அதிரடியான ஏற்றம் கண்ட டாடா மோட்டார்ஸ் பங்கு விலை.. என்னவா இருக்கும்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: ஆட்டோமொபைல் துறைக்கு நடப்பு ஆண்டு மிக மோசமான காலமாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் அனைத்து ஆட்டோமொபைல் துறை பங்குகள் பெரும் சரிவை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் டாடா மோட்டார்ஸ் பங்கு விலை ஒரே நாளில் 4 சதவிகிதம் ஏற்றம் கண்டுள்ளது.

மும்பை பங்கு சந்தையில் டாடா மோட்டார்ஸ் 4.26 சதவிகிதம் ஏற்றம் கண்டு, 183.60 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

அதிரடியான ஏற்றம் கண்ட டாடா மோட்டார்ஸ் பங்கு விலை.. என்னவா இருக்கும்..!

இதே போல சந்தையில் நிஃப்டி ஆட்டோ மொபைல் குறியீடுகளில் அதிக லாபம் ஈட்டியுள்ளது.

இந்த நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு டெல்லியைச் சேர்ந்த மொபைலிட்டி டாக்ஸி சேவையான பிரகிருதி இ-மொபைலிட்டி பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் 500 கார்களை வழங்குவதற்கான உத்தரவை பெற்றது. இந்த ஆர்டர்கள் 160க்கும் மேற்பட்ட டைகர் இவி கார்களும் ஜனவரியில் டெலிவரி செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தனது மின்சார கார்களுக்கான கணிசமான ஆர்டரை பெற்றது. நவம்பரில் இதே போல் டாடா மோட்டார்ஸ் தனது டைகோர் ஈவியின் 400 யூனிட்கள் மற்றும் 100 யூனிட் எலக்ட்ரிக் நெக்ஸான் உள்ளிட்ட 500 எலக்ட்ரிக் கார்களை பெங்களூரைச் சேர்ந்த வணிக நிறுவனமான லித்தியம் அர்பன் டெக்னாலஜிஸூக்கு உத்தரவை வென்றது.

இப்படி ஒரு நிலையில் தான் டாடா மோட்டார்ஸ் பங்கு விலையானது 4.46 சதவிகிதம் உயர்ந்து, 183.95 ரூபாயாக முடிவடைந்துள்ளது. டிசம்பரில் டாடா மோட்டார்ஸ் டிசம்பரில் 14.5 சதவிகிதத்தினைப் பெற்றுள்ளன. நவம்பர் மாதத்தில் தொடர்ச்சியாக ஐந்தாவது மாதமாக சீனா விற்பனையில் சீரான முன்னேற்றம் இருப்பதாக ஜேஎல்ஆர் தெரிவித்துள்ளது.

இந்த செப்டம்பர் - டிசம்பர் காலாண்டில் டாடா மோட்டார்ஸின் பங்குகள் 54 சதவிகிதமாக உயர்ந்தன. மேலும் பிஎஸ்இ ஆட்டோ மற்றும் நிஃப்டி ஆட்டோ குறியீடுகளில் அதிக லாபம் ஈட்டின. எனினும் வரவிருக்கும் காலாண்டுகளில் இந்த விகிதமானது இன்னும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் வரவிருக்கும் மாதங்கள் ஆட்டோமொபைல் சந்தை இன்னும் மேம்படுத்தப்படலாம் என்றும் கருதப்படுகிறது. இதனால் இதன் பங்கு விலையானது இன்னும் அதிகரிக்கும் என்றும் அதிகரிக்கப்படுகிறது.

இது தவிர சந்தையில் பிஎஸ் 6 விதிகள் நடைமுறைக்கு வர விருப்பதால், எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகரிக்கும் என்றும், இதற்கு நலல் வரவேற்பு இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இதன் பங்கு விலை மேலும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tata motors shares up over 4% on winning new order

Tata motors share price up 4 percent on winning new order. Also it’s surged 54% and also the top gainer among BSE auto and Nifty Auto indices.
Story first published: Monday, December 30, 2019, 18:08 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X