தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பின்மை 2 மடங்கு உயர்வு.. அதிர்ச்சி அளிக்கும் CMIE தரவுகள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் மாநிலமாக விளங்கும் தமிழ்நாட்டில் உலகளவில் இருந்து புதிய நிறுவனங்கள் முதலீடு செய்து அலுவலகத்தையும், உற்பத்தி தளத்தையும் உருவாக்கி வரும் வேளையில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஆகஸ்ட் மாதத்தில் தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பின்மை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.

இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அளவீடுகளை வெளியிடும் CMIE அமைப்பு ஒவ்வொரு மாதமும் மாநில வாரியாகவும், நகரம் மற்றும் கிராமம் வாரியாகவும், வேலைவாய்ப்பின்மை தரவுகளை வெளியிட்டு வருகிறது.

தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பின்மை அளவு எவ்வளவு தெரியுமா..? ஹரியானா, ராஜஸ்தான் படுமோசம்..! தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பின்மை அளவு எவ்வளவு தெரியுமா..? ஹரியானா, ராஜஸ்தான் படுமோசம்..!

தமிழ்நாடு

தமிழ்நாடு

இந்தியாவில் ஜிடிபி அடிப்படையில் 2வது பெரிய மாநிலமாக இருக்கும் தமிழ்நாடு வேகமாக வளர்ச்சி பாதையில் இருக்கும் வேளையிலும், புதிய முதலீடுகள், தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு வரும் நிலையிலும் வேலைவாய்ப்பின்மை அளவீடுகளில் ஏற்பட்டு உள்ள உயர்வு அதிர்ச்சி அளிக்கிறது.

CMIE தரவுகள்

CMIE தரவுகள்

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இருக்கும் Centre for Monitoring Indian Economy என்னும் CMIE அமைப்புச் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியிலும் அலுவலகத்தை வைத்து இயங்கி வருகிறது. 1976 முதல் இயங்கி வரும் தனியார் திங்க் டேங்க் அமைப்பாகும். இந்த அமைப்பு நாட்டின் வேலைவாய்ப்பின்மை தரவுகளை ஒவ்வொரு மாதமும் வெளியிட்டு வருகிறது.

ஆகஸ்ட்

ஆகஸ்ட்

இந்நிலையில் CMIE அமைப்பின் ஆகஸ்ட் மாதத்திற்கான தரவுகளில் இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை அளவீடு 6.8 சதவீதத்தில் இருந்து 8.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2022 ஆரம்பம் முதல் தடுமாறி வந்த இந்த அளவு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தைப் போலவே 8 சதவீதத்தைத் தாண்டி 8.3 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.

தமிழ்நாடு

தமிழ்நாடு

இதேவேளையில் தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பு தரவுகளைப் பார்க்கும் போது அதிர்ச்சி அளிக்கிறது. 2022 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் இருந்து 5.3 சதவீதத்திற்குக் கீழ் இருந்த இந்த அளவீடு ஜூன் மாதத்தில் 2.1 சதவீதம் வரையில் சரிந்தது.

ஆகஸ்ட் மாதம் தரவு

ஆகஸ்ட் மாதம் தரவு

ஜூலை மாதத்தில் 3 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை அளவீடு ஆகஸ்ட் மாதத்தில் 7.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. இரண்டு மடங்கிற்கு மேலான உயர்வு.

2021 ஆகஸ்ட் மாத தரவுகளைப் பார்க்கும் போது தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பின்மை அளவீடு 6.3 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

தென்னிந்திய மாநிலங்களின் நிலை

தென்னிந்திய மாநிலங்களின் நிலை

  • தமிழ்நாடு - 7.2%
  • தெலுங்கானா - 6.9%
  • கேரளா - 6.1%
  • ஆந்திரப் பிரதேசம் - 6%
  • கர்நாடகா - 3.5%
  • புதுச்சேரி - 5.2%
  • உத்தரப்பிரதேசம் - 3.9%
  • குஜராத் - 2.6%
  • மகாராஷ்டிரா - 2.2%

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tamilnadu Unemployment rate increased more than double in August 2022: CMIE

Tamilnadu Unemployment rate increased more than double in August 2022: CMIE தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பின்மை 2 மடங்கு உயர்வு.. அதிர்ச்சி அளிக்கும் CMIE தரவுகள்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X