ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றபோது தமிழ்நாட்டின் நிதி நிலை என்ன..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முதல்வர் ஸ்டாலின் பதவியேற்றபோது தமிழக அரசின் கடந்த ஆட்சிக் காலக் கடன்கள் ஏறத்தாழ 7,77,800 கோடிகள் கடந்த 2020-21 நிதிநிலை அறிக்கையின் படி இருப்பதாகத் தகவல். இந்தக் கடனோடு மாதாந்திர, வருடாந்திர வட்டியும் கூடி கடன் சுமை நாளுக்கு நாள் கூடுகின்றது.

 

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த என்ன செய்யலாம்? பிடிஆர் சொன்னது இதுதான்..!

இந்தக் கடன்கள் மாநில அரசு மற்றும் அதைச் சார்ந்த பொதுத்துறை நிறுவனங்களின் கடன்களை உள்ளடக்கியதாகும்.

51 வணிக நிறுவனங்கள்

51 வணிக நிறுவனங்கள்

தமிழக அரசின் கீழ் 51 வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களின் மொத்தக் கடன் 2018 மார்ச் வரை 1.68 லட்சம் கோடிகள் ஆகும்.

இதற்கு அடிப்படை காரணம் நிறுவனத்தின் வருவாயை விட நடப்புச் செலவுகள் அதிகமாக உள்ளது. அதாவது வருமானத்தை விடச் செலவுகள் அதிகம் உள்ளது. கவலை அளிக்கும் விதமாகத் தற்போது தமிழக நிதி நிலை திருப்திகரமாக இல்லை.

நிலுவை மற்றும் வட்டி தொகை

நிலுவை மற்றும் வட்டி தொகை

நிலுவையில் மற்றும் செலுத்த வேண்டிய வட்டித் தொகை ரூ. 82,730 கோடி (மாநில அரசின் வட்டி ரூ. 53,600 கோடி மற்றும் மாநில பொதுத் துறை நிறுவனங்களின் வட்டி ரூ. 29,130 கோடி) ஆகும்.

8,00,000 கோடி சுமை
 

8,00,000 கோடி சுமை

இன்றைய நிலவரப்படி நிதி நிலைமையைப் பார்த்தால் மாநிலத்தின் கடன் ரூ. 8,00,000 கோடியும் மற்றும் வட்டிக்கான செலவினங்கள் ரூ. 80,000 கோடியுமாக இருக்கும். சுமாராக மாநில குடிமக்கள் ஒவ்வொருவர் மீதும் ரூ. 1,00,000 த்துக்கும் மேல் கடன் சுமை உள்ளதாகக் கருதலாம்.

தமிழ்நாட்டின் வருவாய்

தமிழ்நாட்டின் வருவாய்

2020-21-ம் ஆண்டின் வருவாய் ரூ. 3,13,700 கோடி (மாநில வரிகளில் இருந்து ரூ. 1,09,000 கோடி, மத்திய அரசு வரியில் இருந்து ரூ. 23,039 கோடி மற்றும் இதர வருமானங்கள் ரூ.1,87,000 கோடி) ஆகும். நிதிப் பற்றாக்குறை ரூ.59,000 கோடியாக இருந்தது.

முக்கியப் பணி

முக்கியப் பணி

இந்தக் கடன் சுமைகளைத் தீர்த்து நிலைமையைச் சமன்படுத்த வேண்டியது மட்டுமல்லாமல், கடந்த ஆட்சியில் நடந்த பிழைகளையும் திருத்த வேண்டிய நிலையில் தமிழக முதல்வர் இருக்கின்றார்.

34 துறைகள்

34 துறைகள்

தமிழக அரசின் கீழ் ஏறத்தாழ 34 துறைகள் உள்ளன. இதில் சமூக நலத்துறை, புள்ளிவிவரத் துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, ஆதிதிராவிடர் நலத் துறையிலிருந்து பெரிய வருமானங்கள் மாநில அரசுக்கு வருவதில்லை. மற்ற துறைகளிலிருந்துதான் தமிழக அரசு வருவாயை ஈட்ட வேண்டும். ஏற்கனவே ஜிஎஸ்டி வகையிலும் தமிழகத்திற்கு வரவேண்டிய பங்கு வராமல் இருக்கின்றது.

புள்ளி விவரங்கள் இல்லை

புள்ளி விவரங்கள் இல்லை

சில புள்ளி விவரங்கள் தமிழக அரசின் கடன் நிலவரம் 2021 வரையில் 4.85 லட்சம் கோடியைத் தாண்டும் என்று சொல்லுகின்றது. ஆனால் கடன் குறித்து வெவ்வேறு இலக்காகப் புள்ளி விவரங்கள் இருக்கின்றன.

பல துறைகளில் சரியான மற்றும் முழுமையான புள்ளிவிவரங்கள் இல்லாத காரணத்தால் தீர்க்கமான எண்களை மக்களுக்குக் கொடுக்க முடியாத நிலையில் தமிழக அரசு உள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார்.

CAG தரவுகள்

CAG தரவுகள்

இந்திய செலவுத் தணிக்கைக் குழுவின் (The Comptroller and Auditor General of India) சமீபத்திய அறிக்கையின்படி, தமிழகத்தின் 2020-21-ஆம் ஆண்டின் மொத்த வருவாய் 1,74,256 கோடி ரூபாய்களாகவும், மொத்த செலவினங்கள் 2,66,561 கோடி ரூபாய்களாகவும், மொத்த நிதிப்பற்றாக்குறை 92,305கோடி ரூபாய்களாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tamilnadu financial status before Stalin taking over as Chief Minister of TN: PTR

Tamilnadu financial status before Stalin taking over as Chief Minister of TN: PTR
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X