Philips கொடுத்த அப்டேட்.. 6000 பேருக்கு பிரச்சனையா.. செய்வதறியாது தவிக்கும் ஊழியர்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்வதேச அளவில் ஐடி துறை உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் பணி நீக்க நடவடிக்கையானது பரவலாக காணப்பட்டது. இந்த நடவடிக்கை இனியும் தொடரலாம் என்ற அச்சம் இருந்து வருகின்றது.

 

இதில் அச்சமூட்டும் ஒரு விஷயம் என்னவெனில் ஆரம்பத்தில் டெக் துறையில் தொடங்கிய இந்த பணி நீக்கமானது, தற்போது பரவலாக பற்பல துறைகளிலும் தொடருகின்றது.

IBM அறிவிப்பால் ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி.. 3900 பேர் பணிநீக்கம்.. காரணம் என்ன தெரியுமா..?IBM அறிவிப்பால் ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி.. 3900 பேர் பணிநீக்கம்.. காரணம் என்ன தெரியுமா..?

பணி நீக்கம் செய்ய திட்டம்

பணி நீக்கம் செய்ய திட்டம்

ஹெல்த் டெக்னாலஜி நிறுவனமான பிலிப்ஸ் நிறுவனம் சுமார், 6000 பேரை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டில் நிறுவனம் பணி நீக்கம் செய்த நிலையில், தற்போது இரண்டாவது கட்ட பணி நீக்க நடவடிக்கைக்கு தயாராகியுள்ளது. இந்த இரண்டாவது கட்ட பணி நீக்க நடவடிக்கையானது, சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் வந்துள்ளது.

இரண்டாவது ரவுண்ட் பணி நீக்கம்

இரண்டாவது ரவுண்ட் பணி நீக்கம்

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 4000 பேரை பணி நீக்கம் செய்த நிலையில், இந்த அறிவிப்பானது ஊழியர்கள் மத்தியில் பெரும் கவலையினை ஏற்படுத்தியுள்ளது.

இது நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சியில் தாக்கத்தினை எதிர்கொண்டு வரும் நிலையில், அதன் மறுசீரமைப்பு நடவடிக்கையினை கையில் எடுத்துள்ளது. அந்த செலவு குறைப்பு நடவடிக்கையில் பணி நீக்கமும் உள்ளது.

பெரும் அதிர்ச்சி
 

பெரும் அதிர்ச்சி

இது குறித்து சமீபத்தியில் பிலிப்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ராய் ஜேக்கப்ஸ், 2025ம் ஆண்டிற்குள் பணியாளர்களை குறைப்பது அவசியமான ஒன்று என கூறியிருந்தார்.
இதற்கிடையில் நிறுவனம் ஏற்கனவே 4000 பேரை பணி நீக்கம் செய்த நிலையில், 3 மாதங்களுக்கு பிறகு இப்படி ஒரு அறிவிப்பானது வந்துள்ளது. இது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

குறைந்த வருவாய்

குறைந்த வருவாய்

ஆம்ஸ்டர்டாமை தளமாகக் கொண்ட நிறுவனம் 2022ம் ஆண்டின் 4வது காலாண்டில் 105 மில்லியன் யூரோக்கள் இழப்பினை கண்டுள்ளது. இதே கடந்த ஆண்டில் 106 பில்லியன் யூரோக்கள் நிகர இழப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கிடையில் தான் பிலிப்ஸ் நிறுவனம் தொடர்ந்து பணி நீக்க நடவடிக்கையினை வெளியிட்டுள்ளது.

வணிகம் பாதிப்பு

வணிகம் பாதிப்பு

உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமான பிலிப்ஸ் நிறுவனம், கொரோனா காரணமாக ஏற்பட்ட அழுத்தம், சப்ளை செயின்கள், பணவீக்கம், சீனாவின் கொரோனா அழுத்தம், ரஷ்யா - உக்ரைன் பிரச்சனை என பல காரணிகளுக்கு மத்தியில், இதன் உலகம் முழுக்க பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளது. இதன் காரணமாக நெதர்லாந்து நாட்டை சேர்ந்த பிரபல நிறுவனமான பிலிப்ஸ் நிறுவனம், உலகம் முழுக்க சுமார் 100 கிளைகளில் நிறுவியுள்ளது.

வேறு வழியில்லை

வேறு வழியில்லை

போட்டிகள் அதிகரித்து வரும் சூழலில் நிறுவனத்தினை சீரமைக்க இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியமான ஒன்று. இது தவிர்க்க முடியாத ஒன்று. உலகின் முன்னணி நிறுவனங்களான கூகுள், அமேசான், மெட்டா, மைக்ரோசாப்ட், ட்விட்டர் என பல நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இந்த நடவடிக்கையானது தற்போது உற்பத்தி துறையிலும் பரவத் தொடங்கியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tech layoffs: Philips plans to layoff 6000 jobs just months after laying off 4000 employees

Tech layoffs: Philips plans to layoff 6000 jobs just months after laying off 4000 employees
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X