ஒரே நேரத்தில் டெக் நிறுவனங்கள் பணிநீக்கம் செய்ய 'இது'தான் காரணம்..!!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகளாவிய பொருளாதாரம் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு வரும் நிலையில் ஒவ்வொரு நிதி நிறுவனமும் தனது நிதிநிலையை எதிர்வரும் ரெசிஷன் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக பணிநீக்கம் செய்து வருகிறது.

ஆனால் டெக் நிறுவனங்கள் மட்டும் அதிகளவில் பணிநீக்கம் செய்ய என்ன காரணம்..?

இந்திய பொருளாதாரம் குறித்து ஆச்சரியப்பட்ட அமெரிக்க நிதியமைச்சர்!இந்திய பொருளாதாரம் குறித்து ஆச்சரியப்பட்ட அமெரிக்க நிதியமைச்சர்!

டெக் நிறுவனங்கள்

டெக் நிறுவனங்கள்

இன்று ஆல்பபெட் 10000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்த நிலையில், கடந்த 3 மாதத்தில் மெட்டா, மைக்ரோசாப்ட், நெட்பிளிக்ஸ், டிவிட்டர், சேல்ஸ்போர்ஸ், ஆரக்கிள் எனப் பார்சூன் 500 பட்டியலில் இருக்கும் பெரும்பாலான டெக் நிறுவனங்கள் ஊழியர்களை அதிகளவில் பணிநீக்கம் செய்தது, இது தவிர பல முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அதிகளவிலான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

வருவாய் சரிவு

வருவாய் சரிவு

டெக் நிறுவனங்களின் வருவாய் குறைந்தது தான் அடிப்படை காரணமாக இருக்கும் நிலையில் இதற்கு காரணம் என்ன என்பது தான் முக்கியமான விஷயம். மேலும் இந்த பணிநீக்கம் இப்போது முடியாது என்றும், 2023 ஆம் ஆண்டிலும் தொடரும் என்பது தான் வருத்தமான செய்தியாக உள்ளது.

நவம்பர் மாதம்

நவம்பர் மாதம்

இந்த நவம்பர் மாதம் மட்டும் அல்லாமல் கடந்த 6 மாதத்தில் அதிகளவில் பணிநீக்கம் செய்தது டெக் மற்றும் டெக் சார்ந்த நிறுவனங்கள் தான். இதற்கு முக்கியமான காரணம் டெக் நிறுவனங்கள் ஏற்கனவே பல்வேறு பாதிப்பில் இருந்தது, இந்தப் பணிநீக்கம் மூலம் டெக் நிறுவனங்கள் பபுளில் இருந்தது விளங்குகிறது.

டெக் நிறுவனங்கள்

டெக் நிறுவனங்கள்

 

பெரும்பாலான சிறிய மற்றும் நடுத்தர டெக் நிறுவனங்கள் லாபத்தில் இயங்காமல் இருந்தது தான் இந்த அதிகப்படியான பணிநீக்கத்திற்கு முக்கியமான காரணம். இதுவே பெரிய டெக் நிறுவனங்களை எடுத்துக் கொண்டால் பெரும்பாலானவை பெரிய தொகையைக் கடனாக வைத்துக்கொண்டு இயங்கி வருகிறது அல்லது வென்சர் கேப்பிடல்-ஐ நம்பி இயங்கி வந்தது தான் முக்கியமான நெருக்கடியாக மாறியது.


உலகளவில் பணவீக்கம் அதிகரித்த காரணத்தால் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தியது. இது இரண்டு விதத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது.

வென்சர் கேப்பிடல் நிறுவனங்கள்

வென்சர் கேப்பிடல் நிறுவனங்கள்

வென்சர் கேப்பிடல் நிறுவனங்கள் அதிகளவிலான தொகையை கடன் வாங்கி முதலீடு செய்து வந்த நிலையில் இந்த வட்டி உயர்வால் சிறிய மற்றும் நடுத்தர டெக் நிறுவனங்கள் புதிய முதலீட்டை ஈர்கக முடியாமல் போனது, இதேபோல் வென்சர் கேப்பிடல் நிறுவனங்கள் லாபம் அளிக்காத நிறுவனத்தில் முதலீடுகளை திரும்ப பெற்றது.

பணிநீக்கம்

பணிநீக்கம்

இத்தகைய சூழ்நிலையில் நிறுவனத்தை காப்பாற்ற பணிநீக்கம் மட்டும் தான் ஓரே வழி. இதுவே பெரிய நிறுவனங்கள் எடுத்துக்கொண்டால் மத்திய வங்கிகளின் வட்டி குறைவாக இருந்த காரணத்தால் அதிகளவிலான கடன் பெற்று இயங்கி வந்தது.

ரெசிஷன்

ரெசிஷன்

ஆனால் பணவீக்கம் மற்றும் ரெசிஷன் அதிகரித்த நிலையில் வர்த்தகம் பாதிப்பை எதிர்கொண்டு வரும் பெரிய டெக் நிறுவனங்களுக்கு தலையில் இருக்கும் கடன் சுமை அதிகமானது. இதனால் செலவுகளை குறைக்க பணிநீக்கத்தில் இறங்கியுள்ளது.

 முதலீட்டாளர்கள்

முதலீட்டாளர்கள்

இன்று முன்னணி மற்றும் பிரபலமான முதலீட்டாளர்கள், வெற்றிபெற்ற முதலீட்டாளர் என கருதப்படும் பல முதலீட்டாளர்கள் டெக் நிறுவனத்தில் முதலீடு செய்து தான் அதிகப்படியான பணத்தைச் சம்பாதித்தனர் என்றால் மிகையில்லை. ஏன் வாரன் பபெட் கூட தற்போது டெக்னாலஜி நிறுவனங்களில் தேடி தேடி முதலீடு செய்கின்றனர்.

அளவுக்கு அதிகமான ஊழியர்கள்

அளவுக்கு அதிகமான ஊழியர்கள்

மேலும் பல முன்னணி டெக் நிறுவனங்கள் கொரோனா காலத்தில் அதிகப்படியான டிமாண்ட் இருந்த காரணத்தால் அதிகப்படியான ஊழியர்களைப் பணியில் அமர்த்தியது, ஆனால் கொரோனாவுக்குப் பின்பு டிமாண்ட் பெரிய அளவில் குறைந்த நிலையில் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தற்போது ரெசிஷன் வரும் நிலையில் பணிநீக்கம் செய்யத் துவங்கியுள்ளனர்.

2023 ரெசிஷன்

2023 ரெசிஷன்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2023 காலண்டர் ஆண்டில் 5.9 சதவீதமாக இருக்கும் எனக் கணித்துள்ளது கோல்டுமேன் சாக்ஸ். ஆர்பிஐ 7 சதவீதமாகவும், கிரிசில் 7 சதவீதமாகவும், கோல்டுமேன் சாக்ஸ் 5.9 சதவீதமாகவும், மூடிஸ் 4.8 சதவீதமாகவும் சரியும் எனக் கணித்துள்ளது.

ஏற்றுமதி

ஏற்றுமதி

இந்தியா மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் இதே போன்ற சரிவை தான் சந்திக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்த பணிநீக்கம் அடுத்த வருடம் வரையில் தொடரும் என பல தரப்பினர் கணித்துள்ளனர். மேலும் டெக் நிறுவனங்களில் மட்டும் இருக்கும் பணிநீக்கம் அடுத்த சில மாதத்தில் ஏற்றுமதி சார்ந்த துறையிலும் இருக்கும் என்ற கணிப்பும் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

tech layoffs are happening around the world; Upcoming months how it will be

tech layoffs are happening around the world; Upcoming months how it will be
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X