ஊழியர்களை ஆபீஸ்-க்கு அழைக்க டிசிஎஸ் திட்டம்.. விரைவில் அறிவிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ், 2020 ஜனவரி மாதம் முதல் கொரோனா தொற்றுக் காரணமாகத் தனது ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி கொடுத்துள்ளது. வீட்டில் இருந்து பணியாற்றினாலும் வர்த்தகத்திற்கு எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் இயங்கும் காரணத்தால் இந்த முறையைத் தொடரப்போவதாகச் சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது.

இந்நிலையில் தற்போது டிசிஎஸ் ஊழியர்களை அலுவலகத்திற்கு எப்படி அழைப்பது என்பதற்கான திட்டத்தை வரைமுறை செய்து வருகிறது.

இந்தத் திட்டம் இறுதி ஒப்புதல் அடையும் நிலையில் டிசிஎஸ் ஊழியர்களில் சில சதவீதம் மட்டும் அலுவலகத்திற்கு அழைக்க முடிவு செய்துள்ளது நிர்வாகம்.

டிசிஎஸ் உருவாக்கியுள்ள திட்டம்

டிசிஎஸ் உருவாக்கியுள்ள திட்டம்

டிசிஎஸ் தற்போது உருவாக்கியுள்ள திட்டத்தில் பல பாதுகாப்பு காரணிகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு உள்ளது. இந்தக் காரணிகள் அனைத்தையும் பூர்த்தி செய்தால் மட்டுமே அலுவலகத்திற்குள் வர அனுமதி அளிக்கப்படும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.

முக்கியக் காரணிகள்

முக்கியக் காரணிகள்

இதன் படி ஊழியரின் வேக்சினேஷன் ஸ்டேட்டஸ், ஊழியர்கள் தங்கியிருக்கும் இடத்தின் ஆய்வு, தொற்று ஆபத்துகளை அளவிடுதல், பாதிப்பு நிறைந்த பகுதி குறித்த கணக்கீடு, அடிப்படை உடல்நல கூறுகள் ஆகியவற்றை ஆய்வு செய்த பின்னரே அனுமதிக்கப்பட உள்ளது.

ஊழியரின்

ஊழியரின்

டிசிஎஸ்-ன் இந்த ஆய்வு முறை தனிப்பட்ட ஊழியரின் பாதுகாப்பு மட்டும் அல்லாமல் அலுவலகத்திற்கு வரும் அனைத்து ஊழியர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் என்பதை டிசிஎஸ் நம்புகிறது.

டிசிஎஸ் ஐடி சேவை
 

டிசிஎஸ் ஐடி சேவை

பொதுச் சேவைகள், வங்கிகள் மற்றும் பங்குச் சந்தைகள், காப்பீடு மற்றும் சுகாதார நிறுவனங்கள், தொலைத் தொடர்பு மற்றும் பயன்பாட்டு நிறுவனங்கள், ரீடைல், கன்ஸ்யூமர் குட்ஸ், டிராவல், வங்கி எனப் பலதுறை நிறுவனங்களுக்கு உலகம் முழுவதிலும் இருந்து டிசிஎஸ் ஐடி சேவை வழங்குகிறது.

விஷன் 25/25 திட்டம்

விஷன் 25/25 திட்டம்

இதனால் நீண்ட காலம் வீட்டில் இருந்து தனது வர்த்தகத்தைத் தொடர்ந்து இயக்க முடியாது என்பதை உணர்ந்து தனது விஷன் 25/25 திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளது டிசிஎஸ்.

488,649 ஊழியர்கள்

488,649 ஊழியர்கள்

இத்திட்டத்தின் படி குறைந்தது 25 சதவீத ஊழியர்கள் 25 சதவீத அலுவலக நேரத்தில் அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்பது தான். 488,649 ஊழியர்களைக் கொண்டு உள்ள டிசிஎஸ் இத்திட்டத்தை எப்படிச் செயல்படுத்தப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TCS New plan to bring employees back to office on vision 25/25 scheme

TCS New plan to bring employees back to office on vision 25/25 scheme
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X