கொரோனா வைரஸ் இந்தியாவில் எந்தவொரு துறையையும் விட்டு வைக்கவில்லை. ஒவ்வொரு துறையிலும் தன்னால் முடிந்தமட்டில் பின்னடைவை கொடுத்துள்ளது எனலாம். அதற்கு டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமும் விதிவிலக்கல்ல.
ஏனெனில் கொரோனா இந்த நிறுவனத்தின் ஒப்பந்தங்களை வெகுவாக பாதித்துள்ளதாக தெரிவித்துள்ளது இந்த நிறுவனம்.
எனினும் 2021-ம் நிதியாண்டில் இரண்டாம் பாதி முதல் காலத்தினை விட சிறப்பாக இருக்கும் என்றும், அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எஸ் லட்சுமி நாரயணன் நம்புவதாக இடிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் தீர்வு வழங்குனர்
மேலும் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக பதவியேற்ற ஒன்பது மாதங்களுக்கு பிறகு, முதன் முதலாக ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் லட்சுமி நாரயணன் பேசியுள்ளார். இந்த நிலையில் டாடா கம்யூனிகேஷன் நிறுவனம், எஸ் லட்சுமி நாரயணன் கீழ் ஒரு டிஜிட்டல் தீர்வு வழங்குனராக மாற்றியமைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

கடன் அதிகம்
டாடா கம்யூனிகேஷனை பொறுத்தவரையில் அதிக கடன் ஒரு பிரச்சனையாகவே தொடர்கிறது. எனினும் அதைக் குறைப்பதற்காக பல்வேறு திட்டங்களை கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதில் ஈக்விட்டிகளை செலுத்துதல், முதலீடுகளை தவிர்ப்பது, அதன் நிலங்களை விற்பனை செய்தல் போன்ற திட்டங்களை செயல்படுத்த உள்ளதாகவும் லட்சுமி நாரயணன் கூறியுள்ளார்.

என்ன மாற்றம்
இடி சார்பில் நீங்கள் பொறுப்பேற்றதில் இருந்து நிறுவனத்தில் என்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்ற கேள்விக்கு பதிலளித்தவர், முதலாதவாக எப்படி எல்லையற்ற வளர்ச்சியினை செயல்படுத்த முடியும். இரண்டாவது நீங்கள் பி2பி உலகை பார்த்தால், மக்கள் முற்றிலும் உற்பத்தி செய்யும் பொருட்களில் இருந்து சேவைகளுக்கு மாறி விட்டனர். நான் அவர்களுக்கு எவ்வாறு சேவை செய்வது.
மூன்றாவது செயல்திறன் மற்றும் உற்பத்தி திறனில் தொடர்ந்து கவனம் செலுத்துதல், ஆட்டோமேஷன், நான்காவது பிரச்சனைகளை நிர்வகித்தல், ஐந்தாவது நிறுவனத்திற்கு எவ்வாறு ஒரு சுறுசுறுப்பை கொண்டு வருவது என கூறியுள்ளார்.

என்னென்ன சவால்கள்
இதே கொரோனாவால் டாடா கம்யூனிகேஷன் எந்த மாதிரியான சவால்களை மேற்கொண்டது. எந்த மாதிரியான வாய்ப்புகள் கிடைத்தது என்ற கேள்விக்கு, கொரோனா லாக்டவுனுக்கு பிறகு நிறைய நிறுவனங்கள் எண்டர்பிரைசஸ் வாடிக்கையாளர் எப்படி வீட்டில் இருந்தே திறம்பட வேலை செய்வது என கேட்டதாக தெரிவித்துள்ளார். இதற்கு அவரது அணிகள் ஆயிரக்கணக்கான பயனர்களுக்கும் 150க்கும் மேற்பட்ட நிறுவன வாடிக்கையாளர்களுக்கும் வீட்டில் இருந்து வேலை செய்ய உதவியதாகவும் தெரிவித்துள்ளார்.

எது பெஸ்ட்
வாடிக்கையாளர்களை எப்படி திரும்ப இயல்பு நிலைக்கு கொண்டு வருவது என பலவற்றை பற்றி விவரித்து வருகிறோம் என்றும் கூறியுள்ளார்.
மேலும் ஐடி மற்றும் ஐடி சார்ந்த துறைகள் மற்றும் ஓடிடி வழங்குனர்கள் மிகப்பெரியவர்களாக உள்ளனர், அந்த வரிசையில் வங்கி மற்றும் உற்பத்தி துறையும் சேரும்.

போட்டியை எதிர்கொள்ளும் வகையில் சேவை
டாடா கம்யூனிகேஷன் நிறுவனம் அதிகரித்து வரும் போட்டியை எதிர்கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. ஒரு நிறுவன வாடிக்கையாளருக்கு சேவை செய்வது என்பது வேறுபட்டது. ஏனெனில் அது வலுவான பாதுக்காப்பானதாக இருக்க வேண்டும். எனவே அந்த வகையில் அவர்களுக்கு சேவை செய்யும் வகையில் நாங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளோம்.

வளர்ச்சி எப்போது?
2020ம் நிதியாண்டினை விட 2021ம் நிதியாண்டு இன்னும் மோசமாக இருக்குமா என்ற கேள்விக்கு, நடப்பு நிதியாண்டின் இரண்டாம் பாதியில் வளர்ச்சி திரும்பலாம். ஏனெனில் மக்கள் தங்கள் நுகர்வோரை அணுகுவதற்கான புதுமையான வழிகளை பார்க்கலாம். இதனால் ஈ-காமர்ஸ் துறையும் வலுவடையும் என்றும் கூறியுள்ளார்.

வீட்டில் இருந்து பணி
சரி டாடா கன்சல்டன்ஸி நிறுவபம் 75 சதவீத ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்றவே திட்டமிட்டுள்ள நிலையில், டாடா கம்யூனிகேஷனின் நிலை என்ன?
இன்றைய நிலையில் 98 சதவீதம் பேர் வீட்டில் இருந்து தான் பணியாற்றி வருகின்றனர். ஆனால் இன்னும் நாம் நெட்வொர்க்கினை கண்கானிக்க வேண்டும். தவறாக நடக்கும்போது அவற்றை சரி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஏஜிஆர் வழக்கு
இதே டாட் உடனான ஏஜிஆர் வழக்கு பற்றி பேசும்போது, எங்களது வழக்கு உச்ச நீதிமன்றத்தினால் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அவர்கள் எங்களுக்கு ஒரு திருத்தப்பட்ட கோரிக்கையை கொடுக்க வேண்டும். ஆனால் இதுவரை நாங்கள் பெறவில்லை. இந்த ஏஜிஆர் கணக்கீடுகள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டியவை என்றும் தெரிவித்துள்ளது.