உலகம் முழுவதும் டெக் ஊழியர்களுக்கான டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையிலும், டெக் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றும் காரணத்தால் ஊழியர்கள் கூடுதலான பணத்தைச் சம்பாதிக்க ஓரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்.
இதுபோன்று பணியாற்ற உலகில் பல நிறுவனங்களில் அனுமதி அளிக்கும் நிலையில் இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள் கடுமையாக எதிர்த்து வருகிறது.
Moonlighting கொள்கைக்கு ஏற்கனவே விப்ரோ, இன்போசிஸ் எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலையில் தற்போது டிசிஎஸ்-ம் இணைந்துள்ளது.

Moonlighting கான்செப்ட்
Moonlighting கான்செப்ட் கொரோனா தொற்றுநோய்க்குப் பின் உலகளவில் மிகவும் பிரபலமாகிவிட்டது. சில நிறுவனத்தில் ஊழியர்கள் நலன் கருதி ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனத்தில் பணியாற்ற அனுமதிக்கப்படும் நிலையில், பல இடத்தில் ஊழியர்களைத் தக்க வைப்பதற்காக இத்தகைய சலுகை அளிக்கிறது.

இந்திய ஐடி நிறுவனங்கள்
இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தியாவில் பிரஷ்ஷர்களின் சம்பள அளவுகள் முதல் சம்பள உயர்வு, விடுமுறை எண்ணிக்கை, வரையில் ஊழியர்கள் பலன் அளிக்கும் பலவற்றுக்கு இந்திய ஐடி நிறுவனங்கள் ஒன்று கூடி நிற்கும் நிலையில் தற்போது மூன்லைடிங்-ம் இதில் இணைந்துள்ளது.

டிசிஎஸ்
டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான கணபதி சுப்ரமணியம் கூறுகையில் Moonlighting பிரச்சனையை நாங்கள் மிகவும் சீரியஸ் ஆகப் பார்க்கிறோம், இதேபோல் இதை ஒழுக்கமற்ற செயலாகவும் டிசிஎஸ் நிர்வாகம் கருதுகிறது. இது பணியாளர் ஒப்பந்தங்களின் ஒரு பகுதியாகவும், எங்கள் வணிகங்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நலன்களுக்கு எதிராகவும் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

இன்போசிஸ்
இதேபோல் இன்போசிஸ் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு யாராவது இரண்டு பணிகளில் ஈடுபட்டு உள்ளது தெரிய வந்தால் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது மட்டும் அல்லாமல் ஊழியர்களை டிஸ்மிஸ் செய்யப்படும் அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இன்போசிஸ் தனது No Double Lives அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விப்ரோ
இந்த Moonlighting கான்செப்ட்-ஐ தான் இந்தியாவின் 4வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் விப்ரோ-வின் தலைவர் ரிஷாத் பிரேம்ஜி சீட்டிங் வேலை என விமர்சனம் செய்துள்ளார். Moonlighting கான்செப்ட்-ஐ முதலில் எதிர்த்தது விப்ரோ தான், குறிப்பாக ரிஷாத் பிரேம்ஜி-ஏ நேரடியாக எதிர்த்துள்ளார்.