திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. சர்ப்ரைஸ் கொடுத்த டாடா மோட்டார்ஸ்.. ரூ.2958 கோடி லாபம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முன்னணி வணிக குழுமமான டாடா குழுமத்தினை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம், டிசம்பர் காலாண்டில் 2958 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதில் ஆச்சரியமளிக்கும் விஷயம் என்னவெனில், இது கடந்த ஆண்டில் நிகர இழப்பாக 1516 கோடி ரூபாயினை கண்டிருந்தது. தற்போது நஷ்டத்தில் இருந்து லாபத்திற்கு திரும்பியுள்ளது மிக நல்லதொரு விஷயமாக பார்க்கப்படுகிறது.

அம்பானி, அதானிய விடுங்க.. டாடா குழுமத்தின் திட்டத்தை பாருங்க.. 5 ஆண்டுகளில் தரமான சம்பவம் இருக்கு? அம்பானி, அதானிய விடுங்க.. டாடா குழுமத்தின் திட்டத்தை பாருங்க.. 5 ஆண்டுகளில் தரமான சம்பவம் இருக்கு?

டாடா மோட்டார்ஸ் வளர்ச்சி

டாடா மோட்டார்ஸ் வளர்ச்சி

இது பயணிகள் கார் மற்றும் கனரக வணிக வாகனங்கள் தேவையானது அதிகரித்துள்ள நிலையில், ஜாகுவார் லேண்ட் ரோவரின் தாய் நிறுவனமான டாடா மோட்டார்ஸின் வளர்ச்சி விகிதமானது அதிகரித்துள்ளது. இது நஷ்டத்தில் இருந்து லாபத்துக்கு திரும்பியுள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு மிக நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.

வருவாய் விகிதம் எப்படி?

வருவாய் விகிதம் எப்படி?

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் விகிதமானது 22.5% அதிகரித்து, 88,489 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 72,230 கோடி ரூபாயாக இருந்தது.

இது சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியிலும் இந்தியாவில் வளர்ச்சி விகிதமானது, நேர் மறையான பாதையில் இருந்து வருகின்றது. இதன் காரணமாக இந்த நிறுவனம் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளது.

விலை அதிகரிப்பு
 

விலை அதிகரிப்பு

தொடர்ந்து செமி கண்டக்டர் சப்ளையும் அதிகரித்து வரும் நிலையில், வாகன உற்பத்தியும் மேம்பட்டு வருகின்றது. இதற்கிடையில் நிறுவனமும் தொடர்ந்து வளர்ச்சியில் கவனம் செலுத்தி வந்த நிலையில், இந்தளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது.

வாகன நிறுவனங்கள் பலவும் டாடா மோட்டார்ஸ் உள்பட, மூலதன பொருட்கள் விலையானது அதிகரித்துள்ள நிலையில், உற்பத்தி செலவானது அதிகரித்தது. இதன் காரணமாக நிறுவனங்கள் வாகன விலையை உயர்த்தின. இது மேற்கொண்டு வளர்ச்சிக்கு ஊக்குவித்தது.

மார்ஜின் அதிகரிப்பு

மார்ஜின் அதிகரிப்பு

இது நிறுவனத்தின் மார்ஜின் விகிதமானது மேம்பட முக்கிய காரணமாக அமைந்தது. இதற்கிடையில் 4வது காலாண்டிலும் இந்த வளர்ச்சி விகிதமானது தொடரலாம் என நிறுவனம் எதிர்பார்க்கின்றது.

இந்த அறிவிப்புகளுக்கு மத்தியில் இன்று டாடா மோட்டார்ஸ் பங்கு விலையானது 0.7% குறைந்து, 419 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

பயணிகள்  வாகன பிரிவு

பயணிகள் வாகன பிரிவு

தொடர்ந்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன விற்பனையானது தொடர்ந்து வலுவான வளர்ச்சி கண்டுள்ள நிலையில், அதன் மொத்த விற்பனை மட்டும் கடந்த ஆண்டினை காட்டிலும் 33% வளர்ச்சி கண்டுள்ளது.

வர்த்தக வாகன பிரிவு

வர்த்தக வாகன பிரிவு

இதே வர்த்தக வாகன விற்பனையானது வளர்ச்சி கண்டுள்ளது. இதற்கிடையில் இதன் உள்கட்டமைப்பு வளர்ச்சியினையும் நிறுவனம் மேம்படுத்தியுள்ளது. இதனை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக தேவையானது அதிகரித்துள்ளது. குறிப்பாக அதன் பேருந்து வணிக தேவையானது அதிகரித்துள்ளது. ஆக இது உற்பத்தியினை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்ப்பு என்ன?

எதிர்பார்ப்பு என்ன?


தொடர்ந்து சர்வதேச நிலைமையை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றோம். பணவீக்கம், வட்டி விகிதம் என அனைத்தையும் கண்கானித்து வருகின்றோம். அதேபோல சப்ளை தேவையையும் கண்கானிக்கிறோம். தொடர்ந்து தேவையானது அதிகரித்து வருவதையும் பார்க்கிறோம். இது மேற்கொண்டு வரும் காலாண்டுகளிலும் மார்ஜின் விகிதம் மேம்படும் என எதிர்பார்க்கிறோம் என பங்கு சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tata Motors consolidated net profit increased to Rs 2958 crore in Q3.

Tata Motors' consolidated net profit rose to Rs 2,958 crore in the December quarter.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X