தமிழ்நாட்டை ஸ்டார்ட்அப் மாநிலமாக மாற்றுவோம் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நேற்று நடந்த ஸ்டார்ட்அப் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.
தமிழ்நாடு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சார்பில் தொழில் காப்பகங்கள் சந்திப்பு நிகழ்ச்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின், சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தாமோதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மதுரை, திருநெல்வேலி, ஈரோடு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களை முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் திறந்து திறந்துவைத்தார்.
தமிழகத்தில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்
நேற்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தமிழ்நாடு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பார்வையிட்டார். தமிழகத்தில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை பரவலாக்கும் முயற்சி தொடர்ந்து எடுக்கப்படும் என்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கூறினார்.
மதுரை நெல்லை ஈரோடு
இந்த நிகழ்ச்சியில் மதுரை, திருநெல்வேலி, ஈரோடு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனையடுத்து இந்த நிகழ்ச்சியில் அவர் சிறப்புரை ஆற்றினார்.
மேலும் 2 மாநாடுகள்
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதில் தனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றும் இந்த நிதியாண்டின் இறுதியில் மேலும் இரண்டு பெரிய ஸ்டார்ட்அப் மாநாடுகளை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரூ.50 கோடி
மேலும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய உள்ளதாகவும் அதற்கான விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு தொழில்நுட்ப புத்தாக்க மையம்
சென்னை அண்ணா பல்கலையில் 'தமிழ்நாடு தொழில்நுட்ப புத்தாக்க மையம் அமைக்க ரூ.54.06 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கியுள்ளதாகவும், 25 ஆயிரம் சதுரஅடியில் அமையும் இந்த மையம் உலகத்தரம் மிக்க ஸ்டார்ட்அப் நிறுவனங்களை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் தொழில் முனைவோர் தங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்த 'ஸ்டார்ட் அப் தமிழ்நாடு பிராண்ட் லேப்ஸ்' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மானிய நிதி
முன்னதாக இந்த நிகழ்ச்சியில் 31 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தொடக்க மானிய நிதியை (டான்சீட்) முதல்வர் முக ஸ்டாலின் வழங்கினார். ஒவ்வொரு ஸ்டார்ட்அப் நிறுவனத்திற்கும் தலா ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.1.55 கோடி ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.
ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் பெண்கள்
31 ஸ்டார்ட்அப்களில், பெண்கள் 16 ஸ்டார்ட்அப்களின் நிறுவனர்கள் என்பது குறிப்பிடத்தக்க தகவல் ஆகும். மேலும் 31 ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் 11 மட்டுமே சென்னையை சேர்ந்தவை என்பதும், மற்ற 20 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மதுரை, நெல்லை, ஈரோடு போன்ற நகரங்களை சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications