தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில், சாம்சங் நிறுவனத்துடன் 1588 கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தி திட்டத்திற்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இது குறித்தான புரிந்துணர்வு ஒப்பந்தமும் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கையெழுத்தாகியுள்ளது.
5 முறை வட்டி விகிதம் அதிகரிக்கலாம்.. அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கையால் இந்தியாவுக்கு பிரச்சனையா?
இந்த திட்டமானது சென்னை ஸ்ரீபெரும்புதூரில் அமைய உள்ளதாகவும் இதன் மதிப்பு, 1588 கோடி ரூபாய் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரம் வளர்ச்சி அடையும்
ஸ்ரீ பெரும்புதூரில் அமையவுள்ள இந்த திட்டத்தில் காற்றழுத்த கருவிகள் உற்பத்தி திட்டத்தினை சாம்சங் நிறுவனம் தொடங்கவுள்ளது. சாம்சங்கின் இந்த உற்பத்தி திட்டத்தினால் 600 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகின்றது. சர்வதேச அளவில் சந்தை மதிப்பில் டாப் 10 நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் சாம்சங்கின், இந்த முதலீட்டினால் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியும் மேன்மை அடையும்.

வேலை வாய்ப்பும் பெருகும்
இதன் மூலம் பலருக்கும் வேலை வாய்ப்பும் பெருகும். ஏற்கனவே சாம்சங் நிறுவனங்கள் தமிழகத்தில் அதன் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஆலையை வைத்துள்ள நிலையில், மேற்கொண்டு அதன் முதலீடுகள் அதிகரித்து வருவது, இன்னும் வேலை வாய்ப்புகளை கொடுக்கும். வளர்ச்சிக்கு வழிவகுக்கும். அதேபோல எதிர்காலத்திலும் இந்த முதலீடானது தொடரலாம் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.

கலைஞர் காலத்திலேயே சாம்சங்கின் ஒப்பந்தம்
முன்னதாக சாங்சங் நிறுவனம் 450 கோடி ரூபாய் முதலீட்டில் 2500 நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி செய்யும் திட்டத்தினை அமைத்திட, 2006ம் ஆண்டு கலைஞர் முன்னிலையில் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த நிலையில் அந்த ஆலையானது ஒரே ஆண்டிலேயே கட்டி முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கும் வந்தது.

பிரம்மாண்ட விரிவாக்க திட்டம்
இந்த நிலையில் தற்போது 1800 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. சாம்சங் நிறுவனத்தின் இந்த விரிவாக்க திட்டம், 2022ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்குள் நிறைவு பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 2022ம் ஆண்டின் இறுதிக்குள் 80 லட்சம் அளவுக்கு கருவிகள் உற்பத்தி மேற்கொள்ளவும், 2024ம் ஆண்டின் இறுதிக்குள் 144 லட்சம் அளவுக்கும் உயர்த்த திட்டடமிடப்பட்டுள்ளது.