1.5 பில்லியன் டாலர் டீல்.. இன்போசிஸ், விப்ரோ-வை வாயை பிளக்கவைத்த டிசிஎஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய ஐடி நிறுவனங்கள் மத்தியில் இருக்கும் வர்த்தகப் போட்டி பற்றிப் பெரியதாக விவரிக்க வேண்டியதில்லை, உள்நாட்டு நிறுவனமும் சரி, வெளிநாட்டு நிறுவனமும் சரி, எந்த ஒரு நிறுவனம் மென்பொருள் சேவைக்காகக் குறைந்த விலையில் அல்லது மிகப்பெரிய திட்டத்தை அறிவித்தால் இந்தியாவில் இருந்து குறைந்தது 4 முதல் 5 நிறுவனங்கள் போட்டிப்போடும். இதில் மிகவும் முக்கியமான டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ.

 

சொல்லப்போனால் யார் அதிக மதிப்புடைய டீல்களைப் பெறுகிறார்கள் என்பதில் இந்த 3 நிறுவனங்களுக்கு மத்தியில் பெரிய அளவிலான போட்டி இன்னறவும் உள்ளது. அதுமட்டும் அல்லாமல் ஒவ்வொரு காலாண்டு முடிவுகளிலும் எவ்வளவு டீல்கள், எவ்வளவு மதிப்பு என்பதையும் நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்கள் வெளிப்படையாகவே தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் டிசிஎஸ் தற்போது சுமார் 1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான மிகப்பெரிய மென்பொருள் சேவைக்கான திட்டத்தைக் கைப்பற்றியுள்ளது. இதனால் இன்போசிஸ், விப்ரோ ஆகிய சக ஐடி நிறுவனங்கள் பெரிய அளவிலான வியப்பிலும், சிறிய அளவிலான கடுப்பிலும் உள்ளது.

டிசிஎஸ்

டிசிஎஸ்

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமாக இருக்கும் டிசிஎஸ் அமெரிக்காவின் முன்னணி மருந்து விற்பனை நிறுவனமான வால்கீரீன்ஸ் பூட்ஸ் அலையென்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப சேவைகளை மேம்படுத்துவதற்கான 10 ஆண்டுத் திட்டத்தைக் கைப்பற்றியுள்ளது. இத்திட்டத்தின் மதிப்பு 1.5 பில்லியன் டாலர் இது டிசிஎஸ் நிறுவனத்தின் ரீடைல் வர்த்தகப் பிரிவில் செய்யப்பட்ட மிகப்பெரிய டீல் என்பது குறிப்பிடத்தக்கது.

ரீடைல் நிறுவனம்

ரீடைல் நிறுவனம்

உலகின் மிகப்பெரிய ரீடைல் வர்த்தக நிறுவனமான வால்கீரீன்ஸ் பூட்ஸ் அலையென்ஸ் ஆண்டுக்கு சுமார் 136.9 பில்லியன் டாலர் வரையில் வர்த்தகம் செய்கிறது. இந்நிறுவனத்தின் மிகப்பெரிய டெக்னாலஜி சேவை தளத்தை டிசிஎஸ் அடுத்த 10 வருடத்திற்குத் தனது நிறுவன ஊழியர்கள் மட்டும் அல்லாமல் 3ஆம் தரப்பு வாடிக்கையாளர்களை வைத்து இந்தச் சேவைகளை நிர்வாகம் செய்ய டிசிஎஸ் முடிவு செய்துள்ளது.

தொழில்நுட்ப மேம்பாடு
 

தொழில்நுட்ப மேம்பாடு

அதுமட்டும் அல்லாமல் வால்கீரீன்ஸ் பூட்ஸ் அலையென்ஸ் நிறுவனத்தின் தற்போதைய சேவைகளை அதிநவீன சேவைகளான மாற்றவும், அனைத்து சேவைகளும் கிளவுட் இணைப்பில் இயங்கும் வண்ணம் தொழில்நுட்ப மேம்பாடுகளை டிசிஎஸ் செய்ய உள்ளது. இதன் மூலம் டிசிஎஸ் ரீடைல் வர்த்தகச் சேவை பிரிவு எப்போதும் இல்லாத அளவிற்கு வலிமை பெற உள்ளது. இந்த அனுபவத்தால் அடுத்தடுத்த வருடங்களில் இப்பிரிவில் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெறவும் வாய்ப்புகள் அதிகம்.

கட்டண குறைப்பு

கட்டண குறைப்பு

டிசிஎஸ் நிறுவனம் தற்போது வால்கீரீன்ஸ் பூட்ஸ் அலையென்ஸ் நிறுவனத்திற்கு அளிக்கப்படும் சேவைகளை அனைத்தும் தனது செலவுகளைக் குறைக்கும் வண்ணம் வகையில் திட்டமிடப்படும் எனத் தகவல் கிடைத்துள்ளது. மேலும் டிசிஎஸ் வால்கீரீன்ஸ் பூட்ஸ் அலையென்ஸ் நிறுவனத்திற்குத் தொழில்நுட்ப சேவை மட்டும் அல்லாமல் maintenance மற்றும் support, infrastructure மற்றும் security operations போன்ற இதர சேவைகளையும் வழங்க உள்ளது.

இலக்கு

இலக்கு

கடந்த இரண்டு காலாண்டுகளாக டிசிஎஸ் நிறுவனத்தின் ரிடைல் வர்த்தகப் பிரிவில் தொடர்ந்து அதிகளவிலான வர்த்தகம் குவிந்து வருகிறது. தற்போது டிசிஎஸ் ஆன்லைன் வர்த்தகத்திற்குச் செல்ல விரும்பும் உலகின் மிகப்பெரிய சில்லறை வர்த்தக நிறுவனங்களைக் குறிவைத்து தனது பணிகளைச் செய்யும் காரணத்தால் அதிகளவிலான திட்டங்கள் இப்பிரிவுக்கு வந்து சேர்கிறது.

2வது முக்கியத் துறை

2வது முக்கியத் துறை

டிசிஎஸ் என்னும் மிகப்பெரிய மென்பொருள் சாம்ராஜ்ஜியத்தில் தற்போது ரீடைல் வர்த்தகப் பிரிவு தான் 2வது முக்கியப் பிரிவாக உள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த வருவாயில் 15 சதவீத வருவாய் ரீடைல் பிரிவில் இருந்து வருகிறது. இதுமட்டும் அல்லாமல் கடந்த 9 மாத காலத்தில் மட்டும் சுமாப் 18 பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டங்களை டிசிஎஸ் நிறுவனத்தின் ரீடைல் வர்த்தகப் பிரிவு பெற்றுள்ளது.

மக்கள் கருத்து..

மக்கள் கருத்து..

சரி.. உங்களுக்குப் பிடித்த ஐடி நிறுவனம் எது..? பதிலை கமெண்ட் பகுதியில் தெரிவிக்கவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TCS bags mother of all retail deals

Tata Consultancy Services has won a $1.5 billion deal across a ten-year period from US pharma retailer Walgreens Boots Alliance (WBA) to transform its technology operations, making it the largest deal in the retail space for the company. India’s largest IT firm will take over staff, consolidate vendors, run the entire IT operations of the $ 136.9 billion Walgreen Boots, among the world’s largest retailers.
Story first published: Wednesday, February 5, 2020, 11:24 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X