தமிழ்நாட்டில் ரூ.3000 கோடி முதலீடு செய்யும் டாடா.. அடிதூள் ஜாக்பாட் தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் சோலார் மின்சாரம் உற்பத்தி மிகப்பெரிய அளவில் ஆதரிக்கும் நிலையில், சோலார் பேனல் உற்பத்தியை அதிகரிக்க ரிலையன்ஸ் உட்படப் பல நிறுவனங்கள் திட்டமிட்டு அதற்காகப் பல ஆயிரம் கோடி ரூபாய் தொகையை முதலீடு செய்து வருகிறது.

 

தமிழ்நாட்டில் ஏற்கனவே சோலார் மின்சாரம் மற்றும் சோலார் பேனல் துறையைச் சார்ந்த சில நிறுவனங்கள் உற்பத்தி தளத்தை அமைத்திருந்தாலும், பெரிய அளவிலான முதலீடுகள் உடன் பெரிய நிறுவனம் இதுவரை வரைவில்லை.

தொடரும் போராட்டம்.. ஏற்ற இறக்கத்தில் சந்தைகள்.. கவனிக்க வேண்டிய ரிலையன்ஸ், வங்கி பங்குகள்..!

இந்தச் சூழ்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமம் ஆக விளங்கும் டாடா குழுமம் தமிழ்நாட்டில் புதிய திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.

டாடா குழுமம்

டாடா குழுமம்

டாடா குழுமத்தின் சோலார் பிரிவு தமிழ்நாட்டில் 4 ஜிகாவாட் சோலார் போட்டோவோல்டாயிக் செல் உற்பத்தி தொழிற்சாலையைத் திருநெல்வேலி மாவட்டத்தில் சுமார் 3000 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாக்க உள்ளது. இத்திட்டம் மூலம் தமிழ்நாடு அரசின் அடுத்த 10 வருடத்தில் சோலார் மின்சார உற்பத்தியை அதிகரிக்கும் திட்டத்தை எளிதாக அடைய முடியும்.

கங்கைகொண்டான்

கங்கைகொண்டான்

இந்தச் சோலார் செல் தொழிற்சாலை குறித்து டாடா குழுமம் மற்றும் தமிழ்நாடு அரசுக்கு மத்தியிலான பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாகவும். டாடா-வின் இப்புதிய தொழிற்சாலை கங்கைகொண்டான் பகுதியில் அமைக்கப்பட உள்ளது.

மின்சாரத் தேவை அதிகரிப்பு
 

மின்சாரத் தேவை அதிகரிப்பு

தமிழ்நாட்டில் தொழிற்துறை முதல் மக்கள் பயன்பாடு வரையில் மின்சாரத் தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில் மாற்று மின்சார உற்பத்தி மிகவும் அவசியமான ஒன்றாக மாறியுள்ளது. இதற்காகச் சோலார் மின்சாரத்தை ஊக்குவிக்கத் தமிழ்நாடு திட்டமிட்டு இருந்த நிலையில், இத்திட்டத்தை அடைய டாடாவின் புதிய சோலார் தொழிற்சாலை பெரிய அளவில் உதவும்.

தமிழ்நாடு அரசின் இலக்கு

தமிழ்நாடு அரசின் இலக்கு

தமிழ்நாடு அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் Tangedco அமைப்பு 2030க்குள் 25 ஜிகாவாட் அளவிலான மின்சாரத்தைப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் உற்பத்தி செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இதில் 20 ஜிகாவாட் சோலார் மின்சாரம், 3 ஜிகாவாட் ஹைட்ரோஎலக்டிரிக், 2 ஜிகா கேஸ் மூலம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்து அதற்கான தொழிற்சாலை மற்றும் உற்பத்தி தளத்தை அமைக்க முடிவு செய்துள்ளது.

3000 கோடி ரூபாய்

3000 கோடி ரூபாய்

தற்போது திருநெல்வேலி மாவட்டத்துக் கங்கைகொண்டான் பகுதியில் அமைக்கப்படும் 3000 கோடி ரூபாய் மதிப்பிலான சோலார் மின்சாரத் தொழிற்சாலை மூலம் இப்பகுதியில் இருக்கும் 2000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதேபோல் இதில் பெரும்பாலான ஊழியர்கள் பெண்களாக இருப்பார்கள் எனவும் தகவல் கிடைத்துள்ளது.

தமிழ்நாடு

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் 1.2 ஜிகாவாட் சக்தி கொண்ட விக்ரம் சோலார் பிளான்ட் ஓரகடத்தில் உள்ளது, இதேபோல் அமெரிக்காவின் பர்ஸ்ட் லோசார் சோலார் தொழிற்சாலைக்கான திட்டத்தைத் துவங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து தற்போது டாடா பவர் சோலார் நிறுவனம் திருநெல்வேலியில் 3000 கோடி ரூபாய் மதிப்பிலான சோலார் மின்சாரத் தொழிற்சாலை அமைக்க உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tata group's new solar plant in Tirunelveli; Final discussion with TN govt for Rs.3000 crore investment

Tata group's new solar plant in Tirunelveli; Final discussion with TN govt for Rs 3,000 crore investment தமிழ்நாட்டில் 3000 கோடி முதலீடு செய்யும் டாடா.. அடிதூள் ஜாக்பாட் தான்..!
Story first published: Thursday, November 25, 2021, 11:28 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X