எலாக் மஸ்க்-கிற்கு போட்டியாக டாடா.. பிராட்பேண்ட் சேவையில் புது திட்டம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எலான் மஸ்க் டெஸ்லா கார்களை இந்தியாவில் எந்த அளவிற்குக் குறைவான விலைக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என விடாப்பிடியாக முயற்சி செய்கிறாரோ, அதே அளவிற்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் பிராட்பேண்ட் சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்ய வேண்டும் எனத் திட்டம் தீட்டி வருகிறார்.

 

இந்நிலையில் எலான் மஸ்க்-கிற்குப் போட்டியாகவும், இந்தியாவில் இருக்கும் முன்னணி டெலிகாம் நிறுவனங்களாகப் பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ-வின் பிரண்ட்பேன்ட் சேவைகளுக்குப் போட்டியாக டாடா புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இதற்காக டாடா கனடா நாட்டின் டெலிசாட் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளது.

வாய்ப்பில்ல ராஜா.. மோடி அரசின் பதிலால் எலான் மஸ்க் சோகம், டெஸ்லாவுக்குப் பின்னடைவு..!

ஸ்பேக்ஸ் எக்ஸ் ஸ்டார்லிங்க் சேவை

ஸ்பேக்ஸ் எக்ஸ் ஸ்டார்லிங்க் சேவை

டாடாவின் திட்டத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் முதலில் நீங்கள் எலான் மஸ்க் தலைமை வகிக்கும் ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனம் அளிக்கும் ஸ்டார்லிங்க் சேவையின் அடிப்படையைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஸ்டார்லிங்க் சேவை

ஸ்டார்லிங்க் சேவை

ஸ்டார்லிங்க் என்பது அடிப்படையில் ஒரு செயற்கோள் மூலம் அளிக்கப்படும் பிராட்பேண்ட் சேவை, இந்தப் பிராட்பேண்ட் சேவை அளிக்கப் பூமி முழுவதும் செயற்கைக்கோள்களை Low Earth Orbit-ல் வைத்து அதிவேக இண்டர்நெட் சேவை அளிக்கப்படும்.

அதிவேக இண்டர்நெட் சேவை

அதிவேக இண்டர்நெட் சேவை

இந்தச் சேவையைப் பெற எவ்விதமான கேபிள் இணைப்பும் தேவை இல்லை, இதேபோல் 24 மணிநேரமும் அதிவேக இண்டர்நெட் சேவையை அனைவராலும் அனைத்து இடத்திலும் (காடு, மலை) பெற முடியும்.

ஒன்வெப், குனிபர் போட்டி
 

ஒன்வெப், குனிபர் போட்டி

இத்தகைய திட்டத்தை அளிக்கவும், எலான் மஸ்க்-ன் ஸ்டார்லிங்க் சேவைக்குப் போட்டியாகத் தற்போது பார்தி ஏர்டெல் நிறுவன முதலீட்டில் இயங்கும் ஒன்வெப், அமேசான் நிறுவனத்தின் குனிபர் ஆகிய நிறுவனங்கள் இருக்கும் நிலையில், தற்போது இந்தியாவிற்கெனப் பிரத்தியேகமான சேவை அளிக்க டாடா களத்தில் இறங்கியுள்ளது.

டெலிசாட் - டாடா ஒப்பந்தம்

டெலிசாட் - டாடா ஒப்பந்தம்

இதுமட்டும் அல்லாமல் ஆரம்பமே அசத்தலாகத் துவங்குவதற்காகக் கனடா நாட்டின் டெலிசாட் நிறுவனத்துடன் இந்தத் திட்டத்திற்காக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை நெருங்கிய பின்பே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இத்திட்டத்தில் டாடா குழுமத்தின் ஆர்வத்தையும், வேகத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது.

டாடா-வின் நெல்கோ

டாடா-வின் நெல்கோ

டாடா குழுமத்தின் டெலிகாம் சேவை பிரிவான நெல்கோ இந்தியாவில் வேகமான செயற்கைக்கோள் இண்டர்நெட் சேவையை (Lightspeed LEO) அளிக்கக் கனடா நாட்டின் டெலிசாட் நிறுவனத்துடன் மாஸ்டர் சர்வீஸ் ஒப்பந்தம் செய்ய உள்ளது.

சந்திரசேகரன்

சந்திரசேகரன்

சந்திரசேகரன் தலைமையிலான டாடா குழுமம் டெலிகாம் சேவை பிரிவின் வர்த்தகத்தை மேம்படுத்தச் சமீபத்தில் பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தேஜஸ் நெட்வொர்க்ஸ் நிறுவனத்தைக் கைப்பற்றியது.

இறுதிக்கட்ட ஒப்பந்தம்

இறுதிக்கட்ட ஒப்பந்தம்

இதனைத் தொடர்ந்து தற்போது செயற்கைக்கோள் இண்டர்நெட் சேவைக்காக டாடாவின் டெலிகாம் சேவை கிளை நிறுவனமான NELCO டெலிசாட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய இறுதிக்கட்டத்தில் உள்ளது.

ஸ்டார்லிங்க் சேவைக்கு ஒப்புதல்

ஸ்டார்லிங்க் சேவைக்கு ஒப்புதல்

இந்தியாவில் எலான் எஸ்க்-ன் ஸ்டார்லிங்க் சேவை அறிமுகம் செய்ய மத்திய டெலிகாம் அமைச்சகத்திடம் முதற்கட்ட ஒப்புதலைப் பெற்றுள்ள நிலையில், அடுத்தகட்ட பணிகளைச் செய்து வருகிறது.

இந்தியா, சீனா

இந்தியா, சீனா

எலான் மஸ்க் தனது ஸ்டார்லிங்க் சேவை இந்தியாவிலும், சீனாவிலும் விரிவாக்கம் செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ள நிலையில் இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவைக்கான End User கருவியைத் தயாரிக்க இந்திய நிறுவனத்துடன் கூட்டணி வைக்கத் திட்டமிட்டுள்ளது.

டெலிசாட் 8 பில்லியன் டாலர் முதலீடு

டெலிசாட் 8 பில்லியன் டாலர் முதலீடு

ஸ்டார்லிங்க் சேவைக்குப் போட்டியாக டெலிசாட், ஓன்வெப், அமேசான் குனிபர் ஆகிய 3 நிறுவனங்களும் இந்தியாவில் சேவை அளிக்கப் போட்டிப்போட்டு வருகிறது. டெலிசாட் இத்திட்டத்திற்காக 8 பில்லியன் டாலர் முதலீட்டில் 298 LEO செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது.

அடுத்த ஒரு வருடம்

அடுத்த ஒரு வருடம்

இந்தியாவில் அடுத்த ஒரு வருடத்திற்குள் செயற்கைக்கோள் மூலம் அளிக்கப்படும் பிராட்பேண்ட் சேவை அளிக்க ஓன்வெப் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்லிங்க் திட்டமிட்டு உள்ளது. இந்நிலையில் டாடா - டெலிசாட் சேவை 2024ஆம் ஆண்டுக்குள் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஸ்டார்லிங்க் வேகம்

ஸ்டார்லிங்க் வேகம்

எலான் மஸ்க்-ன் ஸ்டார்லிங்க் சேவை ஏற்கனவே அமெரிக்கா மற்றும் கனடாவின் பல பகுதிகளில் சேவை நடைமுறையில் இருக்கிறது. ஸ்டார்லிங்க் சேவையின் இண்டர்நெட் வேகத்தைப் பார்த்து வியக்காதவர்கள் இல்லை.

எலான் மஸ் கனவு

எலான் மஸ் கனவு

ஸ்டார்லிங்க் சேவை உலகம் முழுவதும் கொண்டு வர வேண்டும் என்பது தான் எலான் மஸ்க்-ன் முக்கியக் கனவாக இருக்கும் நிலையில், டெலிகாம் நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகத்தை இழக்க நேரிடும். இதன் காரணமாகப் பார்தி ஏர்டெல், டாடா உட்படப் பல நிறுவனங்கள் LEO செயற்கைக்கோள் சேவைக்குள் நுழைந்து வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tata Nelco new satellite broadband services in India: SpaceX rival Telesat join with TATA

Tata Nelco new satellite broadband services in India: SpaceX rival Telesat join with TATA
Story first published: Thursday, August 12, 2021, 18:57 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X