IT ஜாம்பாவானுக்கே இந்த நிலையா.. அப்படின்னா மற்ற நிறுவனங்களுக்கு சொல்லவா வேண்டும்.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: கொரோனா தொற்றுநோயால் ஊடரங்கை நீண்ட காலம் நீடித்தால் ஐ.டி துறையில் வேலை இழப்புகள் ஏற்படக்கூடும் என்று முன்னரே நாஸ்காமின் முன்னாள் தலைவர் ஆர்.சந்திரசேகர் கூறியிருந்தார்.

ஏனெனில் ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வது நீண்ட காலத்திற்கு சாதகமான அம்சமாக இருக்குமா என்பது தெரியவில்லை. தற்போது நாட்டில் கொரோனா என்னும் அரக்கன் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளான்.

இதற்கிடையில் தற்போதைய நிலைமையிலிருந்து இன்னும் மோசமடைந்துவிட்டால், சிறிய நிறுவனங்கள் பல சிக்கல்கள் சந்திக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

பணி நீக்கம் இல்லை

பணி நீக்கம் இல்லை

மேலும் மிகப்பெரிய நிறுவனங்கள் இரண்டு காரணங்களுக்காக பணியாளர்களை பணி நீக்கம் செய்யாது. ஒன்று அவைகளுக்கு ஊழியர்களை இழக்க விருப்பம் இல்லாமல் இருக்கலாம். இரண்டாவது அவர்களிடம் ஊழியர்களுக்கு வழங்க போதுமான நிதி இருக்கலாம். அப்படியே சில கார்ப்பரேட் நிறுவனங்கள் வேலையை குறைத்தாலும், தற்காலிக ஊழியர்களை நீக்குவார்கள்.

புதிய பணியமர்த்தல் இல்லை

புதிய பணியமர்த்தல் இல்லை

ஆனால் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களையும் பதம் பார்க்க தொடங்கியுள்ளது இந்த கொரோனா வைரஸ். எப்படி என்று கேட்கிறீர்களா? பணி நீக்கம் இல்லை என்பது ஒரு புறம் மகிழ்ச்சியினை கொடுத்தாலும், புதிய பணியமர்த்தல் என்பது தற்போதைக்கு இல்லை என்று கூறியுள்ளன. அந்த வகையில் தகவல் தொழில்னுட்ப துறையை சேர்ந்த ஜாம்பவான் ஆன மைக்ரோசாப்ட் நிறுவனம் கிட்டதட்ட 46% பணியமர்த்தலில் வீழ்ச்சி கண்டுள்ளதாக கூறப்படுகிறது.

வெறும் 3 வாய்ப்புகள் தான்

வெறும் 3 வாய்ப்புகள் தான்

இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமானால் மைரோசாப்ட்டின் தொழில்முறை தொழில் வலைத்தளமான லிங்க்டின் (LinkedIn) இன்னும் மோசமாக வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் மொத்த செயல்பாட்டிற்கும் மொத்த 3 வாய்ப்புகள் மட்டுமே உள்ளதாகவும் அதன் இணையத்தின் மூலமாக அறிய முடிவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பணியமர்த்தல் குறைவு தான்

பணியமர்த்தல் குறைவு தான்

மற்றொரு தரவு தளவு இணையதளமான Thinknum அறிக்கையின் படி, சத்யா நாதெள்ளாவின் தொழில் நுட்ப நிறுவனம் கடந்த மார்ச் 22 அன்று அதன் முக்கிய தொழில் தளத்தில் 5,580 பணி வாய்ப்புகாள் உள்ளதாக பட்டியலிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது ஏப்ரல் 20 அன்று 3028 ஆக குறைந்துள்ளது. இது கிட்டதட்ட 46% வீழ்ச்சியாகும்.

முக்கிய வருமானம் போச்சு

முக்கிய வருமானம் போச்சு

இதே லிங்க்ட்இன் மார்ச் 1 அன்று 510 பணி வாய்ப்புகள் இருப்பதாக பட்டியலிட்டது. ஆனால் இது தற்போது வெறும் 3 வாப்புகள் இருப்பதாகவே காட்டுகின்றது. இந்த லிங்க்ட்இன்னின் முக்கிய வருமானம் வேலைகளை பட்டியல் இடுவதில் தான் வருகிறது. ஆனால் கொரோனாவினால் தொழில்கள் முற்றிலும் முடங்கியுள்ல நிலையில், வேலை வாய்ப்புகள் என்பது முற்றிலும் குறைவு. ஆக அதன் முக்கிய வருவாயினை இழந்துள்ளது எனலாம்.

கூகுளும் அப்படி தான்

கூகுளும் அப்படி தான்

மேலும் இந்த நெருக்கடி நிலையானது மைக்ரோசாப்டினை மட்டும் அல்ல, மற்றொரு தகவல் தொழில்னுட்ப ஜாம்பவான் ஆன கூகுள் நிறுவனமும் தனது புதிய பணியமர்த்தல் எண்ணிக்கையை குறைத்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டில் 20,000 ஊழியர்களை பணியில் அமர்த்திய கூகுள் நிறுவனம், இந்த ஆண்டு முழுவதும் பணியமர்த்தலை முடக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய பணியமர்த்தலை முடக்க திட்டம்

புதிய பணியமர்த்தலை முடக்க திட்டம்

கடந்த வாரத்தில் கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தற்போது புதிய பணியமர்த்தலை கணிசமாகக் குறைப்பதற்கான நேரம் இது என்றும் கூறியிருந்தார். ஆக கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கும் அல்லது நீடிக்கும் பட்சத்தில் நிறுவனங்களின் நிதி நிலைமை என்ன ஆகும். வேலை வாய்ப்புகள், இருக்கும் வேலைகள் என்னவாகும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

சிறு நிறுவனங்களுக்கு பிரச்சனை தான்

சிறு நிறுவனங்களுக்கு பிரச்சனை தான்

அதிலும் ஐடி துறையில் உள்ள சிறு நிறுவனங்கள் இதனை எப்படி சமாளிக்க போகின்றன. புதிய பணியமர்த்தல் ஒரு பக்கம் இருந்தாலும், இருக்கும் பணியாளர்களை எப்படி தக்க வைத்துக் கொள்ள போகின்றன. அரசு ஒரு புறம் பணி நீக்கம் செய்யாதீர்கள் என்று கூறினாலும், நிறுவனங்கள் சம்பளம் கொடுக்க முடியாமல், வருமானமும் இன்றி எப்படி தொடர்ந்து நீட்டிப்பு செய்ய முடியும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tech giant Microsoft seen nearly 46 percent drops in hiring

IT giant Microsoft and Google decided to freeze hiring for rest of the year
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X