டிசிஎஸ், விப்ரோ, இன்ஃபோசிஸ் நிறுவனங்களின் Q3 முடிவுகள்.. கவனிக்க வேண்டியவை என்ன!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ உள்ளிட்ட முன்னணி ஐடி நிறுவனங்கள் இன்று, தங்களது மூன்றாவது காலாண்டு முடிவுகளை வெளியிடவுள்ளன.

 

இதற்கிடையில் இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? இன்றைய பங்கு நிலவரம் என்ன?

குறிப்பாக டிசிஎஸ் நிலவரம் என்ன? இன்ஃபோசிஸ் நிலவரம் என்ன? விப்ரோ நிறுவனத்தின் நிலவரம் எப்படியுள்ளது? வாருங்கள் பார்க்கலாம்.

அஞ்சலகத்தின் அருமையான திட்டம்.. ரூ.1 லட்சத்துக்கு ரூ.39,000- மேல் வட்டி.. எப்படி..! அஞ்சலகத்தின் அருமையான திட்டம்.. ரூ.1 லட்சத்துக்கு ரூ.39,000- மேல் வட்டி.. எப்படி..!

கவனிக்க வேண்டிய காரணிகள்

கவனிக்க வேண்டிய காரணிகள்

கடந்த ஆண்டினை போலவே தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. ஊழியர்களை மூன்றாவது காலாண்டில் தான் படிப்படியாக அலுவலகம் அழைக்க தொடங்கின. ஆனால் ஓமிக்ரான் தாக்கம் மீண்டும் அதிகரித்ததால் மீண்டும் வீட்டில் இருந்தே பணிபுரிய கூறிவருகின்றன. இதற்கிடையில் முன்னணி ஐடி நிறுவனங்களின் கணிப்புகள், வருவாய் விகிதம் என்ன?அட்ரிஷன் விகிதம் என்ன? புதிய ஒப்பந்தங்களின் மதிப்பு, புதிய கையகப்படுத்தல்கள் ஏதும் உள்ளதா? என பல காரணிகளும் கவனிக்க வேண்டியவையாக உள்ளன.

கணிப்புகள்

கணிப்புகள்

எம்கே குளோபல் நிறுவனம் இன்போசிஸ் நிறுவனத்தின் வருவாய் விகிதம் 2022ம் நிதியாண்டில் 17.5 - 18% ஆக இருக்கலாம் என கணித்துள்ளது. இது தற்போது 16.5 - 17.5% என்ற நிலையில் காணப்படுகின்றது. இதே ஹெச் சி எல் டெக்னாலஜி நிறுவனத்தின் வருவாய் விகிதம் இரண்டு இலக்கில் இருக்கலாமென தெரிவித்துள்ளது. இதே விப்ரோ நிறுவனத்தின் வளர்ச்சியானது 2 - 4% இருக்கலாம் எனவும், இதே டிசிஎஸ் நிறுவனத்தின் வருவாய் விகிதம் பற்றிய கணிப்புகள் ஏதும் கொடுக்கப்படவில்லை.

வருவாய் வளர்ச்சி
 

வருவாய் வளர்ச்சி

நிபுணர்கள் டிசிஎஸ் நிறுவனத்தின் வருவாய் விகிதமானது நிலையான நாணயத்தின் அடிப்படையில் 3.5% வளர்ச்சி காணலாம் என கணித்துள்ளனர். டிசிஎஸ் நிறுவனம் கிளவுட் சேவை, டிஜிட்டல் சேவை உள்ளிட்டவற்றில் முன்னணி நிறுவனமாக இருப்பதால் வளர்ச்சி நன்றாக இருக்கலாம். இதே இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ நிறுவனத்தின் வளர்ச்சி விகிதமானது நிலையான நாணயத்தின் அடிப்படையில், முறையே 3 மற்றும் 3.3% வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எபிட்டா மார்ஜின்

எபிட்டா மார்ஜின்

எபிட்டா மார்ஜின் (EBIT) விகிதமானது மேம்பட தொடங்கலாம். பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் தங்களது மார்ஜின் விகிதங்களானது மேம்படத் தொடங்கியுள்ளதாக கூறி வருகின்றன. இதில் விப்ரோ 20 அடிப்படை புள்ளிகள் மார்ஜின் முன்னேற்றத்தினை காணலாம். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மார்ஜின் விகிதமானது 60 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மிகப்பெரிய ஒப்பந்தங்கள்

மிகப்பெரிய ஒப்பந்தங்கள்

ஐடி நிறுவனங்களை பொறுத்தவரையில் கொரோனா காரணமாக ஐடி துறையின் தேவையானது அதிகரித்து காணப்படுகின்றது. இதன் காரணமாக இந்த நிறுவனங்கள் எந்தளவுக்கு ஒப்பந்தங்களை பெற்றுள்ளன. இது வரவிருக்கும் காலாண்டுகளில் எந்தளவுக்கு இருக்கும் என்பதையும் கவனிக்க வேண்டிய விஷயங்களாக உள்ளன. இதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

நிர்வாகத்தின் கருத்து

நிர்வாகத்தின் கருத்து

வரவிருக்கும் காலாண்டுகளில் தேவை எப்படியிருக்கும் என்பது குறித்தான கண்ணோட்டம் உன்னிப்பாக கண்கானிக்கப்பட்டு வருகின்றன. 2022ம் நிதியாண்டின் அவுட்லுக், ஒப்பந்தங்கள், அட்ரிஷன் விகிதம் உள்ளிட்ட பலவற்றையும் முதலீட்டாளர்கள் கவனித்து வருகின்றனர்.

இன்றைய பங்கு விலை

இன்றைய பங்கு விலை

டாடா கன்சல்டன்ஸி (TCS) நிறுவனத்தின் பங்கு விலையானது தற்போது கிட்டதட்ட 1% குறைந்து, 3881.70 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இன்றைய உச்ச விலை 3929 ரூபாயாகும். இன்றைய குறைந்த பட்ச விலை 3872 ரூபாயாகும்.

இதே விப்ரோ (Wipro) நிறுவனத்தின் பங்கு விலையானது தற்போது கிட்டதட்ட 1% குறைந்து, 688.05 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இன்றைய உச்ச விலை 701.75 ரூபாயாகும். இன்றைய குறைந்த பட்ச விலை 683.20 ரூபாயாகும்.

இன்ஃபோசிஸ் ( Infosys) நிறுவனத்தின் பங்கு விலையானது தற்போது 1.31% அதிகரித்து, 1879.90 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இன்றைய உச்ச விலை 1889 ரூபாயாகும். இன்றைய குறைந்த பட்ச விலை 1860 ரூபாயாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TCS, wipro, infosys q3 results expectations, What to look out for

TCS, wipro, infosys q3 results expectations, What to look out for/டிசிஎஸ், விப்ரோ, இன்ஃபோசிஸ் நிறுவனங்களின் Q3 முடிவுகள்.. கவனிக்க வேண்டியவை என்ன!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X