முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம்.. 52 வார உச்சத்தில் டிசிஎஸ், இன்ஃபோசிஸ், ஹெச்சிஎல்..இது வேற லெவல் !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டிசிஎஸ், இன்ஃபோசிஸ், ஹெச்சிஎல் டெக், விப்ரோ உள்ளிட்ட பங்குகள் அதன் 52 வார உச்சத்தினை இன்று தொட்டுள்ளது.

 

இதனையடுத்து நிஃப்டி ஐடி குறியீடும் புதிய உச்சத்தினை எட்டியுள்ளது. இது 33,840.45 என்ற லெவலில் காணப்படுகின்றது. இது உண்மையில் முதலீட்டாளர்களுக்கு கிடைத்த மிக நல்ல வாய்ப்பு எனலாம்.

ஐடி பங்குகளை வாங்கி வைத்திருந்தவர்களுக்கு இது மிக நல்ல வாய்ப்பு எனலாம்.

டிசிஎஸ் பங்கு விலை

டிசிஎஸ் பங்கு விலை

குறிப்பாக டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது முந்தைய அமர்வில் இருந்து பார்க்கும்போது அரை சதவீதம் அதிகரித்து 3,594.60 ரூபாய் என்ற லெவலில் இன்றைய மதிய நேரத்தில் காணப்பட்டது. எனினும் முடிவில் 0.21% அதிகரித்து, 3560.55 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இன்றைய உச்சம் 3595 ரூபாயாகும். இதுவே இந்த பங்கின் 52 வார உச்ச விலையாகும். இன்றைய குறைந்த விலை 3536.60 ரூபாயாகும்.

மிகப்பெரிய ஐடி நிறுவனம்

மிகப்பெரிய ஐடி நிறுவனம்

சந்தை மதிப்பில் இந்தியாவினை பொறுத்த வரையில், ரிலையன்ஸ் நிறுவனம் தான் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து டிசிஎஸ் நிறுவனம் இரண்டாமிடத்தில் உள்ளது. ரிலையன்ஸின் சந்தை மதிப்பு 13 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதே டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 12 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.

இன்ஃபோசிஸ் பங்கு விலை
 

இன்ஃபோசிஸ் பங்கு விலை

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று காலையில் 1755.50 ரூபாயினை தொட்டது. இதுவே இன்றைய உச்ச விலையாகும். இதன் 52 வார புதிய உச்ச விலையையும் தொட்டது. எனினும் முடிவில் இந்த பங்கின் விலையானது 0.47% குறைந்து, 1733.45 ரூபாயாக முடிவடைந்தது. இன்றைய குறைந்தபட்ச விலையானது 1727 ரூபாயாக இருந்தது கவனிக்கதக்கது.

என்ன காரணம்

என்ன காரணம்

கடந்த ஜூன் காலாண்டில் இந்த நிறுவனம் வலுவான வருவாயினை பதிவு செய்துள்ள நிலையில், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது வலுவான ஏற்றம் கண்டுள்ளது. மேலும் அதன் ஆர்டர் புத்தகத்தில் வலுவான வளர்ச்சியினைக் கண்டுள்ளது. இதனால் வருவாயும் வலுவான வளர்ச்சியினைக் கண்டுள்ளது. இது இந்த பங்கின் விலையானது ஏற்றம் காண வழிவகுத்துள்ளது.

ஹெச்சிஎல் டெக் பங்கு விலை

ஹெச்சிஎல் டெக் பங்கு விலை

ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று காலை அமர்வில் 1157.90 ரூபாயினை தொட்டது. இது தான் 52 வார உச்ச விலையாகும். குறைந்த விலை 1131.60 ரூபாயாகும். இதன் விலை பங்கு விலை 0.76% குறைந்து, 1134.25 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

விப்ரோ பங்கு விலை

விப்ரோ பங்கு விலை

விப்ரோவின் பங்கு விலையானது 0.87% குறைந்து, 629.40 ரூபாயாக முடிவடைந்தது. இன்றைய உச்சம் 639.20 ரூபாயாகும். இது தான் இதன் 52 வார உச்சமாகும். இதன் குறைந்தபட்ச விலை 624.60 ரூபாயாகும். டிஜிட்டல் சந்தையில் தேவைகள் அதிகரித்து வரும் நிலையில், ஐடி நிறுவனங்களின் பங்கு விலையானது இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தரகு நிறுவனங்கள் கருத்து

தரகு நிறுவனங்கள் கருத்து

ஐடி பங்குகள் நடப்பு ஆண்டில் இதுவரையில் 40% வரையில் வருமானம் கொடுத்துள்ளது. இதற்கிடையில் தரகு நிறுவனமான மார்கன் ஸ்டான்லி மைண்ட் ட்ரீ, எம்பஸிஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு விலை இன்னும் ஏற்றம் காணலாம் என கணித்துள்ளது.

மைண்ட் ட்ரீ பங்கு விலை

மைண்ட் ட்ரீ பங்கு விலை

மைண்ட் ட்ரீ நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று 5.93% அதிகரித்து, 3196.30 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இன்றைய உச்ச விலை 3,243 ரூபாயாகும். இது தான் இந்த பங்கின் 52 வார உச்சமாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 3,019 ரூபாயாகவும் உள்ளது. இதற்கிடையில் மார்கன் ஸ்டான்லி மைண்ட் ட்ரீ நிறுவனத்தின் இலக்கினை 3,450 ரூபாயாக உயர்த்தியுள்ளது.

எம்பஸிஸ் பங்கு விலை

எம்பஸிஸ் பங்கு விலை

இதே எம்பஸிஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 0.10% அதிகரித்து, 2,844.25 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 2,938 ரூபாயாகும். இதன் 52 வார புதிய உச்ச விலையும் 2,938 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலையானது 2,803.50 ரூபாயாகும். மார்கன் ஸ்டான்லி எம்பஸிஸ் நிறுவனத்தின் இலக்கினை 3,150 ரூபாயாகவும் உயர்த்தியுள்ளது.

இலக்கு குறைப்பு

இலக்கு குறைப்பு

லார்சன் & டூப்ரோ மற்றும் Cyient உள்ளிட்ட சில நிறுவனங்களின் பங்கு விலையானது குறையலாம் என்று கணித்துள்ளது. இதே போல லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் பங்கு விலையானது 0.36% குறைந்து, 1632.85 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதே Cyient நிறுவனத்தின் பங்கு விலையானது 1.25% குறைந்து, 941.35 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TCS, Infosys, HCL, Wipro shares hit new 52 week high today; should you book profit

TCS, HCL tech, Infosys and Wipro share prices hit new 52 week high in today. it may further up to coming days.
Story first published: Wednesday, August 18, 2021, 18:25 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X