100 ஏக்கர் பரப்பளவில் மஞ்சள் ஆராய்ச்சி மையம்.. பட்ஜெட்டில் ஈரோட்டிற்கு சூப்பர் அறிவிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மஞ்சள் மாநகரம் என்று பெருமையாக அழைக்கப்படும் ஈரோட்டிற்கு, மேலும் பெருமை சேர்க்கும் வகையில் வேளாண் பட்ஜெட்டில் ஒரு சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது.

 

அது மஞ்சள் மாநகரை பெருமைபடுத்தும் விதமாக ஈரோட்டில் 100 ஏக்கர் பரப்பளவில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது மஞ்சள் விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

ஓய்வுகாலத்திற்கு ரூ.2 கோடி.. அரசின் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்..!

எங்கு அமையப்போகிறது?

எங்கு அமையப்போகிறது?

எனினும் இந்த திட்டம் எங்கு அமல்படுத்தப்படும், என்ற முழுமையான விவரங்கள் வெளியிடப்படவில்லை. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரோட்டில் மஞ்சள் சந்தைக்கு, ஈரோடு மட்டும் அல்ல, மாநிலத்தின் மற்ற பகுதிகளில் இருந்தும், கர்நாடகாவில் இருந்தும் மஞ்சள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றது.

உற்பத்தியினை அதிகரிக்கலாம்

உற்பத்தியினை அதிகரிக்கலாம்

இந்த ஆராய்ச்சி மையம் அமைந்தால் அவற்றின் உற்பத்தி திறனை அதிகரிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படலாம், பல சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயல்படலாம். இதன் மூலம் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி, மனித ஆற்றலையும் பயன்படுத்தி முறையான பயிற்சியும் அளிக்கப்படும். இதன் மூலம் உற்பத்தியினை அதிகரிக்க முடியும்.

மேம்படுத்தப்பட்ட ரகங்கள்
 

மேம்படுத்தப்பட்ட ரகங்கள்

மஞ்சள் பற்றிய அறிவியல் பூர்வமான தகவல்களின் களஞ்சியமாக இந்த ஆராய்ச்சி மையம் மாறலாம். இந்த ஆராய்ச்சி மையங்கள் பழங்கால மற்றும் உயர் தொழில்நுட்ப முறைகளிலிருந்து மேம்படுத்தப்பட்ட ரகங்களை உருவாக்கி வேறுபாடுகளையும் கண்டறிந்து பராமரிக்கப்படும். இதன் மூலம் பழமை மாறாமல் பாரம்பரிய மஞ்சள் உற்பத்தியினை அதிகரிக்க முடியும்

ஈரோட்டில் இருந்து ஏற்றுமதி

ஈரோட்டில் இருந்து ஏற்றுமதி

மஞ்சள் பற்றிய மகிமையை நாம் அறிந்திருக்கலாம். உலக அளவில் மஞ்சள் உற்பத்தியில் 91% இந்தியாவில் தான் விளைகிறது. இதில் சுமார் 30% அதிகமாக மஞ்சள் ஈரோடு மாவட்டத்தில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. உலக சந்தையில் ஈரோடு மஞ்சளுக்கு தனி மவுசு உண்டு எனலாம். ஈரோடு மஞ்சள் புவிசார் குறியீடும் பெற்றுள்ளது.

ஈரோட்டில் அதிகளவில் பயிரிடப்படும் விரலி மஞ்சள்

ஈரோட்டில் அதிகளவில் பயிரிடப்படும் விரலி மஞ்சள்

ஈரோட்டின் பெருமையாக போற்றப்படும் மஞ்சள், இன்னும் வரும் காலத்தில் மேம்படுத்தப்படலாம். தமிழகத்தில் சுமார் 1.60 லட்சம் ஏக்கரில் மஞ்சள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் சுமார் 30% ஈரோட்டை சுற்றியுள்ள பகுதிகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக பெண்கள் அதிகம் பயன்படுத்தும் விரலிமஞ்சள் இப்பகுதிகளில் அதிகம் பயிரிடப்படுகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tamil Nadu Agriculture Budget 2021: Tamilnadu govt plans to turmeric research Centre cover an area 100 acres in Erode

Tamil Nadu Agriculture Budget 2021: Tamilnadu govt plans to turmeric research Centre cover an area 100 acres in Erode
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X