டெக் மஹிந்திரா சிஇஓ சிபி குர்னானி செம அறிவிப்பு.. ஐடி ஊழியர்கள் கொண்டாட்டம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் 5வது பெரிய ஐடி சேவை நிறுவனமான டெக் மஹிந்திரா ஊழியர்கள் பக்கம் ஆதரவாக நின்று முன்லைட்டிங்-ஐ ஆதரிக்கிறது.

இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களான டிசிஎஸ், விப்ரோ, Happiest minds ஆகியவை மூன்லைட்டிங்-ஐ வெளிப்படையாக எதிர்த்து வரும் நிலையில் முதன் முதலாக இன்போசிஸ் ஊழியர்கள் வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காக மூன்லைட்டிங்-ஐ ஏற்பதாக அறிவித்தது, ஆனால் இதுவரையில் அதற்கான கொள்கை மாற்றங்கள் அளவில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் டெக் மஹிந்திரா நிறுவனத்தின் சிஇஓ-வே முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

அந்த பெண்ணுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும்.. தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா ட்விட் அந்த பெண்ணுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும்.. தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா ட்விட்

மூன்லைட்டிங்

மூன்லைட்டிங்

இந்திய நிறுவனங்கள் மூன்லைட்டிங்-ஐ கடுமையாக எதிர்த்து வரும் நிலையில் 5வது பெரிய ஐடி சேவை நிறுவனமான டெக் மஹிந்திரா நிறுவனம் மூன்லைட்டிங்-கிற்கு எவ்விதமான எதிர்ப்பும் அறிவிக்காமல், அனைத்து ஊழியர்களும் ப்ரீலான்ஸ் பணிகளை மேற்கொள்ளலாம் என டெக் மஹிந்திரா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

டெக் மஹிந்திரா

டெக் மஹிந்திரா

இதுமட்டும் அல்லாமல் டெக் மஹிந்திரா நிறுவனத்தின் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குனர் சி பி குர்னானி, எங்களுடைய நிறுவனம் ஒரு டிஜிட்டல் நிறுவனம், பழமையான நிறுவனம் இல்லை என்று தெரிவித்தார்.

 சி பி குர்னானி
 

சி பி குர்னானி

இதனால் ஒருவர் தனது முழுத் திறனை காட்ட விரும்புவதை நாங்கள் ஆதரிக்கிறோம், ஆனால் வேறு நிறுவனத்தின் பணியாற்றும் முன்பு அனுமதி வாங்க வேண்டும் என்பதை மட்டுமே நாங்கள் ஊழியர்கள் மத்தியில் முன்வைக்கிறோம் எனச் சி பி குர்னானி தெரிவித்துள்ளார்.

முன் அனுமதி

முன் அனுமதி

இதனால் ஊழியர்கள் இதுபோன்ற நிகழ்வுகளை டெக் மஹிந்திரா நிர்வாகத்திடம் ஒருபோதும் மறைக்கக்கூடாது என்று கூறிய குர்னானி, ஆனால் முன் அனுமதியின்றி ஊழியர்கள் மூன்லைட்டிங்-ல் இறங்கினால், கட்டாயம் அதை நிர்வாகத்தால் சகித்துக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

20000 ஊழியர்கள்

20000 ஊழியர்கள்

மேலும் டெக் மஹிந்திரா தலைமை நிர்வாக அதிகாரி சிபி குர்னானி அடுத்த 12 மாதத்தில் புதிதாக 20000 ஊழியர்களைப் பணியில் சேர்க்க திட்டமிட்டு உள்ளதாக அறிவித்தார். தற்போது டெக் மஹிந்திரா-வின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 1,64000 ஆக உள்ளது, இது அடுத்த ஒரு வருடத்தில் 1,84,000 ஆக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

 செப்டம்பர் காலாண்டு

செப்டம்பர் காலாண்டு

டெக் மஹிந்திரா நிறுவனத்தின் காலாண்டு முடிவில் செப்டம்பர் உடன் முடிந்த 3 மாதத்தில் 5877 புதிய ஊழியர்களைச் சேர்த்துள்ளது. ஆனால் ஜூன் காலாண்டை ஒப்பிடுகையில் இதன் எண்ணிக்கை 6,862 ஆக உயர்ந்துள்ளது, இதன் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 1,63,912 ஆக உள்ளது.

வெளியேற்ற விகிதம்

வெளியேற்ற விகிதம்

இதே காலாண்டில் டெக் மஹிந்திராவின் ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் 20 சதவீதமாகக் குறைந்துள்ளது, ஜூன் காலாண்டில் இதன் அளவு 22 சதவீதமாக இருந்தது, கடந்த ஆண்டை காட்டிலும் டெக் மஹிந்திரா அட்ரிஷன் விகிதம் குறைந்துள்ளது.

பிற ஐடி சேவை நிறுவனங்கள்

பிற ஐடி சேவை நிறுவனங்கள்

இன்போசிஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் 28.4 சதவீதத்தில் இருந்து 27.1 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதேபோல் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதம் 23.8 சதவீதமாக உள்ளது, இதுவே விப்ரோ நிறுவனத்தில் 23 சதவீதம், டிசிஎஸ் நிறுவனத்தில் 21.5 சதவீதமாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tech Mahindra supports moonlighting with full heart; Will add 20000 new employees: CEO CP Gurnani

Tech Mahindra supports moonlighting with full heart; Will add 20000 new employees: CEO CP Gurnani
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X