம்
 

சாஹோ படம்

NFT முறையில் விற்பனை செய்யப்படும் முதல் டிஜிட்டல் இசை இது என்றும், சாஹோ படத்தின் இயக்குனர் தவிர இந்தப் பாடலை யாரும் இதுவரை கேட்டது இல்லை என்றும் தனது டிவிட்டர் கணக்கில் இசையமைப்பாளர் ஜிப்ரான் தெரிவித்துள்ளார்.

இதை வாங்க விரும்புவோர் இணைப்பை கிளிக் செய்யவும் bit.ly/2TuZEXy

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: tamil auction music director
English summary

Tamil Music director Ghibran auctions unreleased Prabhas 'Saaho' theme song as NFT

Tamil Music director Ghibran auctions unreleased Prabhas 'Saaho' theme song as NFT
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X