வாரிசு கைகளுக்கு வருகிறதா டாடா குழுமம்.. ரத்தன் டாடா முடிவு என்ன..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நோயல் டாடாவின் வாரிசுகளான லியா, நெவில் மற்றும் மாயா ஆகியோர் டாடா மெடிக்கல் சென்டர் டிரஸ்ட்-ன் குழுவில் சில வாரங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டனர்.

டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தில் அதிகப்படியான பங்குகளை வைத்திருக்கும் டாடா டிரஸ்ட்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம் தான் இந்த டாடா மெடிக்கல் சென்டர் டிரஸ்ட்.

டாடா மெடிக்கல் சென்டர் டிரஸ்ட்-ல் லியா, நெவில் மற்றும் மாயா ஆகியோர் நியமிக்கப்பட்டது மூலம் டாடா குழுமத்தை நிர்வாகம் செய்ய அடுத்தத் தலைமுறை தலைவர்களை உருவாக்கும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

அம்பானி, அதானியா விடுங்க.. டாடாவின் மாஸ்டர் பிளான பாருங்க.. இனி தான் ஆட்டம் இருக்கு! அம்பானி, அதானியா விடுங்க.. டாடாவின் மாஸ்டர் பிளான பாருங்க.. இனி தான் ஆட்டம் இருக்கு!

வர்த்தகச் சாம்ராஜ்ஜியம்

வர்த்தகச் சாம்ராஜ்ஜியம்

இந்தியாவில் அனைத்து முன்னணி வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்திலும் அடுத்தத் தலைமுறை அதிகாரிகள் வர துவங்கியுள்ளர். உதாரணமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அதானி குரூப், ஹெச்சிஎல், விப்ரோ.. இந்த நிலையில் டாடா குழுமம் இதற்கான முடிவை எடுத்துள்ளது.

டாடா மெடிக்கல் சென்டர்

டாடா மெடிக்கல் சென்டர்


டாடா மெடிக்கல் சென்டர் குழுவில் மூன்று பேரையும் சேர்க்க டாடா அறக்கட்டளையின் முடிவு மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ரத்தன் டாடா-வின் கண்காணிப்பின் கீழ் இந்த 3 பேரையும் பெரிய பதவிகளுக்கு ஏற்றவாறு வளர்க்க முடியும்.

டாடா டிரஸ்ட்

டாடா டிரஸ்ட்

கொல்கத்தாவில் புற்றுநோய் மருத்துவமனையை நடத்தி வரும் டாடா மெடிக்கல் சென்டர் டிரஸ்ட் நிர்வாகக் குழுவில் ரத்தன் டாடா, விஜய் சிங் மற்றும் மெஹ்லி மிஸ்திரி ஆகியோர் ஏற்கனவே உள்ளனர். டாடா டிரஸ்ட் கீழ் இருக்கும் ஒரு சிறிய அறக்கட்டளையில் நோயல் டாடாவின் வாரிசுகளான லியா, நெவில் மற்றும் மாயா ஆகியோர் ஈடுபடுத்துவது மூலம் நேரடியாக டாடா டிரஸ்ட் பொறுப்புகளில் உட்கார வைக்க முடியும்.

மொத்தம் 6 பேர்

மொத்தம் 6 பேர்

டாடா மெடிக்கல் சென்டர் டிரஸ்ட் நிர்வாகக் குழுவில் ஏற்கனவே போதுமான அளவிற்கு 3 பேர் இருக்கும் நிலையில் இந்த மூவரின் இணைப்பு மூலம் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.

புற்றுநோய்

புற்றுநோய்

டாடா மெடிக்கல் சென்டர் என்பது கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியா மற்றும் பங்களாதேஷைச் சேர்ந்த புற்றுநோய் நோயாளிகளுக்கு உதவும் வகையில் ஒரு சேவை நோக்கத்துடன் துவங்கப்பட்ட மருத்துவமனை ஆகும்.

கொல்கத்தா

கொல்கத்தா

டாடா மெடிக்கல் சென்டர் 2011 இல் செயல்படத் தொடங்கியது, சுமார் 431 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையைக் கொல்கத்தாவில் நடத்தி வருகிறது. கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் உள்ள புற்றுநோய் நோயாளிகள் சிகிச்சைக்காக மும்பைக்குச் செல்ல வேண்டியிருந்ததால், கொல்கத்தாவில் மருத்துவமனை நிறுவப்பட்டது.

ரத்தன் டாடா மற்றும் நோயல் டாடா

ரத்தன் டாடா மற்றும் நோயல் டாடா

ரத்தன் டாடா மற்றும் நோயல் டாடாவின் குடும்பம் சமீபத்திய ஆண்டுகளில் அதிகப்படியான நெருக்கம் காட்டி வரும் நிலையில் நோயல் டாடாவின் வாரிசுகளான லியா, நெவில் மற்றும் மாயா ஆகியோர் டாடா மெடிக்கல் சென்டர் டிரஸ்ட்-ன் குழுவில் சேர்க்கப்பட்டது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

டாடா குழுமம் முக்கிய முடிவு

டாடா குழுமம் முக்கிய முடிவு

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக இருக்கும் டாடா குழுமம் 100க்கும் அதிகமான நிறுவனங்களுடன் உலகம் முழுவதும் வர்த்தகம் செய்து வரும் நிலையில் கார்ப்பரேட் நிர்வாகம் மற்றும் அடுத்தத் தலைமுறைக்கு அதிகாரத்தை வழங்குவது குறித்து முக்கியமான முடிவுகளை எடுத்து வருகிறது.

கட்டுப்பாடு

கட்டுப்பாடு

ஒருபக்கம் டாடா குழும நிறுவனத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் நிர்வாகப் பதவி டாடா குடும்ப உறுப்பினருக்கு வெளியில் சென்ற நிலையில், டாடா டிரஸ்ட் அமைப்புகளின் நிர்வாகம் தொடர்ந்து டாடா குடும்ப உறுப்பினர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் வகையில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.

டாடா சன்ஸ் மற்றும் டாடா டிரஸ்ட்

டாடா சன்ஸ் மற்றும் டாடா டிரஸ்ட்

டாடா குழுமம் சில மாதங்களுக்கு முன்பு ஓரே நபர் குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் மற்றும் அதன் மிகப்பெரிய பங்குதாரர் நிறுவனமான டாடா டிரஸ்ட்-க்கும் தலைவராகவும் இருக்கக் கூடாது என்ற கட்டுப்பாட்டைக் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. ரத்தன் டாடா பொறுப்பில் இருந்த வரையில் டாடா சன்ஸ் மற்றும் டாடா டிரஸ்ட் தலைவராக இருந்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TATA Trust Gets Noel Tata’s children Leah, Neville and Maya in Medical Centre Trust’s board

TATA Trust Gets Noel Tata’s children Leah, Neville and Maya in Medical Centre Trust’s board
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X