கொரோனாவின் விஸ்வரூபம்.. டாடா மோட்டார், மஹிந்திரா, எம்ஜி மோட்டார்ஸின் அடி மடியிலேயே கைவைக்கும் சீனா!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த சில ஆண்டுகளாக பெரும் வீழ்ச்சியை பதிவு செய்து வரும் ஆட்டோமொபைல் துறைக்கு, ஏதேனும் விடிவு காலம் வந்திடாதா என்ற எதிர்பார்ப்பில் ஆட்டோமொபைல் துறையினர் இருந்து வருகின்றனர்.

 

ஆனால் அவர்களின் எதிப்பார்ப்புகளுக்கு எதிர்மாறாக மேலும் மேலும் அடி மேல் அடி வாங்கிக் கொண்டு இருக்கிறது ஆட்டோமொபைல் துறை.

இன்னொருபுறம் அதிகரித்து வரும் போட்டிகள், சந்தை நிலவரத்திற்கு ஏற்ப புதுமைகளை புகுத்தும் நேரம், வரவிருக்கும் பிஎஸ் 6 விதிகளுக்கு ஏற்ப வாகன உற்பத்தி என தொடர்ந்து அதிகரித்து வந்தன.

தொழில் சாலைகள் முடக்கம்

தொழில் சாலைகள் முடக்கம்

ஆனால் தற்போது இதற்கும் செக் வைத்தாற்போல வந்துள்ளது இந்த கொரோனா தாக்கம். சீனாவின் கொடிய கொரோனாவின் தாண்டவத்தால், சீனாவின் பெரும்பாலான ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. அதிலும் சீனாவின் டிசம்பர் மாத இறுதியில் சந்திர புத்தாண்டு விடுமுறையை தொடர்ந்து, கொரோனா தாக்கத்தினை குறைக்க அந்த நாட்டில் இன்று வரை பற்பல இடங்களில் தொழில் சாலைகள் முடங்கியுள்ளன.

பெரும் சவால்களை எதிர்கொள்கிறோம்

பெரும் சவால்களை எதிர்கொள்கிறோம்

ஆனால் வாகன உதிரிபாகங்களுக்கு முக்கியமாக சீனாவினையே நம்பியுள்ள இந்தியா உற்பத்தியாளர்கள், தற்போது உதிரி பாகங்கள் இன்மையால் தங்களது உற்பத்தியை இது பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கடந்த ஞாயிற்றுகிழமையன்று டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா, எம்ஜி மோட்டார் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் வாகன கூறுகள் இல்லாமையால் பெரும் சவால்களை எதிர்கொள்வதாக கூறியுள்ளன.

ஏற்கனவே வீழ்ச்சி
 

ஏற்கனவே வீழ்ச்சி

ஏற்கனவே நாட்டில் நிலவி வரும் மந்த நிலையின் மத்தியில் பெரும் வீழ்ச்சியை கண்டு வரும் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம், தனது மொத்த விற்பனை 42% வீழ்ச்சி கண்டு 32,476 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதே முந்தைய ஆண்டு பிப்ரவரி 2019-ல் 56,005 வாகனங்களை உற்பத்தி செய்திருந்ததாகவும் தெரிவித்துள்ளது.

உற்பத்தி பாதிப்பு

உற்பத்தி பாதிப்பு

மேலும் சீனாவில் இருந்து உதிரி பாகங்கள் சப்ளையானது வழங்கப்படுவதில் எதிர்பாராத சவால்கள் உள்ளன. இதனால் பிஎஸ் 6 விதிகளுக்கு ஏற்ப எங்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என்று எம் & எம் நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் பிரிவின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் தலைவர் வீஜய் ராம் நக்ரா தெரிவித்துள்ளார்.

டாடா மோட்டாரையும் விட்டு வைக்கவில்லையா?

டாடா மோட்டாரையும் விட்டு வைக்கவில்லையா?

மேலும் தற்போதைய சரக்கு இருப்பு அளவு இன்னும் 10 நாட்களுக்கு உள்ளது. ஆனால் மார்ச் மாதத்தில் நாங்கள் சவாலை மேற்கொள்ளலாம். என்றும் வீஜய் கூறியுள்ளார். இதே டாடா மோட்டார்ஸின் வர்த்தக வாகன பிரிவின் தலைவர் கிரிஷ் வாக் இது குறித்து கூறுகையில், சீனாவின் கோவிட் 19 மற்றும் அதன் மூலோபாய விற்பனையாளர் ஒருவர் சமீபத்தில் தீ விபத்திற்கு உள்ளானதால் டாடாவின் வாகன உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சில்லறை விற்பனை பாதிப்பு

சில்லறை விற்பனை பாதிப்பு

இதுவே எம்ஜி மோட்டார்ஸ் இந்தியா பிப்ரவரி மாதத்தில் வெறும் 1,376 சில்லறை விற்பனையை மட்டுமே அறிவித்துள்ளது. இது சீனா மற்றும் பல இடங்களில் இருந்து அதன் உதிரிபாகம் வழங்கல் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. MG ZS EV அறிமுகமான மாதத்திலேயே நல்ல பதிலைக் கண்டதாகவும், ஏற்கனவே 150 யூனிட்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் எம்ஜி மோட்டார் இந்தியா இயக்குனர் ராகேஷ் சிதானா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வினியோக சங்கிலிகள் பாதிப்பு

வினியோக சங்கிலிகள் பாதிப்பு

சீனாவின் கொரோனா எதிர்பாராத வெடிப்பு காரணமாக நிறுவனங்களின் ஐரோப்பிய மற்றும் சீனா வினியோக சங்கிலிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அதன் உற்பத்தியையும் பாதித்து, பிப்ரவரியில் விற்பனையையும் பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதன் இடையூறுகள் மார்ச் வரை தொடரும் என்றும் சிதானா கூறியுள்ளார். மேலும் மார்ச் இறுதிக்குள் நிலைமை சீரடையும் என்று நம்புவதாவும் சிதானா கூறியுள்ளார்.

பிரச்சனை தான்?

பிரச்சனை தான்?

எப்படி எனினும் மாருதி சுசூகி மற்றும் ஹூண்டாய், டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் உள்ளிட்ட நிறுவனங்கள் உடனடியாக எந்த பாதிப்பையும் எதிர்கொள்ளாது. எனினும் அவர்கள் தொடர்ந்து சீனாவினைக் கண்கானித்து கொண்டிருக்கிறார்கள். ஆக வரும் காலத்தில் இதனால் சில பிரச்சனையை மேற்கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tata motors, Mahindra, MG motor said Corona virus impact hits supply of parts

Tata motors, Mahindra & Mahindra and MG motor india said they are facing challenges of component supply from corona virus outbreak.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X