அடிசக்க.. முத்து முத்தா 6 ஒப்பந்தம்.. முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் மே 23-ம் தேதி சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள சென்னையில் இருந்து புறப்பட்டார். இந்த பயணத்தின் முக்கியமான நோக்கமே தமிழக அரசு வெளிநாட்டு நிறுவனங்களை தமிழ்நாட்டில் ஈர்ப்பது தான். இதேபோல் 2024 ஆம் ஆண்டு நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு நிறுவன தலைவர்களை அழைப்பதும் இந்த பயணத்தில் முக்கிய நோக்கமாக உள்ளது.

 

இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் சுற்று பயணத்தின் போது தமிழ்நாடு அரசு மற்றும் அமைப்புகள், பல சிங்கப்பூர் அமைப்புகள் உடன் சுமார் 6 புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஒப்பந்தங்கள் முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் சிங்கப்பூர் போக்குவரத்து துறை மற்றும் வர்த்தக உறவுகள் அமைச்சான எஸ்.ஈஸ்வரன் முன்னிலையில் கையெழுத்தானது.

 
அடிசக்க.. முத்து முத்தா 6 ஒப்பந்தம்.. முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து..!

மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் சுற்று பயணத்தின் தமிழ்நாடு மற்றும் சிங்கப்பூர் சுற்று பயணத்தில் கையெழுத்தான இந்த 6 புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மிகவும் முக்கியமானது சிங்கப்பூரின் Hi-P International நிறுவனத்துடனான ஒப்பந்தம் தான். இந்த நிறுவனம் சென்னையில் சுமார் 312 கோடி ரூபாய் முதலீட்டில் எலக்ட்ரானிக்ஸ் ஸ்பேர் பார்ட்ஸ்-களை தயாரிப்பதற்கான உற்பத்தி தளத்தை அமைக்க உள்ளது.

இதை தொடர்ந்து தமிழ்நாட்டு அரசின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைப்பான Guidance Tamil Nadu மற்றும் சிங்கப்பூர் சேம்பர் ஆப் காமர்ஸ் மற்றும் இன்டஸ்ட்ரீஸ் உடன் R&D துறைகாக பல்கலைகழகம், அரசு மற்றும் தனியார் அமைப்புகள் உடன் இணைந்து செயல்பட புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெளழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் தமிழ்நாட்டில் இருக்கும் நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்வதற்கான உதவிகள் வழங்கப்படும்.

சென்னை மக்கள் குஷி.. அடுத்தடுத்து 4 முக்கிய அறிவிப்பு..! சென்னை மக்கள் குஷி.. அடுத்தடுத்து 4 முக்கிய அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் MSME துறையின் மாபெரும் வளர்ச்சிக்கு வித்திட்ட SIPCOT அரசு அமைப்பு, சிங்கப்பூர் நாட்டின் Singapore-India Partnership Office (SIPO) உடன் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெளழுத்திட்டு உள்ளது. இது MSME நிறுவனங்களுக்கு பெரிய அளவில் பலன் அளிக்கும் என்றால் மிகையில்லை. தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கும் MSME துறையின் வளர்ச்சி மிகவும் முக்கியமானதாக பார்க்கும் வேளையில் இந்த ஒப்பந்தம் பலன் அளிக்கும்.

அடிசக்க.. முத்து முத்தா 6 ஒப்பந்தம்.. முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து..!

இதேபோல் Singapore-India Partnership Office (SIPO) அமைப்பு FaMe TN மற்றும் தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் அமைப்புகளுடன் தொழில்நுட்ப கல்வி மற்றும் ஸ்டார்ட்அப் துறைக்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்தாகியுள்ளது. இது மட்டும் அல்லாமல் Singapore University of Technology and Design உடன் தமிழ்நாட்டு அரசின் கைடென்ஸ் தமிழ்நாடு தொழில்நுட்ப பரிமாற்றத்திற்காக கையெழுத்திட்டு உள்ளது.

இதோடு தமிழ்நாடு ஸ்கில் டெவலப்மென்ட் கார்பரேஷன், ITE Education Services உடன் ஸ்கில் டெவலப்மென்ட், தொழில்நுட்ப பரிமாற்றத்திற்காக கையெழுத்திட்டு உள்ளது. இதோடு நேற்று முக ஸ்டாலின் அவர்கள் Temasek, Sembcorp, CapitaLand ஆகிய 3 முக்கிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை சந்தித்தார். மேலும் சிங்கப்பூர் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் அவர்களை 2024 ஆம் ஆண்டு நடக்கும் குளோபல் இன்வெஸ்டார் மீட்-க்கு அழைப்பு விடுத்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tamil Nadu signs 6 MoUs with Singapore; MK Stalin meets CEOs of Temasek, Sembcorp, CapitaLand

Tamil Nadu signs 6 MoUs with Singapore; MK Stalin meets CEOs of Temasek, Sembcorp, CapitaLand
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X