TCS CEO அடுத்த 6 - 7 வருடத்தில் மாற்றப்படும்.. கிருதிவாசன்-க்கு இப்படியொரு பிரச்சனை இருக்கு..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக துறையாகவும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறையாக இருக்கும் ஐடி துறையில் டாப் 5 நிறுவனங்களில் அடுத்தடுத்து 2 முக்கியமான மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது.

ஒருப்பக்கம் ரெசிஷன் அச்சம் ஐடி மற்றும் டெக் ஊழியர்களை அச்சுறுத்தி வரும் நிலையில் டெக் மஹிந்திரா மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகிய நிறுவனத்தில் தலைமை மாற்றம் பங்கு முதலீட்டாளர்கள் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய ஐடி துறை ரெசிஷன் காலத்திலும் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருவது முக்கியமான விஷயமாக இருந்தாலும் தலைமை நிர்வாக மாற்றத்தை முதலீட்டாளர்கள் எப்போதும் எளிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

அந்த வகையில் டெக் மஹிந்திரா-வின் சிஇஓ முடிவு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்தாலும், டிசிஎஸ் முதலீட்டாளர்களுக்கு ஒரு சிறிய நெருடலை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணமும் உள்ளது..

 களத்தில் இறங்கிய டாடா குழுமத்தின் வாரிசு.. ரத்தன் டாடா-விற்கும் இவர்தான் ஃபேவரட்! களத்தில் இறங்கிய டாடா குழுமத்தின் வாரிசு.. ரத்தன் டாடா-விற்கும் இவர்தான் ஃபேவரட்!

டெக் மஹிந்திரா

டெக் மஹிந்திரா

இந்தியாவின் 5வது பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமாக விளங்கும் டெக் மஹிந்திரா-வின் புதிய நிர்வாக இயக்குநராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இன்போசிஸ் முன்னாள் உயர் அதிகாரி மோஹித் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.

 சிபி குர்னானி

சிபி குர்னானி

டெக் மஹிந்திரா -வின் தற்போதைய CEO மற்றும் MD ஆக பணியாற்றி வரும் சிபி குர்னானி இந்த ஆண்டு டிசம்பரில் ஓய்வு பெற உள்ளார். இவருடைய இடத்திற்கு பல மாதங்களாக புதிய நபரை தேடி வந்த டெக் மஹிந்திரா நிர்வாகம் மோஹித் ஜோஷி-ஐ நியமித்துள்ளது.

 மோஹித் ஜோஷி
 

மோஹித் ஜோஷி

மோஹித் ஜோஷி நியமன அறிவிப்பு வெளியாகி அடுத்த வர்த்தக நாளில் டெக் மஹிந்திரா பங்குகள் 10 சதவீதம் வரையில் உயர்ந்து முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வெளிப்படுத்தியது. இதற்கு முக்கியமான காரணம் டெக் மஹிந்திரா சிபி குர்னானி இந்திய ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதான 65ல் ஓய்வு பெறுகிறார்.

டெக் மஹிந்திரா - டிசிஎஸ்

டெக் மஹிந்திரா - டிசிஎஸ்

டெக் மஹிந்திராவின் புதிய சிஇஓ மோஹித் ஜோஷி-யின் வயது தற்போது 45 மட்டுமே இதனால் அடுத்த 20 வருடத்திற்கு எவ்விதமான தடையும் இல்லாமல் டெக் மஹிந்திராவின் வளர்ச்சி பணிகளை அவர் தலைமையில் நிர்வாகம் செய்ய முடியும். ஆனால் டிசிஎஸ் நிறுவனத்தின் அடுத்த 6-7 வருடத்தில் மீண்டும் மாற்றம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

ராஜேஷ் கோபிநாதன்

ராஜேஷ் கோபிநாதன்

டிசிஎஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஓ -வாக சுமார் 6 வருடம் பணியாற்றிய ராஜேஷ் கோபிநாதன் மார்ச் 16 ஆம் தேதி தனது சிஇஓ பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ராஜேஷ் கோபிநாதன் ராஜினாமா செய்ததை தொடர்ந்து தமிழரான கே கிருதிவாசன்-ஐ டாடா குழுமம் புதிய டிசிஎஸ்-ன் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

கே கிருதிவாசன்

கே கிருதிவாசன்

இது மட்டும் அல்லாமல் கே கிருதிவாசன் பணி மார்ச் 16 ஆம் தேதி முதலே துவங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளதால், பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது. கே கிருதிவாசன் டிசிஎஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய வர்த்தக பிரிவாக விளங்கும் 11 பில்லியன் டாலர் மதிப்பிலான BFSI பிரிவின் தலைவராக இருக்கும் காரணத்தால் இவரை சரியான தேர்வு என கூறப்படுகிறது.

வயது முக்கிய காரணி

வயது முக்கிய காரணி

ஆனால் கே கிருதிவாசன் வயது அடிப்படையில் பார்க்கும் போது தற்போது இவருடைய வயது 58 இதன் மூலம் அடுத்த 6-7 வருடத்தில் டிசிஎஸ்-ல் மீண்டும் தலைமை மாற்றத்தை தவிர்க்க முடியாது. இதன் மூலம் நீண்டகால வளர்ச்சி திட்டத்தை வகுப்பதில் பிரச்சனை உருவாகலாம்.

டிசிஎஸ் பங்குகள் சரிவு

டிசிஎஸ் பங்குகள் சரிவு

இதேவேளையில் வேகமாக மாறி வரும் தொழில்நுட்ப காலத்தில் 6-7 வருடத்தில் புதிய தலைமை மாற்றம் சரியாக இருக்கும் என்றும் கருத்து நிலவுகிறது. ஆனால் பங்குச்சந்தையில் டிசிஎஸ் பங்குகள் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 0.18 சதவீதம் சரிந்துள்ளது, ஆனால் டெக் மஹிந்திரா பங்குகள் 10 சதவீதம் உயர்ந்து.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TCS appoints new CEO Krithivasan check investors reactions; TCS share fall on friday

TCS appoints new CEO Krithivasan check investors reactions; TCS share fall on friday
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X