ஐஐஎம் பட்டதாரிகளை கொத்தாக தூக்கிய டிசிஎஸ்..!!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் டிசிஎஸ் கொரோனா பாதிப்பின் போது எப்படி முதல் ஆளாக அனைத்து ஊழியர்களுக்கு வொர்க் ப்ரம் ஹோம் வசதியை கொடுத்ததோ, அதேபோல் கொரோனாவுக்குப் பின்பு முதல் நிறுவனமாக அனைத்து ஊழியர்களையும் கட்டாயம் அலுவலகத்திற்கும் அழைந்தது.

 

இதற்கிடையில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் ரெசிஷன் பாதிப்பு இருக்கும் காரணத்தால் புதிய வர்த்தகத்தையும் குறிப்பாக அதிக மதிப்புடைய பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டங்களைப் பெறுவதில் கடுமையான சூழ்நிலை உருவாகியுள்ளது.

மூன்லைட்டிங் பிரச்சனை மிகப்பெரியதாக வெடித்திருக்கும் நிலையில் டிசிஎஸ் ஐஐஎம் கல்லூரியில் இருந்து கொத்தாகப் பட்டாதாரிகளைப் பணியில் சேர்த்துள்ளது.

ஐஐஎம் அகமதாபாத்

ஐஐஎம் அகமதாபாத்

இந்தியாவின் மிகவும் முக்கியமான மேலாண்மை பிரிவு கல்லூரிகளில் ஒன்றான ஐஐஎம் அகமதாபாத்-ன் 2024 ஆம் ஆண்டின் பிஜிபி வகுப்பிற்கான கோடைகாலப் பிளேஸ்மென்ட்-ல் சுமார் 35 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பங்குப்பெற்றது.

 டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்

இதில் நாட்டின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 11 பேருக்கு வேலைவாய்ப்பு ஆஃபர்களைக் கொடுத்து அதிக வேலைவாய்ப்புகளைக் கொடுத்த நிறுவனமாக டிசிஎஸ் உருவெடுத்துள்ளது.

முக்கியத் துறைகள்
 

முக்கியத் துறைகள்

இந்த ஐஐஎம் அகமதாபாத் பிளேஸ்மென்ட்-ல் ஐடி துறை நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் வங்கி நிதி சேவைகள் & காப்பீடு, கன்ஸ்யூமர் டெக் , கோர் உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்பு, எட்டெக், எண்டர்பிரைசர்ஸ் டெக், பின்டெக், உணவு மற்றும் பால் பொருட்கள் நிறுவனங்கள், கேமிங் & விளையாட்டு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பசுமை தொழில் நுட்பம் மற்றும் சோஷியல் எண்டர்பிரைசர்ஸ் மற்றும் NGO ஆகிய பிரிவை சார்ந்த நிறுவனங்களும் கலந்துக்கொண்டது.

டிசிஎஸ் நிறுவனம்

டிசிஎஸ் நிறுவனம்

டிசிஎஸ் நிறுவனம் 11 பேருக்கு வேலைவாய்ப்பை கொடுத்த நிலையில், FIN IQ நிறுவனம் 5 பேருக்கு வேலைவாய்ப்பை கொடுத்தது. இதேபோல் கன்ஸ்யூமர் டெக் நிறுவனமான AUDIFY, ஜஸ்ட்டயல், உபர், சோமேட்டோ ஆகியவையும் வேலைவாய்ப்புகளை வழங்கியது.

எண்டர்ப்ரைஸ் டெக்

எண்டர்ப்ரைஸ் டெக்

மேலும் எண்டர்ப்ரைஸ் டெக் பிரிவில் Adobe மற்றும் Atlassian ஆகியவை தலா 4 வேலைவாய்ப்புகளைக் கொடுத்தது. இந்த ப்ளேஸ்மென்ட்ல் நிப்பான் ஸ்டீல், நியூக்லியஸ் ஆபீஸ் பார்க், ஏலியன்ஸ் குரூப், சிம்பிள் மற்றும் சுசூகி மோட்டார் கார்ப் ஆகியவை புதிதாகக் கலந்துக்கொண்டது.

ஐஐடி, ஐஐஎம்

ஐஐடி, ஐஐஎம்

ஐஐஎம் அகமதாபாத்-ன் 2024 ஆம் ஆண்டின் பிஜிபி வகுப்பிற்கான கோடைகாலப் பிளேஸ்மென்ட்-ஐ 3 பிரிவுகளாக நடத்தியது குறிப்பிடத்ததக்கது. பொதுவாகவே ஐஐடி, ஐஐஎம் மாணவர்களுக்கு இந்திய நிறுவனங்களில் மட்டும் அல்லாமல் வெளிநாட்டு நிறுவனங்கள் மத்தியில் அதிகமான டிமாண்ட் இருக்கும்.

டிசிஎஸ்

டிசிஎஸ்

இந்நிலையில் ஐஐஎம் அகமதாபாத்-ன் கோடைகாலப் பிளேஸ்மென்டில் போட்டிப்போட்டுக் கொண்டு வேலைவாய்ப்பை வழங்கியது ஆச்சரியமான விஷயம் இல்லை என்றாலும், இதில் டிசிஎஸ் முதல் இடத்தைப் பிடித்துள்ளது, அதன் எதிர்கால வர்த்தகத்தையும், நிர்வாகத்தையும் மேம்படுத்தும் முயற்சியாகத் தெரிகிறது.

டிசிஎஸ் பங்குகள்

டிசிஎஸ் பங்குகள்

டிசிஎஸ் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் (நவம்பர் 9 ஆம் தேதி) 0.19 சதவீதம் வரையில் சரிந்து 3,227.50 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. 2022 ஆம் ஆண்டில் மட்டும் டிசிஎல் பங்குகள் 15.46 சதவீதம் வரையில் சரிந்து உள்ளது. 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TCS tops in IIM Ahmedabad placements with 11 offers

TCS tops in IIM Ahmedabad placements with 11 offers in summer Placement process for the PGP class of 2024
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X