தமிழ்நாட்டுக்கு அடித்த ஜாக்பாட்.. 50 வருட வட்டியில்லா கடன்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு மாநிலங்களின் வளர்ச்சியும், கட்டமைப்பும் மிகவும் முக்கியம்.

இந்த நிலையில் மத்திய அரசு நாட்டின் முக்கியமான மாநிலங்களில் பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்ட கணக்கீட்டில் ரேட்டிங் அளித்துள்ளது.

இந்த ரேட்டிங் அடிப்படையில் சுமார் 13 மாநிலங்கள் வட்டியில்லா கடனை மத்திய அரசிடம் இருந்து பெற தகுதி பெற்றுள்ளது. இதில் தமிழ்நாடும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் வளர்ச்சிக்கு இது தான் சரியான வழி.. ஐஎம்எஃப் கூறியது என்ன? இந்தியாவின் வளர்ச்சிக்கு இது தான் சரியான வழி.. ஐஎம்எஃப் கூறியது என்ன?

 மத்திய அரசு

மத்திய அரசு

மத்திய அரசு 2023 ஆம் நிதியாண்டில் சுமார் 7.5 லட்சம் கோட ரூபாய் முதலீட்டு செய்த பட்ஜெட் அறிவித்திருந்தது, இதில் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வட்டியில்லா கடனை மாநிலங்களுக்கு 50 வருடம் அளிக்க உள்ளதாகவும் அறிவித்தது.

 ICRA அமைப்பு

ICRA அமைப்பு

இந்த நிலையில் ICRA அமைப்பு செய்த ஆய்வில் மத்திய அரசின் 50 வருட வட்டியில்லா கடனை பெற 13 மாநிலங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதில் பெரும் பொருளாதாரம் கொண்ட மாநிலங்களான மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத் ஆகியவை இடம்பெற்றுள்ளது.

 13 மாநிலங்கள்

13 மாநிலங்கள்

இதோடு ஆந்திரப் பிரதேசம், ஹரியானா, கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், தெலுங்கானா, உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களும் இப்பட்டியலில் உள்ளது.

 4 வருட கணக்கீடு

4 வருட கணக்கீடு

நிதியாண்டு 22ல் மாநில அரசுகளால் உயர்த்தப்பட்ட வரவு-செலவுத் திட்டக் கடன்களை அவற்றின் நிகரக் கடன் உச்சவரம்பிலிருந்து (NBC) யூனியன் அரசு 4 வருடங்களுக்குச் சரிசெய்யும், இந்த 4 வருட காலம் 2023-ஆம் நிதியாண்டில் இருந்து 2026 ஆம் நிதியாண்டு வரையில் இருக்கும்.

 13 மாநிலங்கள் CAPEX அளவு

13 மாநிலங்கள் CAPEX அளவு

இந்த 13 மாநிலங்கள் 2022 ஆம் ஆண்டில் இருந்த 4.1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான CAPEX அளவிடவும் 81 சதவீத அதிக அதாவது 7.4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மூலதன செலவினத்தைக் கொண்டு உள்ளது என ICRA அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியாக ரேட்டிங் கொடுத்துள்ளது.

ரேட்டிங்

ரேட்டிங்

இந்த ரேட்டிங் அடிப்படையில் தான் எந்த மாநிலத்திற்கு எவ்வளவு கடன் அளிக்கப்படும் என்பதைக் கணக்கிடப்படுகிறது. ஆந்திரப் பிரதேசம், குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் போதுமான நிதி நிலை இருக்கும் காரணத்தால் ரோட்டிங் அடிப்படையில் முழுமையான அளவுக்கான கடனை பெற வாய்ப்பு உள்ளது என ICRA தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tamil Nadu 13 other states could get 50 year interest-free loans on ICRA ratings

Tamil Nadu 13 other states could get 50 year interest-free loans on ICRA ratings
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X