அனில் அம்பானி நிறுவனத்தை வாங்க போட்டிப்போடும் டாடா.. வாய்ப்பு கிடைக்குமா..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் பிரபலமான நிதியியல் சேவை நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் கேப்பிடல் அதிகப்படியான கடனில் இருக்கும் நிலையிலும், பல்வேறு நிர்வாக முறைகேடுகளையும் செய்துள்ள காரணத்தால் ரிசர்வ் வங்கி இந்நிறுவனத்தின் மீது IBC விதிமுறை கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, விற்பனைக்கு வந்தது.

 

இந்நிலையில் அனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் ADA குரூப் கீழ் இருக்கும் மிக முக்கியமான நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் கேப்பிடல்-ஐ கைப்பற்ற தற்போது டாடா குழுமம் உட்பட பல நிறுவனங்கள் போட்டிப்போட்டு வருகிறது.

 முகேஷ் அம்பானி ஆசை ஆசையாய் வாங்கிய 3 விஷயங்கள்..! முகேஷ் அம்பானி ஆசை ஆசையாய் வாங்கிய 3 விஷயங்கள்..!

ரிலையன்ஸ் கேப்பிடல்

ரிலையன்ஸ் கேப்பிடல்

ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்தைக் கைப்பற்ற விரும்புவோர் விண்ணப்பம் சமர்ப்பிக்க மார்ச் 11ஆம் தேதி கடைசி நாளாக அறிவித்து இருந்த ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா, மார்ச் 25ஆம் தேதி வரையில் நீட்டித்தது. இதன் மூலம் மொத்தம் 54 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர்.

டாடா முதல் நிப்பான்

டாடா முதல் நிப்பான்

அதானி பின்சர்வ், ஐசிஐசிஐ லம்பார்டு, டாடா AIG, ஹெச்டிஎப்சி எர்கோ, நிப்பான் லைப் இன்சூரன்ஸ் என மொத்தம் 54 நிறுவனங்கள் ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்தைக் கைப்பற்றுவதற்காக விருப்பம் தெரிவித்து விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளது.

பிற முக்கிய நிறுவனங்கள்
 

பிற முக்கிய நிறுவனங்கள்

இது மட்டும் அல்லாமல் யெஸ் வங்கி, பந்தன் பைனான்சியல் ஹோல்டிங்க்ஸ், சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட்ஸ், ஓக்ட்ரீ கேப்பிடல், பிளாக்ஸ்டோன், ப்ரூக்பீல்டு, டிபிஜி, கேகேஆர், பிராமல் பைனான்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்களும் விண்ணப்பம் செய்துள்ளது. இதனால் போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிலையன்ஸ் கேப்பிடல்

ரிலையன்ஸ் கேப்பிடல்

பேமெண்ட் செலுத்தாத காரணத்தாலும், முக்கியமான நிர்வாகத் தவறுகளை ரிலையன்ஸ் கேப்பிடல் செய்துள்ள காரணத்தாலும் ரிசர்வ் வங்கி நவம்பர் 29ஆம் தேதி ரிலையன்ஸ் கேப்பிடல் நிர்வாகக் குழுவை மொத்தமாக நீக்கியது. இதைத் தொடர்ந்து தான் ரிசர்வ் வங்கி IBC நடவடிக்கையை எடுக்கத் துவங்கியது.

விற்பனை

விற்பனை

தற்போது விண்ணப்பம் சமர்ப்பித்த பெரும்பாலானவர்கள் ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்தை மொத்தமாகக் கைப்பற்றத் திட்டமிட்டு விண்ணப்பம் சமர்ப்பித்து உள்ளனர். வெகு சில நிறுவனங்கள் மட்டுமே ரிலையன்ஸ் கேப்பிடல்-இன் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துணை நிறுவனங்களுக்கு ஏலம் எடுக்க விண்ணப்பம் செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tata AIG and 53 others bids for Anil Ambani's Reliance Capital

Tata AIG and 53 others bids for Anil Ambani's Reliance Capital அனில் அம்பானி நிறுவனத்தை வாங்கப் போட்டிப்போடும் டாடா.. வாய்ப்பு கிடைக்குமா..?!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X