டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில் நுட்ப சேவை அளிக்கும் நிறுவனமாகும். இந்த நிறுவனம் 16,000 கோடி ரூபாய் மதிப்பிலான பை பேக் திட்டத்திற்கு பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
இதனையடுத்து பிஎஸ்இ-யில் அதன் பங்கு விலையானது 0.42% ஏற்றம் கண்டு 2,637.05 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதே இண்டிராடே வர்த்தகத்தில் இந்த பங்கின் விலை 2 சதவீதம் அதிகரித்து, 2,678.6 ரூபாயாக அதிகரித்திருந்தது. இதே நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் 0.52% ஏற்றம் கண்டு 2640.25 ரூபாயாக முடிவடைந்துள்ளது. எனினும் இண்டிராடே வர்த்தகத்தில் இந்த பங்கின் விலை 1.88 சதவீதம் அதிகரித்து, 2,676.15 ரூபாயாக அதிகரித்திருந்தது.
டிசிஎஸ் அதன் பங்குதாரர்களுக்கு மூலதனத்தைத் திருப்பித் தர டிசிஎஸ் முடிவு செய்து, 16,000 கோடி ரூபாய் மதிப்பிலான தன் பங்குகளை மீண்டும் வாங்க முடிவெடுத்துள்ளது. இந்த நிறுவனத்தின் நிர்வாக குழுக் கூட்டத்தில் ஒரு பங்குக்கு 3000 ரூபாய் என்ற வகையில் 5.33,33,333 கோடி பங்குகளைத் திரும்ப வாங்கத் தீர்மானிக்கப்பட்டது.
டி.சிஎஸ் நிறுவனத்தின் மிகப் பெரிய பங்குதாரரான டாடா சன்ஸ் நிறுவனம், இந்த பை பேக் திட்டத்தின் மிகப்பெரிய பயனாளியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த நிறுவனம் டி.சி.எஸ்ஸில் 72 சதவீத பங்குகள் கொண்டுள்ளது. இந்த பங்குகளை டி.சி.எஸ்க்கு விற்பதன் மூலம் டாடா சன்ஸ் நிறுவனம் சுமார் 11,500 கோடி ரூபாயினை பெறும்.
Boeing 737 MAX ரக விமானங்களுக்கு இனி அமெரிக்காவில் தடையில்லை.. உற்சாகத்தில் ஸ்பைஸ்ஜெட்..!
டி.சி.எஸ் நிறுவனம் ஒரு பங்குக்கு 12 ரூபாய் ஈவுத் தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது. ஆக இதன் மூலம் டாடா சன்ஸ் நிறுவனத்திற்கு 324 கோடி ரூபாய் கிடைக்கும்.
இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் தனது வணிக வளர்ச்சிக்காக தொழில்நுட்ப பரிமாண வளர்ச்சி சுழற்சியைக் கையில் எடுக்கப்போவதாக அறிவித்துள்ளது. இதன் முதல் கட்டமாக, டிசிஎஸ் நிறுவனம் கிளவுட் தொழில்நுட்பத்தில் பவுண்டேஷன் அமைக்க உள்ளது. இது டிசிஎஸ் நிறுவனத்தின் பல்வேறு வர்த்தகப் பிரிவிற்குப் பயனுள்ளதாகவும், பல மடங்கு வளர்ச்சி செய்யவும் ஏதுவாக அமையும் என்றும் டிசிஎஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.