தமிழ்நாடு அரசின் புதிய அறிவிப்பு.. 25 லட்சம் வரை குறைந்த வட்டியில் கடன்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழ்நாட்டில் பல துறையைச் சேர்ந்த MSME நிறுவனங்கள் கொரோனா தொற்றுப் பாதிப்புக் காலத்தில் அறிவிக்கப்பட்ட லாக்டவுன், கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் காரணமாக வர்த்தகத்தை இழந்து, நிறுவனம் அல்லது தொழிற்சாலையை மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

இந்நிலையில் கொரோனா-வால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களை மீட்டு எடுக்கும் முயற்சியாகத் தமிழ்நாடு அரசு CARE என்னும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

2022-23 ஆம் ஆண்டில் கோவிட் உதவி மற்றும் தொழில்முனைவோருக்கான நிவாரணம் (CARE) திட்டத்தை இரண்டு பரிவுகளுக்குக் கீழ் செயல்படுத்தத் தமிழ்நாடு அரசு 50 கோடி ரூபாய் அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. அதாவது மானியத்துடன் இணைக்கப்பட்ட கடன் திட்டம் மற்றும் ஊக்கத் திட்டம்.

பல் துலக்க மைக்ரோரோபோட்கள் அறிமுகம்... டூத் பிரஷ் வணிகம் இனி என்ன ஆகும்? பல் துலக்க மைக்ரோரோபோட்கள் அறிமுகம்... டூத் பிரஷ் வணிகம் இனி என்ன ஆகும்?

2 திட்டங்கள்

2 திட்டங்கள்

மானியத்துடன் இணைக்கப்பட்ட கடன் திட்டம் (subsidy-linked credit scheme) என்பது தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட தொழில்முனைவோரை மீண்டும் நிறுவனத்தைத் துவங்கவோ அல்லது புதிதாக ஒரு நிறுவனத்தைத் தாங்களாகவோ அல்லது அவர்களின் சட்டப்பூர்வமான வாரிசுகள் மூலமாகவோ தொடங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தகுதிகள்

தகுதிகள்

2020-21 மற்றும் 2021-22ல் தொற்றுநோய் காலத்தில் பொருளாதார வீழ்ச்சியால் வணிகம் பாதிக்கப்பட்ட தனிநபர்கள்/தனியுரிமை மற்றும் கூட்டாண்மை-யில் இயங்கும் நிறுவனங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியுடையவர்கள். மேலும் இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி மற்றும் சேவைத் துறை நிறுவனங்கள் அடக்கும். "இந்தத் திட்டம் ஓராண்டுக்கு, அதாவது 2022-2023 வரை செயல்படுத்தப்படலாம்" என்று அரசாங்க உத்தரவு கூறுகிறது.

25 லட்சம் ரூபாய்

25 லட்சம் ரூபாய்

இத்திட்டத்தின் அதிகபட்ச செலவு 5 கோடி ரூபாயாகவும், மூலதன மானியத்தின் அதிகபட்ச வரம்பு 25 லட்சம் ரூபாயாகவும் இருக்கும். இந்தத் தொழில்முனைவோர் அனுபவம் வாய்ந்தவர்கள் என்பதால், மானியத்துடன் இணைக்கப்பட்ட கடன் திட்டத்திற்குத் தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பயிற்சி தேவை கட்டாயமாக இருக்காது.

நவீனமயமாக்கல்

நவீனமயமாக்கல்

ஊக்குவிப்புத் திட்டத்தை (incentive scheme) பொறுத்தவரை, இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களைச் சேர்ப்பதன் மூலம் தொழில்நுட்ப மேம்படுத்தல்/நவீனமயமாக்கலை மேற்கொண்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs), 2020-21 மற்றும் 2021-22 இல் தொற்றுநோய்களின் பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டிருந்தால், அவை மட்டுமே மானியத்திற்கு தகுதியுடையவை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tamilnadu Govt rolls 2 schemes to support entrepreneurs hit by COVID-19

Tamilnadu Govt rolls 2 schemes to support entrepreneurs hit by COVID-19 தமிழ்நாடு அரசின் புதிய அறிவிப்பு.. 25 லட்சம் வரை குறைந்த வட்டியில் கடன்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X