தமிழக முதல்வர் அதிரடி.. ஆப்பிள், அமேசான் நிறுவனங்களுக்கு நேரடி அழைப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழ்நாட்டில் கொரோனா பரவலை மிகவும் அதிகமாக உள்ளது, குறிப்பாகச் சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் தினமும் 500க்குக் குறையாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் ஒருபக்கம் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு போராடி வரும் நிலையில் மறுபக்கம் பல்வேறு நிறுவனங்கள் உடனான 17 ஒப்பந்தங்கள் மூலம் சுமார் 15,000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை ஈர்த்துள்ளது.

இதுமட்டும் அல்லாமல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எலக்ட்ரானிக் துறையைச் சார்ந்த 13 சர்வதேச நிறுவனங்களுக்குத் தமிழ்நாட்டில் வர்த்தகத்தையும் உற்பத்தியையும் துவங்க நேரடியாகக் கடிதம் அனுப்பி அழைப்பு விடுத்துள்ளார்.

கொரோனா பாதிப்புகள் இல்லாத இடங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து தளர்த்தப்படும் வரும் நிலையில் வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்பு சந்தையை மேம்படுத்தும் பணிகள் நடத்தப்பட்டு வருகிறது.

Chennai Gold Rate: மீண்டும் எவரெஸ்டைத் தொட்ட தங்கம் விலை! பவுனுக்கு எவ்வளவு ஏற்றம்?Chennai Gold Rate: மீண்டும் எவரெஸ்டைத் தொட்ட தங்கம் விலை! பவுனுக்கு எவ்வளவு ஏற்றம்?

13 தலைவர்கள்

13 தலைவர்கள்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எலக்ட்ரானிக் துறையைச் சார்ந்த 13 சர்வதேச நிறுவனங்களின் தலைவர்களுக்குத் தமிழ்நாட்டில் உற்பத்தி மற்றும் தொழிற்துறையைத் துவங்க நேரடியாக அழைப்பு விடுத்துள்ளார்.

ஆப்பிள் சிஇஓ டிம் குக், சாம்சங் தலைவர் கிம் ஹூயின் சுக், அமேசான் சிஇஓ ஜெப் பீசோஸ், ஹெச்பி தலைவர் Enrique Lores ஆகியிருக்கும் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

 

தமிழ்நாடு

தமிழ்நாடு

இக்கடிதத்தில் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதால் கிடைக்கும் நன்மைகள், முக்கிய அம்சங்கள் குறித்தும், அரசின் ஒத்துழைப்பு மற்றும் நிறுவன வர்த்தக வளர்ச்சிக்கான வாக்குறுதிகள் ஆகியவைவரை குறிப்பிட்டுக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் புதிதாகத் தமிழ்நாட்டில் நிறுவனத்தைத் துவங்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்குப் பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிகிறது.

 

வெளிநாட்டு முதலீடுகள்

வெளிநாட்டு முதலீடுகள்

தமிழ்நாட்டில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் அதிகளவிலான கவனத்தைச் செலுத்தப்பட்டு வருவதாக முதல்வர் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் தான் யாதும் ஊரே என்ற இணையத் தளமும் உருவாக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இத்தளத்தின் மூலம் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடு மற்றும் இதர கோரிக்கைகளைத் தீர்க்கப்படுகிறது.

 

உற்பத்தி

உற்பத்தி

பல சர்வதேச நிறுவனங்கள் தங்களது உற்பத்தி தளத்தை இந்தியா மற்றும் இதர நாடுகளுக்கு இடமாற்றம் செய்யத் திட்டமிட்டு வரும் நிலையில், தமிழ்நாடு அரசு இவ்வர்த்தகங்களை ஈர்க்க திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது.

அனைத்திற்கும் மேலாக லாக்டவுன் காலத்தில் 15 ஒப்பந்தங்கள் மூலம் 15,28 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைத் தமிழ்நாட்டிற்கு ஈர்த்தது சக மாநிலங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tamil Nadu reaches out to Tim Cook and Jeff Bezos for investments from Apple, Amazon

Close on the heels of inking 17 MoUs , attracting over Rs 15,000 crore worth investments to the state, Tamil Nadu chief minister Edappadi K Palaniswami has directly reached out to 13 global heads of prominent companies in the electronic sector.
Story first published: Saturday, May 30, 2020, 15:51 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X