தமிழ்நாட்டுக்கு வர துடிக்கும் உலகின் மிகப்பெரிய காலணி நிறுவனம் Pou Chen Corp..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆப்பிள் நிறுவனத்திற்கு எப்படிப் பாக்ஸ்கான் நிறுவனம் முக்கியமான சப்ளையராக உள்ளதோ, உலகின் முன்னணி ஷூ பிராண்டுகளுக்கு ஒப்பந்த உற்பத்தியாளராக இருக்கிறது Pou Chen Corp.

 

இப்படி உலகின் மிகப்பெரிய ஒப்பந்த காலணி உற்பத்தியாளராக இருக்கும் Pou Chen Corp தனது உற்பத்தியை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதற்காகப் புதிய உற்பத்தி தளத்தை இந்தியாவில் அதிலும் முக்கியமாகத் தமிழ்நாட்டில் அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

தைவான் நாட்டைச் சேர்ந்த Pou Chen Corp தமிழ்நாட்டில் தொழிற்சாலை அமைக்கும் திட்டம் உறுதியாகும் பட்சத்தில் சுமார் 500 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய உற்பத்தி தளத்தை அமைக்க உள்ளது.

Pou Chen Corp நிறுவனம்

Pou Chen Corp நிறுவனம்

Pou Chen Corp நிறுவனம் முன்னணி காலணி பிராண்டுகளாகன Nike, Adidas, Asics, New Balance, Timberland மற்றும் Salomon பிராண்டுகளின் முக்கிய ஒப்பந்த உற்பத்தியாளராக (OEM / ODM) ஆக உள்ளது. Pou Chen Corp நிறுவனம் வருடத்திற்கு 300 மில்லியன் காலணிகளைத் தயாரிக்கும் திறன் கொண்டது. இதனால் எந்தப் பிராண்டுக்கும் எவ்வளவு வேண்டுமானாலும் தயாரிக்க முடியும்.

தைவான்

தைவான்

தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் படி தைவான் நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு உலகின் பல நாடுகளில் இயங்கி வரும் காலணி உற்பத்தி நிறுவனமான Pou Chen Corp தொழிற்சாலை அமைப்பதற்கான இடம் குறித்து இறுதி முடிவு செய்யும் நிலையில் உள்ளது.

 திருச்சி, விழுப்புரம், தூத்துக்குடி
 

திருச்சி, விழுப்புரம், தூத்துக்குடி

இதேவேளையில் Pou Chen Corp தமிழ்நாட்டு அரசுடன் பல்வேறு சலுகைகள் குறித்த இறுதி முடிவுகளை எடுத்து ஒப்பந்தம் செய்யும் கட்டத்தில் உள்ளது. இப்புதிய தொழிற்சாலை திருச்சி, விழுப்புரம் மற்றும் துறைமுக நகரமான தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் நிலங்களைத் தமிழ்நாடு அரசு முன்வைத்த நிலையில் Pou Chen Corp ஆய்வு செய்து வருகிறது.

தோல் மற்றும் காலணி கொள்கை

தோல் மற்றும் காலணி கொள்கை

தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட தோல் மற்றும் காலணி கொள்கையின் கீழ் தமிழ்நாடு முழுவதும் சுமார் 20-25 உற்பத்தி தொழிற்சாலைகளை நிறுவ இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

50 கிமீ சுற்றளவு

50 கிமீ சுற்றளவு

மேலும் ஒரு காலணி தொழிற்சாலைக்கும் மற்றொரு காலாணி தொழிற்சாலைக்கும் இடையில் குறைந்தபட்சம் 50 கிமீ சுற்றளவு இருக்க வேண்டும் என்பதை அடிப்படை திட்டமாகக் கொண்டு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுக் காலணி தொழிற்சாலைகளை ஈர்க்க திட்டமிட்டு உள்ளது.

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

இந்த 50 கிலோமீட்டர் இடைவெளி மூலம் தமிழ்நாட்டில் பல இடங்கள் வளர்ச்சி அடைய வாய்ப்புகள் உள்ளது. இதேபோல் வேலைவாய்ப்பும் ஒரு மாவட்டத்தில் மட்டும் அல்லாமல் பல மாவட்ட மக்களுக்கும் பிரித்து அளிக்க முடியும். காலணி தொழிற்சாலைகளில் மட்டும் 15000 முதல் 20000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய துணை நிறுவனம்

புதிய துணை நிறுவனம்

தமிழ்நாட்டில் காலணி தொழிற்சாலை அமைக்கும் திட்டங்களின் ஒரு பகுதியாக, Pou Chen Group நிறுவனம் டிசம்பர் 2022 இல் இந்தியாவுக்கான கிளை நிறுவனமாக ஹை குளோரி ஃபுட்வேர் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற புதிய துணை நிறுவனத்தைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tamilnadu: Footwear gaint Pou Chen Corp new manufacturing facility in TN; 500 crore investment soon

Tamilnadu: Footwear gaint Pou Chen Corp new manufacturing facility in TN; 500 crore investment soon
Story first published: Thursday, January 19, 2023, 17:40 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X