டாடா மோட்டார்ஸின் அசுர வளர்ச்சி.. செப்டம்பரில் 162% விற்பனை அதிகரிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்தில் 8 வருடத்தில் இல்லாத அளவுக்கு விற்பனையை அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 21,200 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 162% அதிகமாகும்.

இது டாடாவின் டியாகோ மற்றும் நெக்ஸோ உள்ளிட்ட வாகனங்கள் கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும், 6000க்கும் மேற்பட்ட யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இது முறையே கடந்த ஆண்டினை விட முறையே 98% மற்றும் 111% அதிகமாகும். இதே டாடா ஆல்டோஸ் விற்பனையானது 20% அதிகரித்து 5,952 யூனிட்களாக அதிகரித்துள்ளது. இதே கடந்த ஆகஸ்ட் மாதத்தின் டாடா நிறுவனம் 18,583 யூனிட்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆக ஆகஸ்ட் மாதத்தோடு ஒப்பிடும்போது செப்டம்பரில் விற்பனையானது 14% அதிகரித்துள்ளது.

டாடா மோட்டார்ஸின் அசுர வளர்ச்சி.. செப்டம்பரில் 162% விற்பனை அதிகரிப்பு..!

பொதுவாக அனைத்து வாகனங்களின் விற்பனையும் இந்த செப்டம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளது. இதே மக்களின் தனி நபர் இடைவெளி, சுகாதாரத்தினை மேற்கொள்ள வேண்டும் என்பதால், பொதுப் போக்குவரத்தினை தவிர்த்து, தனியார் போக்குவரத்திற்கு மாறி வருகின்றனர். எனினும் அடுத்து வருகின்ற சில மாதங்களுக்கும் விழாக்கால பருவம் என்பதால் விற்பனை அதிகரிக்கும். ஆக உண்மையான விற்பனை என்பது அடுத்த ஆண்டில் தான் தெரிய வரும் என்றும் நிபுணர்கள் கூறி வருவது நினைவு கூறத்தக்கது.

எனினும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இரண்டாவது காலாண்டில், அதன் சர்வதேச மொத்த விற்பனையானது குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியான அறிக்கையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் அதன் சர்வதேச மொத்த விற்பனையானது 16 சதவீதம் சரிந்து, 2,02,873 வாகனங்களாக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனமும் உள்ளடங்கும்.

பயணிகள் வாகன விற்பனையுடன் ஒப்பிடும்போது, அதன் வர்த்தக வாகனங்கள் விற்பனையானது, இரண்டாவது காலாண்டில் 29 சதவீதம் அதிகரித்து 56,614 வாகனங்களாக அதிகரித்துள்ளது.

அதோடு ஒட்டு மொத்த வாகன விற்பனையானது இரண்டாவது காலாண்டில் 9 சதவீதம் குறைந்துள்ளதாகவும் இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள தரவில் தெரிவித்துள்ளது.

இதே சர்வதேச அளவில் விரும்பப்படும் ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனையானது கடந்த ஜூலை - செப்டம்பர் காலத்தில் 91,367 வாகனங்களாகும். இந்த காலாண்டில் மொத்த விற்பனை என்பது 18,189 ஆகும். இதே முந்தைய மொத்த விற்பனை என்பது 73,178 என்றும் டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

எப்படியோ கடந்த சில மாதங்களாக சரிவில் இருந்த விற்பனையானது, செப்டம்பரில் அதிகரித்திருப்பது நல்ல விஷயம் தானே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tata motors sales hit 162% in September month

Tata motors sales hit 162% to 21,200 units in September month, its highest since 2012
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X